சுகாதாரத் துறையின் 6,205 காலிப்பணியிடங்களுக்கான தேர்வுகள் ஒத்திவைப்பு – அமைச்சர் அறிவிப்பு!

0
சுகாதாரத் துறையின் 6,205 காலிப்பணியிடங்களுக்கான தேர்வுகள் ஒத்திவைப்பு - அமைச்சர் அறிவிப்பு!
சுகாதாரத் துறையின் 6,205 காலிப்பணியிடங்களுக்கான தேர்வுகள் ஒத்திவைப்பு - அமைச்சர் அறிவிப்பு!
சுகாதாரத் துறையின் 6,205 காலிப்பணியிடங்களுக்கான தேர்வுகள் ஒத்திவைப்பு – அமைச்சர் அறிவிப்பு!

மகாராஷ்டிரா மாநிலத்தில் சுகாதார அமைச்சர் ராஜேஷ் டோப் சுகாதாரத் துறை 6,205 காலிப்பணியிடங்களுக்கான குரூப் சி மற்றும் டி பிரிவு தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது குறித்து அறிவித்துள்ளார். மேலும் இதற்காக விண்ணப்பதாரர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

சுகாதாரத்துறை தேர்வுகள்:

மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் 1,830 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 367 கிராமப்புற மருத்துவமனைகள், 91 துணை மாவட்ட மருத்துவமனைகள், 23 சிவில் மருத்துவமனைகள், நான்கு மனநல மருத்துவமனைகள் மற்றும் காசநோய் மற்றும் தொழுநோய் மருத்துவமனைகள் தவிர மேலும் 16 மகளிர் மருத்துவமனைகள் உள்ளன. இங்கு உள்ள குரூப் சி மற்றும் டி பிரிவுகளின் 6,205 பணியிடங்களுக்கான காலியிடங்களை நிரப்புவதற்கான தேர்வை மாநில சுகாதாரத்துறை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்த இருப்பதாக முன்னர் அறிவித்தது.

‘ஆன்லைன் கேம், அடிமையாகும் மாணவர்கள்’ – மத்திய கல்வி அமைச்சகம் பரபர சுற்றறிக்கை!

இந்த 6,205 பணியிடங்களுக்காக மாநிலம் முழுவதும் இருந்து 8.6 லட்சம் விண்ணப்பதாரர்கள் தேர்விற்கு விண்ணப்பித்திருந்தனர். மேலும், புனே மாவட்டத்தில் இருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கு பதிவு செய்திருந்தனர். சுகாதாரத் துறையில் உள்ள குழு C மற்றும் D பிரிவில் தொழில்நுட்ப மற்றும் துணை ஊழியர் பணியிடங்கள் தவிர, ஊழியர் செவிலியர்கள், துணை நர்சிங் மருத்துவச்சிகள், மருந்தாளுநர்கள், ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள், எக்ஸ்ரே தொழில்நுட்ப வல்லுநர்கள், ஆய்வக உதவியாளர்கள் பணியிடங்கள் குரூப் சி பிரிவில் 2,739 பணியிடங்கள் உள்ளது.

Best TNPSC Coaching Center – Join Now

மேலும், 2,000 மருத்துவர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்நிலையில், மாநில சுகாதார அமைச்சர் ராஜேஷ் டோப் நேற்று இரவு 7 மணிக்கு ஆன்லைனில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், தேர்வு நடத்த இருந்த நியாசா கம்யூனிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் அமைப்பின் திறமையின்மை” காரணமாக தேர்வை ஒத்திவைக்க இருப்பதாகவும், இதனால் விண்ணப்பதாரர்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார் மற்றும் தேர்வு குறித்த தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!