வாட்ஸ் அப் (Whats App) பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு – Chat Backup அம்சம் நீக்கம்!!
வாட்ஸ் அப் நிறுவனம் தனது செயலியை புதுப்பிக்கும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி வருகிற அப்டேட்டில் Chat Backup என்னும் அம்சத்தை நீக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பயனர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
வாட்ஸ் அப் Chat Backup:
தகவல் பரிமாறுவதற்கு மிக முக்கிய தளமாக இருந்து வருகிறது வாட்ஸ் அப். வாட்ஸ் அப் நிறுவனம் தனது பயனர்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் தொடர்ந்து தனது தளத்தை மேம்படுத்தி பல அம்சங்களை வழங்கி வருகிறது. இதன் காரணமாக வாட்ஸ் அப் செயலி அதிக பயனர்களால் கவரப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது வாட்ஸ் அப் செயலி குறித்து ஓர் அதிர்ச்சிகரமான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி விரைவில் வாட்ஸ் அப் நிறுவனம் Chat Backup அம்சத்தை நீக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Airtel பயனர்களுக்கு அசத்தல் அறிவிப்பு – 50 GB டேட்டாவுடன் கூடிய சலுகை!
அதன்படி வாட்ஸ் அப் செயலி தற்போது தனது தளத்தை புதுப்பிக்கும் வேலைகளில் மும்மரமாக இருந்து வருகிறது. இதை அடுத்து வருகிற புதிய அப்டேட்டில் Chat Backup அம்சம் நீக்கப்பட்டிருக்கும் என்றும் இது ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டும் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ், Backup அம்சத்தில் இருந்து நீக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. Chat Backup என்பது பயனர்கள் தங்கள் கணக்கு மூலம் செய்த உரையாடல்கள், போட்டோக்கள் அனைத்தையும் சேமித்து வைப்பதே.
TN Job “FB Group” Join Now
இதனை பயனர்கள் கூகுள் டிரைவில் சேமித்து வைத்து வருகின்றனர். பயனர்கள் தனது மொபைலை மாற்றும் போது Chat Backup மூலம் தங்களது பழைய உரையாடல்களை மீண்டும் பெற்று வருவர். தற்போது சேமித்து வைக்கும் தளத்தை மாற்றியமைப்பதற்காக இந்த நடவடிக்கையை வாட்ஸ் அப் நிறுவனம் மேற்கொள்ள உள்ளதாக கூறப்பட்டு வருகிறது. இந்த தகவல் வாட்ஸ் அப் பயனர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதற்கான முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.