#ENGvsNZ டெஸ்ட் தொடர் வெற்றி – தரவரிசையில் முதலிடம் பிடித்த நியூஸிலாந்து!
இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து அணிகள் 2 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரை விளையாடியது. இதில் நியூஸிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி அசத்தியது. மேலும் உலக டெஸ்ட் தரவரிசை பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இங்கிலாந்து vs நியூஸிலாந்து:
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூஸிலாந்து அணி 2 டெஸ்ட் தொடர்களில் விளையாட திட்டமிடப்பட்டு இருந்தது. இந்த இரு அணிகளுக்குமான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. வெற்றியை தீர்மானிக்கும் போட்டியான இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த 10ம் தேதி அன்று தொடங்கியது. இந்த போட்டியில் நியூஸிலாந்து அணி வீரர்கள் பலர் காயம் காரணமாக விலகியுள்ளனர். இதன் காரணமாக நியூஸிலாந்து அணி கேப்டனாக டாம் லதாம் செயல்பட்டார்.
‘உயிர் காக்கும் உன்னத சேவை’ – உலக ரத்த தான தினம் இன்று!
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸை சிறப்பாக விளையாடிய இங்கிலாந்து அணி 303 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இங்கிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக லாரன்ஸ் 81* மற்றும் பர்ன்ஸ் 81 ரன்களை குவித்தனர். இதை அடுத்து தனது முதல் இன்னிங்ஸை துவக்கிய நியூஸிலாந்து அணி 388 ரன்களை குவித்து ஆட்டமிழந்தது. நியூஸிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக எங் 82 மற்றும் டெய்லர் 80 ரன்களை குவித்தனர்.
85 ரன்கள் பின்தங்கிய நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை துவக்கிய இங்கிலாந்து அணி நியூஸிலாந்து அணி பந்துவீச்சில் சுருண்டது. முதல் இன்னிங்சில் சிறப்பாக விளையாடிய இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் சொதப்பி 122 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இரண்டாவது இன்னிங்சில் மார்க் வுட் அதிகபட்சமாக 29 ரன்களை குவித்தார். சிறப்பாக பந்து வீசி நியூஸிலாந்தின் வாக்னர் மற்றும் ஹென்றி தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர்.
TN Job “FB Group” Join Now
37 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூஸிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட்டுகளை இழந்து 41 ரன்கள் குவித்து தனது வெற்றியை பதிவு செய்து அசத்தியது. இதை அடுத்து நியூஸிலாந்து அணி டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் நியூஸிலாந்து அணி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறி அசத்தியது.