நடப்பு நிகழ்வுகள் – 8 செப்டம்பர் 2023

0
நடப்பு நிகழ்வுகள் - 8 செப்டம்பர் 2023
நடப்பு நிகழ்வுகள் - 8 செப்டம்பர் 2023
நடப்பு நிகழ்வுகள் – 8 செப்டம்பர் 2023

தேசிய செய்திகள்

மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகளை மேம்படுத்துவதற்கான திட்டத்திற்கு 9,400 கோடி மத்திய அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. 

  • மின்கல(Battery) ஆற்றல் சேமிப்பு அமைப்புகளை (BESS) மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறு இடைவெளிகளை அதிகரிப்பதன் நிதியுதவிக்கான (VGF) திட்டத்திற்கு மத்திய அரசாங்கம் செப்டம்பர் 06 அன்று ஒப்புதல் அளித்துள்ளது. 
  • இந்தத் திட்டமானது 2030-31 ஆம் ஆண்டிற்குள் 40 சதவீத நிதியுதவியுடன் கிட்டத்தட்ட 4,000 மெகா வாட் திறனடங்கிய BESS திட்டங்களை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு இந்த திட்டமானது வடிவமைக்கப்பட்டுள்ளது என மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் அறிவித்துள்ளார். இது நாட்டின் மின்கலம் மற்றும் மின்சாரம் தொடர்பான பல்வேறு சிக்கல்களை கலைவதை முக்கியம் நோக்கமாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஒரு வாரம் ஒரு ஆய்வகம் என்ற திட்டமானது CSIR இல் நடத்த திட்டம்.

  • அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின்(CSIR) வளாகத்தில் ஒரு வாரம் ஒரு ஆய்வகம் என்ற முக்கிய முன்னெடுப்பு திட்டமானது 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
  • நாடு முழுவதும் பரவியுள்ள கிட்டத்தட்ட 37 CSIR ஆய்வகங்கள் ஒவ்வொன்றும், அவற்றின் சாதனைகள் மற்றும் ஆராய்ச்சி முடிவுகளை வெளிப்படுத்துவதையும் அதன்படி பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டு தரப்படுத்துவதையும் நோக்கமாக கொண்டு இந்த முன்னெடுப்பானது  மேற்கொள்ளப்பட்டுள்ளது.

2023 பாரத் ட்ரோன் சக்தி பயிற்சியானது ஹிந்தன் விமானதளத்தில் நடத்த திட்டமிட்டுள்ளது.

  • இந்திய விமானப்படை(IAF) மற்றும் இந்தியாவின் ஆளில்லா விமானங்கள்(Drone) கூட்டமைப்பு ஆகியவை இணைந்து 2023 ஆம் ஆண்டிற்கான பாரத் ட்ரோன் சக்தி பயிற்சியை உத்தரபிரதேச மாநிலத்தின் காஜியாபாத்தில் அமைந்துள்ள ஹிந்தன் இந்திய விமானப்படை தளத்தில் செப்டம்பர்  25 ஆம் தேதி முதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
  • இந்தியாவில் ராணுவத்திலும் குடிமக்கள் பகுதிகளிலும் ஆளில்லா விமானங்களின் பயன்பாடு அதிகரித்து வருவதாகவும் இந்த எஸ்பியோ அல்லது பயிற்சியானது ஆளில்லா விமானங்கள் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை மேம்படுத்துவதையும் நோக்கமாக கொண்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது என மத்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் 2030 ஆம் ஆண்டிற்குள் உலகளாவிய ட்ரோன் மையமாக மாறுவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை இந்த நிகழ்வு ஒரு முக்கிய பகுதியாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச செய்திகள்

48ஆவது டொராண்டோ சர்வதேச திரைப்பட விழா கனடாவில் தொடக்கம்.

  • 48ஆவது சர்வதேச டொராண்டோ திரைப்பட விழாவானது(TIFF) செப்டம்பர் 07 ஆம் தேதியில் கனடாவில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விழாவானது செப்டம்பர் 07 ஆம் தேதி முதல் செப்டம்பர் 17ம் தேதி வரை நடைப்பெறும் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 
  • இந்த விழாவில் இந்திய மத்திய அமைச்சர் பிருதுல் குமார் தலைமையில் பங்கேற்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவின் ஆக்கப்பூர்வமான மற்றும் தொழில்நுட்ப வலிமையை உலக அரங்கிற்கு வெளிப்படுத்தவும் முக்கிய மையமாக இந்த விழாவானது அமையும் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

XRISM என்ற ஆராய்ச்சி செயற்கைக்கோளை ஜப்பான் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.

  • பிரபஞ்சம் உருவான விதம் மற்றும் விண்வெளி நேரத்தின் பரிணாமத்தை அவிழ்ப்பதற்கான முக்கிய புதிய ஆராய்ச்சி செயற்கைக்கோளை(XRISM) ஜப்பான் விண்வெளி நிறுவனமானது வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.
  • இது எக்ஸ்-ரே இமேஜிங் மற்றும் ஸ்பெக்ட்ரோஸ்கோபி மிஷன் (XRISM) செயற்கைக்கோள் மற்றும் முக்கியமாக நிலவினை ஆய்வு செய்வதற்கான லேண்டர்(SLIM) ஆகியவற்றை கொண்டு H2A ராக்கெட் மூலம் செப்டம்பர் 06 அன்று காலை 8.42 மணிக்கு ககோஷிமா நகரத்தில் உள்ள தனேகாஷிமா விண்வெளி மையத்திலிருந்து இந்த விண்கலமானது ஏவப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் XRISM என்பது 2016 ஆம் ஆண்டில் ஏவப்பட்ட ஒரு JAXA விண்கலமான Hitomi சேவையின் மறுகட்டமைப்பு என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

உக்ரைன் நாட்டின் பாதுகாப்பு அமைச்சராக ருஸ்டெம் உமெரோ தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

  • 18 மாதங்களுக்கு முன்பு ரஷ்யாவின் படையெடுப்பிற்குப் பிறகு பாதுகாப்பு துறையின் மிகப்பெரிய சர்ச்சைக்குரிய இடத்தை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ருஸ்டெம் உமெரோ நாட்டின் மத்திய பாதுகாப்பு அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக உக்ரைனின் பாராளுமன்றம் கடந்த செப்டம்பர் 6 அன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.
  • 41 வயதான இவர் ஒலெக்ஸி ரெஸ்னிகோவ் என்பவருக்குப் பதிலாக இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் மேலும் கடும் போர் நிலவும் நாட்டின் பிரச்சனை சூழலை இவர் தணிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுவதாக பல்வேறு பாதுகாப்பு துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

மாநில செய்திகள்

பராக் பள்ளத்தாக்கில் 750 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அசாம் மாநில முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார்.

  • அசாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, செப்டம்பர் 7 ஆம் தேதி தொடங்கும் தனது இரண்டு நாள் பயணத்தின் போது அம்மாநிலத்தில் உள்ள முக்கிய மேம்பாட்டுக்கான பராக் பள்ளத்தாக்கில் கிட்டத்தட்ட 750 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள பல்வேறு மேம்பாட்டு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.
  • 58 கோடி மதிப்பளவில் சில்சார்-ஃபுலேர்டல் பகுதியில் பராக் ஆற்றின் மீது அமைக்கப்பட்டுள்ள பாலம், சோனாய் – துங்ரிபார் சாலையில் 14 கோடி ரூபாய் மதிப்புள்ள பாலம் மற்றும் இட்கோலா காட் பகுதிக்கு அருகே துத்பதியை சில்சார் இணைக்கும் பாரக் ஆற்றின் மீது ரூ. 87 கோடி திப்பிலான பல்வேறு திட்டங்களானது இதில் முக்கியமான மேம்பாட்டு திட்டங்கள் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

மஹாராஷ்டிராவில் உலகளாவிய ஃபின்டெக் திருவிழாவின் 4வது பதிப்பானது நடைபெறுகிறது.

  • மகாராஷ்டிரா தலைநகரமான மும்பையில் செப்டம்பர் 06 அன்று உலகளாவிய ஃபின்டெக் திருவிழாவின் 4வது பதிப்பானது ஃபின்டெக் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் பிரச்சினைகளை கலைவதை நோக்கமாக கொண்டு நடைபெற்றுள்ளது. இதில் சிறப்பு அழைப்பாளராக மத்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
  • ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்கள் அதன் உரிம நிபந்தனைகளால் நிர்ணயிக்கப்பட்ட எல்லைக்குள் செயல்பட வேண்டும் என்றும் தரவு தனியுரிமை மீறல்கள், நெறிமுறையற்ற வணிக நடத்தை ஆகியவற்றின் மூலம் ஏற்படும் சிக்கல்களை கலைவதை நோக்கமாக கொண்டு இந்த பாதிப்பானது நடைபெற்றுள்ளதாகும்.

ரூ.837 கோடி ரூபாய் மதிப்புள்ள இணைய பாதுகாப்பு முன்னெடுப்பு திட்டத்திற்கு மகாராஷ்டிரா ஒப்புதல் அளித்துள்ளது.

  • மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிகரித்து வரும் சைபர் குற்றங்களை தடுப்பதற்காக கிட்டத்தட்ட 837 கோடி ரூபாய் மதிப்பிலான இணையத்திற்கான குற்ற நடவடிக்கைகளிலிருந்து பாதுகாப்பை மேற்கொள்வதற்கான திட்டத்திற்கு மகாராஷ்டிர மாநில அமைச்சரவையானது செப்டம்பர் 06 2023 அன்று ஒப்புதல் அளித்துள்ளது. 
  • குடிமக்கள் சைபர் கிரைம் மீது புகார்களை பதிவு செய்ய 24 மணி நேர அவசர சேவைகளை வழங்கக்கூடிய அமைப்பு மற்றும் அதில் பதிவேற்றக்கூடிய புகார்களை விரைந்து முடிப்பதற்கான வசதிகளை செயல்படுவதை நோக்கமாக கொண்டு இந்த திட்டமானது வடிவமைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீரட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தமானது மேற்கொள்ளபப்ட்டுள்ளது.

  • உத்தரபிரதேச ஜல் நிகாம், தூய்மையான கங்கைக்கான தேசிய பணி ஆணையம்(NMCG) மற்றும் மீரட்டின் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்(STP) ஆகியாயவைகளுக்கு இடையே ஒரு முத்தரப்பு ஒப்பந்தமானது மேற்கொள்ளப்பட்டுள்ளது
  • இந்த திட்டமானது “ஹைப்ரிட் ஆன்யூட்டி பிபிபி” என்ற ஒரு புதிய முறையில், கிட்டத்தட்ட ரூ. 369.74 கோடி செலவில் 2025 ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திசைதிருப்பல் மற்றும் இடைமறிப்பு(I&D) கட்டமைப்புகளை மேம்படுத்துதல், I&D நெட்வொர்க் உருவாக்கல் மற்றும் மீரட் நகரில் நிலவும் கழிவுநீர் பிரச்சனைகள் மற்றும் நதியில் ஏற்படும் கழிவுநீர் மாசுபாட்டையும் குறைப்பதையும் முக்கிய நோக்கமாக கொண்டு இந்த புரிந்துணர்வு ஒப்பந்தமானது மேற்கொள்ளப்பட்டுள்ளதாகும்.

தெலுங்கானா அரசாங்கமானது மாநில நலப் பள்ளிகளில் பிரெஞ்சு மொழிக்கான ஒரு முன்னெடுப்பை தொடங்கியுள்ளது.

  • தெலுங்கானா அரசாங்கமானது இந்தியாவில் உள்ள பிரெஞ்சு நிறுவனத்துடன்(IFI) இணைந்து, தெலுங்கானா பழங்குடியினர் நல குடியிருப்பு கல்வி நிறுவனங்கள் சங்கம் (TTWREIS) மற்றும் தெலுங்கானா சமூக நல குடியிருப்பு கல்வி நிறுவனங்கள் சங்கம் (TSWREIS) மூலம் இயக்கப்படும் முக்கிய மாநில பள்ளிகளில் “பிரெஞ்சு மொழியை” அறிமுகப்படுத்தியுள்ளது.
  • மாணவர்களிடையே மொழி கற்றல் மற்றும் அதிலும் முக்கியமாக கலாச்சார புரிதலை ஊக்குவிக்கவும் அதன் மூலம் அவர்களின் பன்முக மொழித்திறனை அதிகரிப்பதையும் நோக்கமாக கொண்டு இந்த திட்டமானது மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெலுங்கானா மாநில அரசாங்கமானது தெரிவித்துள்ளது.

நியமனங்கள்

சொனாட்டா அமைப்பின் நிறுவன மேம்பாட்டின் தலைவராக ஷர்மிளா ஷெரிகர் நியமனம்.

  • உலகின் முன்னணி நவீனமயமாக்கல் பொறியியல் நிறுவனமான சொனாட்டா மென்பொருள் அமைப்பின் கார்ப்பரேட் மேம்பாட்டின் தலைவராகவும் நிறுவன மூத்த துணைத் தலைவராகவும் ஷர்மிளா ஷெரிகரை நியமித்துள்ளதாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செப்டம்பர் 2023 அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.
  • சொனாட்டாவில் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக துறை அனுபவம் கொண்ட இவர் பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் நிறுவன மேம்படுத்தலை மேற்கொள்ளுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருதுகள்

2023 ஆம் ஆண்டின் விருந்தோம்பல் கல்விக்கான TIMES பெங்கால் ஐகான் விருதை NIPS இயக்குனர் டாக்டர் விவேக் பெற்றுள்ளார்.

  • 2023 ஆம் ஆண்டிற்கான விருந்தோம்பல் கல்விக்கான TIMES பெங்கால் ஐகான் விருதை மேற்கு வங்கத்தின் மாநில விருந்தோம்பல் கல்வியில் முன்னணியில் இருக்கும் நிப்ஸ் ஹோட்டல் மேலாண்மை நிறுவனமானது பெற்றுள்ளதாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.
  • இந்த விருதினை அந்நிறுவன நிர்வாக இயக்குநரான டாக்டர் விவேக் பதக் பெற்றுக்கொண்டுள்ளார் என அந்த அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது. இந்த விருதானது அவர் தனது விதிவிலக்கான முயற்சிகள், பங்களிப்புகள் மற்றும் தொழில்துறையின் தீவிர அர்ப்பணிப்புக்காகப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

விளையாட்டு செய்திகள்

2023 ஆம் ஆண்டிற்கான ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய ஆண்கள் அணி வெண்கலம் வென்றுள்ளது.

  • செப்டம்பர் 06 அன்று தென் கொரிய குடியரசின் பியோங்சாங் நகரில் நடைபெற்றுள்ள 2023 ஆம் ஆண்டிற்கான ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரின் அரையிறுதி போட்டியில் சீன தைபேயிடம் இந்திய ஆண்கள் அணியானது போட்டியிட்டு வெண்கலப் பதக்கத்துடன் முடிந்தது. 
  • இந்த போட்டியில் ஹர்மீத் தேசாய், ஷரத் கமல் மற்றும் சத்தியன் ஞானசேகரன் ஆகியோர் அடங்கிய இந்திய ஆடவர் அணியானது தனது கடைசி நான்கு ஆட்டங்களில் 0-3 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியடைந்து இந்த பதக்கத்தை தக்க வைத்து கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

முக்கிய தினம்

சர்வதேச எழுத்தறிவு தினம் 2023

  • எழுத்தறிவின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை உலகம் முழுவதும் உள்ள பொது மக்களுக்கு ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 8 ஆம் நாளானது “சர்வதேச எழுத்தறிவு தினமாக(ILD)” கொண்டாடப்படுகிறது. 
  • இந்த தினத்தை ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பானது (UNESCO) 1966 ஆம் ஆண்டில் நிறுவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த தினமானது எழுத்தறிவு ஒரு மனித உரிமை என்பதை உலகத்தில் உள்ள பொது மக்களுக்கு நினைவூட்டுதல் மற்றும் தனிநபர்கள், சமூகங்களை மேம்படுத்துதல் ஆகியவற்றை கருப்பொருளாக கொண்டு இந்த தினமானது கடைப்பிடிக்கப்படுகிறது.

உலக உடல் சிகிச்சை தினம் 2023

  • உலகத்தில் உள்ள பொதுமக்களை ஆரோக்கியமாகவும், அதிக திறன் கொண்டவர்களாகவும் மாற்றுவதற்காக உடல் சிகிச்சையாளர்கள் ஆற்றும் முக்கியப் பங்கு பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 08 ஆம் நாளானது உலக உடல் சிகிச்சை தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. 
  • இந்த தினமானது பிசியோதெரபிஸ்டுகள் சமூகத்திற்கு செய்யும் பங்களிப்புக்கு மதிப்பளிக்கும் வகையில் இந்த தினமானது கடைப்பிடிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த தினமானது உலக உடல் சிகிச்சை கூட்டமைப்பு(WCPT) 1996 இல் நிறுவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். “Prevention and Management of Osteoarthritis” என்பது இந்த ஆண்டிற்கான கருப்பொருளாகும்.

DOWNLOAD PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!