அரசு நிறுவனங்களில் 95% வேலைகள் உள்ளூர் மக்களுக்கு ஒதுக்கீடு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

0
அரசு நிறுவனங்களில் 95% வேலைகள் உள்ளூர் மக்களுக்கு ஒதுக்கீடு - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
அரசு நிறுவனங்களில் 95% வேலைகள் உள்ளூர் மக்களுக்கு ஒதுக்கீடு - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
அரசு நிறுவனங்களில் 95% வேலைகள் உள்ளூர் மக்களுக்கு ஒதுக்கீடு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு நிறுவனங்கள், பெருநிறுவனங்கள், சங்கங்கள் மற்றும் நிறுவனங்களில் உள்ள 95 சதவீத வேலைகள் உள்ளூர் மக்களுக்கு மட்டுமே ஒதுக்கீடு செய்யப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

அரசு வேலைகள்

இன்றைய கால கட்டத்தில் அரசு வேலை கிடைப்பது என்பது அரியதொரு விஷயமாக இருந்து வருகிறது. ஏனென்றால் அரசு வேலைக்காக போட்டியிடும் நபர்களின் எண்ணிக்கை அதிகரிக்க, மறுபுறத்தில் அரசுத்துறை நிறுவனங்கள் அனைத்தும் தனியார் மயமாக்கப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக ஒரு அரசு வேலையில் 100 காலியிடங்கள் இருக்கிறது என்றால், அதற்கு போட்டியிடுபவர்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் இருக்கிறது. இப்படி போட்டிகள் அதிகரிக்க, அரசு வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை சரிவடைந்து வருகிறது.

சென்னை மின்சார ரயிலில் பயணிப்போருக்கு முக்கிய அறிவிப்பு – பிப்.22ம் தேதி இயங்காது!

இந்த நிலையில் அனைத்து அரசு நிறுவனங்கள், பெருநிறுவனங்கள், சங்கங்கள் மற்றும் நிறுவனங்களில் உள்ள 95 சதவீத வேலைகள் உள்ளூர் வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்படும் என்று தெலுங்கானா மாநில அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது குடியரசுத் தலைவரின் உத்தரவின்படி, அரசு நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப, உள்ளூர் இளைஞர்களுக்கு 95 சதவீத வேலைகளை ஒதுக்கீடு செய்ய மாநில அரசு முடிவு செய்துள்ளது.

பிப்.21 (நாளை) முதல் பள்ளிகள் திறப்பில் புதிய மாற்றங்கள் – மாநில அரசு அறிவிப்பு!

அந்த வகையில், தெலுங்கானா பொது வேலைவாய்ப்பு (உள்ளூர் பணியாளர்களின் அமைப்பு மற்றும் நேரடி ஆட்சேர்ப்பு ஒழுங்குமுறை) ஆணை, 2108ன் படி, மாநில மற்றும் உள்ளூர் அதிகாரிகளின் நேரடி ஆட்சேர்ப்பு பதவிகளில், உள்ளூர் மக்களுக்கு ஆதரவாக 95 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் முதன்மை நோக்கத்துடன் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இளநிலை உதவியாளர் மற்றும் துணை ஆட்சியர் மற்றும் அதற்கு இணையான பதவிகள் வரையுள்ள 95% பணிகளில் உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட இருப்பதாக அதிகாரப்பூர்வ குறிப்பேடு தெரிவித்துள்ளது.

இப்போது தெலுங்கானா மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்கள், பெருநிறுவனங்கள், சங்கங்கள் மற்றும் பிற நிறுவனங்களில், உள்ளூர் விண்ணப்பதாரர்களுக்கு 95% இட ஒதுக்கீடு செய்வதற்கு ஆதரவாக, சம்பந்தப்பட்ட அமைப்புகளின் வாரியங்கள் சேவை மற்றும் ஆட்சேர்ப்பு விதிகளில் உள்ள விதிமுறைகளை இணக்க அறிக்கைகளாக மாற்றி, அவற்றை அனைத்து துறைகளின் செயலாளர்களுக்கும் பிப்ரவரி 23 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here