7,236 ஆசிரியர், ஆசிரியரல்லாத காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க ரெடியா ?

0
7,236 ஆசிரியர், ஆசிரியரல்லாத காலிப்பணியிடங்கள்
7,236 ஆசிரியர், ஆசிரியரல்லாத காலிப்பணியிடங்கள்

7,236 ஆசிரியர், ஆசிரியரல்லாத காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க ரெடியா ?

7,236 ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணிகளுக்கான காலியிடங்கள் உள்ளதாகவும், தகுதியுடைவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளிவந்துள்ளது.

ஆசிரியர், ஆசிரியரல்லாத காலிப்பணியிடங்கள்:

டெல்லி சார்நிலை வாரியம் தங்களிடம் உள்ள 7,236 பணியிடங்கள் பற்றிய முழுமையான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன் விவரங்கள் பின்வருமாறு, பயிற்சி பெற்ற பட்டப்படிப்பு ஆசிரியர்கள் (ஹிந்தி) பெண்கள் 551 காலியிடங்களும், பயிற்சி பெற்ற பட்டப்படிப்பு முடித்த ஆசிரியர்கள் (ஹிந்தி) ஆண்கள்- 556 காலியிடங்களும், பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் (இயற்கை அறிவியல்) ஆண்கள்- 1040, பயிற்சி பெற்ற பட்டப்படிப்பு முடித்த ஆசிரியர்கள் (இயற்கை அறிவியல்) பெண்கள்- 824, பயிற்சி பெற்ற பட்டப்படிப்பு முடித்த ஆசிரியர்கள் (கணிதம்) பெண்கள்- 1167.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

பயிற்சி பெற்ற பட்டப்படிப்பு முடித்த ஆசிரியர்கள் (கணிதம்) ஆண்கள்- 988, பயிற்சி பெற்ற பட்டப்படிப்பு முடித்த ஆசிரியர்கள் (சமூக அறிவியல்) ஆண்கள்- 469, பயிற்சி பெற்ற பட்டப்படிப்பு முடித்த ஆசிரியர்கள் (சமூக அறிவியல்) பெண்கள்- 662, பயிற்சி பெற்ற பட்டப்படிப்பு முடித்த ஆசிரியர்கள் (வங்காளம்) ஆண்- 1 ஆகிய காலியிடங்கள் உள்ளதாக அறிவித்துள்ளது. இப்பணிகளுக்கு மாதம் ரூ.9300 – 34800 + தர ஊதியம் ரூ.4200ம் வழங்கப்படும். வயது 32க்குள் இருக்க வேண்டும்.

மாத ஊதியம்:

உதவி ஆசிரியர் (பிரைமரி)- 434, உதவி ஆசிரியர் (நர்சரி)- 74, இப்பணிகளுக்கு ஊதியம் மாதம் ரூ 9300- 34800+தர ஊதியம் ரூ 4200 வழங்கப்படும். ஜூனியர் செக்ரடேரியட் அசிஸ்டென்ட் (எல்டிசி)- 278 பணிக்கு மாத ஊதியமாக ரூ 5200- 20200 + தர ஊதியம் ரூ 4200, வயது வரம்பு 27 க்குள் இருக்க வேண்டும். கவுன்சலர்- 50 இடங்களும் , மாதம் ரூ 9300- 34800+தர ஊதியம் ரூ 4200 ம் வழங்கப்படும். தலைமை கிளார்க்- 12 பணியிடங்கள், மாத ஊதியமாக ரூ 9300- 34800+தர ஊதியம் ரூ 4600 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகுதிகள்:

இப்பணிகளுக்கு பட்டப்படிப்பு, பி.எட் பட்டம், டிப்ளமோ, 12ம் வகுப்பு முடித்தவர்கள் தட்டச்சு, கணினி பயிற்சி பெற்ற்றவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தேர்வு முறை:

இரண்டு கட்ட எழுத்துத்தேர்வுகள் மற்றும் திறன் அடிப்படையிலான தேர்வுகள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பம்:

இப்பணிகளுக்கு http://dsssbonline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். இது தொடர்பான அதிக விவரங்களை அறிந்து கொள்ள https://dsssb.delhi.gov.in/sites/default/files/All-PDF/Advertisement%20No.%2002-2021_compressed.pdf என்ற இணைப்பை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Download Notification 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!