மாவட்டத்தில் 896 கட்டுப்பாட்டு பகுதிகள் – மாவட்ட நிர்வாகம் தகவல்!
தமிழகம் முழுவதும் கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக கட்டுப்பாட்டு பகுதிகளில் அதிக பாதுகாப்பு மேற்கொள்ளப்படுகிறது. அந்த வகையில் சென்னை நகரின் கட்டுப்பாட்டு பகுதிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார்.
கட்டுப்பாட்டு பகுதிகள்:
மத்திய அரசு கொரோனா தொற்று பரவல் காரணமாக மாநில அரசுகளுக்கு தீவிர அறிவுறுத்தல்களை தெரிவித்துள்ளது. மேலும், மாநில அரசுகளும் கொரோனா தொற்றை முற்றிலும் கட்டுக்குள் கொண்டு வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. தமிழகத்தில் பாதிப்பு நிலை தற்போது கட்டுக்குள் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை தமிழகத்தில் 1,653 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
கூட்டுறவுத்துறையில் பணியிடங்களுக்கு மீண்டும் நேர்காணல் – அமைச்சர் தகவல்!
தமிழகத்தில் அதிக பாதிப்பு பதிவாகி வரும் மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் 204 பேருக்கு நேற்று மட்டும் தொற்று உறுதி செய்யட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், சென்னையில் கரோனா தொற்று அதிகமுள்ள 896 தெருக்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 20 தெருக்களில் 5 பேருக்கு மேலும், 166 தெருக்களில் 3 பேருக்கு மேலும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
TN Job “FB
Group” Join Now
மேலும், சென்னையில் அதிகபட்சமாக அண்ணாநகர் மண்டலத்தில் 203 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி அவர்கள் மக்களுக்கான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, வர இருக்கும் பண்டிகை காலங்களில் மக்கள் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.