ஆன்லைனில் கடன் வாங்க திட்டமிடுவோர் உஷார் – 600 ஆப்கள் போலி! ரிசர்வ் வங்கி எச்சரிக்கை!

0
ஆன்லைனில் கடன் வாங்க திட்டமிடுவோர் உஷார் - 600 ஆப்கள் போலி! ரிசர்வ் வங்கி எச்சரிக்கை!
ஆன்லைனில் கடன் வாங்க திட்டமிடுவோர் உஷார் - 600 ஆப்கள் போலி! ரிசர்வ் வங்கி எச்சரிக்கை!
ஆன்லைனில் கடன் வாங்க திட்டமிடுவோர் உஷார் – 600 ஆப்கள் போலி! ரிசர்வ் வங்கி எச்சரிக்கை!

ஆன்லைனில் இயங்கி வரும் சட்டவிரோத கடன் செயலிகளை கட்டுப்படுத்த புதிய சட்டம் கொண்டுவர வேண்டும் என இந்திய அரசிடம் ரிசர்வ் வங்கி பரிந்துரைத்துள்ளது.

சட்டவிரோத கடன் செயலி:

தற்போதைய காலகட்டத்தில் அனைவரின் தேவையாக இருப்பது பணம். பலரது வாழ்க்கையில் தேவைக்கேற்ப பணம் கடனாக பெறப்பட்டு தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. கடனானது வங்கிகளின் மூலம் பெறப்படும் பொது பாதுகாப்பானதாக இருக்கும். தற்போதைய காலகட்டத்தில் அனைத்தும் டிஜிட்டல் மயமாகி வருகிறது. மோசடிகளும் டிஜிட்டல் முறையில் நடத்தப்பட்டு வருகிறது. ஆன்லைனில் கடன் வழங்கும் செயலிகள் பல இயங்கி வருகிறது.

கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்த ஏபி டி வில்லியர்ஸ் – ரசிகர்கள் அதிர்ச்சி!

இதுபோன்ற சட்ட விரோதமான கடன் ஆப்களால் பணத்தை இழந்தவர்களும், உயிரை இழந்தவர்களும் ஏராளமக உள்ளனர். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசியல் கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.இந்தியாவில் ஆண்ட்ராய்ட் மொபைல்களுக்கு சுமார் 600 சட்டவிரோத கடன் ஆப்கள் இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. உடனடி கடன், இன்ஸ்டண்ட் கடன் போன்றவற்றை வழங்கும் சுமார் 1100 கடன் ஆப்கள் இந்தியாவில் ஆண்ட்ராய்ட் ஸ்டோர்களில் இருப்பதாக ரிசர்வ் வங்கி குழு கண்டறிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ராமேஸ்வரத்தில் நாளை (நவ.20) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

இதில் 600 செயலிகள் சட்ட விரோதமாக இயங்கி வருவதாக கண்டறியப்பட்டுள்ள நிலையில் சட்டவிரோதமான கடன் வழங்கும் செயல்பாடுகளை கட்டுப்படுத்த புதிய சட்டம் கொண்டுவர வேண்டுமென இந்திய அரசிடம் ரிசர்வ் வங்கி பரிந்துரைத்துள்ளது. இது குறித்து கடந்த ஆண்டில் 2,562 புகார்கள் குவிந்துள்ளன. இதுபோன்ற புகார்கள் மகாராஷ்டிரா, கர்நாடகா, டெல்லி, ஹரியானா, தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், தமிழ்நாடு, குஜராத் ஆகிய மாநிலங்களில் இருந்து அதிகமாக வருவதாக கூறப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!