தமிழகத்தின் அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் – வானிலை அறிக்கை!
தமிழகத்தில் அடுத்து வரும் 5 நாட்களுக்கு காற்றழுத்த தாழ்வு காரணமாக அதிக வெப்பநிலை நிலவும் வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
வானிலை அறிக்கை:
வடக்கு வங்ககடல் அதனை ஒட்டிய ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடற்கரை ஒட்டி உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி அதே பகுதியில் நீடிக்கிறது. அடுத்த 48 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற கூடும்.
தமிழகம் முழுவதும் பள்ளிகள் மூடல் எதிரொலி – குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கை உயர்வு!
இதன் காரணமாக, தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு (12.06.2021 முதல் 16.06.2021 வரை) பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையும், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய ஓரிரு மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஓரிரு உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான மழையும் பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை,
அடுத்த 24 மணி நேரத்திற்கு (12-06-21) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
TN Job “FB Group” Join Now
அதற்கு அடுத்த 24 மணி நேரத்திற்கு (13-06-21) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை அளவு (சென்டிமீட்டரில்):
சோலையார் (கோவை) 2, சின்னக்கல்லார் (கோவை), அவலாஞ்சி (நீலகிரி), வால்பாறை (கோவை), தேவலா (நீலகிரி), வால்பாறை வட்டாட்சியர் அலுவலகம் (கோவை) தலா 1.
மீனவர்களுக்கான எச்சரிக்கை :
வங்கக் கடல் பகுதிகள்:
12.06.2021 முதல் 14.06.2021 வரை : வடக்கு மற்றும் மத்திய வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் அவ்வப்போது 65 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
12.06.2021 முதல் 15.06.2021 வரை : தெற்கு வங்கக் கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
அரபிக்கடல் பகுதிகள்:
12.06.2021 முதல் 16.06.2021 வரை: கேரளா, கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் அவ்வப்போது 65 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
12.06.2021 முதல் 16.06.2021 வரை: அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் அவ்வப்போது 60 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.