நடப்பு நிகழ்வுகள் – 6 செப்டம்பர் 2023

0
நடப்பு நிகழ்வுகள் - 6 செப்டம்பர் 2023
நடப்பு நிகழ்வுகள் - 6 செப்டம்பர் 2023
நடப்பு நிகழ்வுகள் – 6 செப்டம்பர் 2023

தேசிய செய்திகள்

‘இந்தியாவில் பசுமை ஹைட்ரஜன் விமானிகள்’ என்ற தலைப்பிடப்பட்ட ஒரு நாள் மாநாடு தொடக்கம்.

 • ‘இந்தியாவில் பசுமை ஹைட்ரஜன் விமானிகள்’ என்ற தலைப்பிடப்பட்ட ஒரு நாள் மாநாடானது தேசிய தலைநகரமான  புதுதில்லியில் செப்டம்பர் 05 2023 அன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாநாட்டை NTPC நடத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
 • இந்தியாவில் உள்ள தனியார் மற்றும் பொது துறை நிறுவனங்களால் செயல்படுத்தப்படும் பல்வேறு வகையான பசுமை ஹைட்ரஜன் பைலட்டுகளை காட்சிப்படுத்துவதை நோக்கமாக கொண்டு இந்த மாநாடானது நடைபெறுகிறது.

இந்திய ஹெரிடேஜ் செயலி மற்றும் இ-அனுமதி வலைத்தளத்தை ASI அறிமுகப்படுத்தியுள்ளது.

 • பார்வையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் கற்றல் மற்றும் செயல்பாடு அனுபவத்தை மேலும் மேம்படுத்துவதற்காகவும், எளிதாக புரிதலை அனைவருக்கும் கொண்டு செல்வதையும் நோக்கமாக கொண்டு இந்திய தொல்லியல் துறை(ASI) ஆனது “அடாப்ட் எ ஹெரிடேஜ் 2.0” என்ற திட்டத்தை செப்டம்பர் 04 2023 அன்று தேசிய தலைநகரமான புது தில்லியில் உள்ள IGNCA, Samvet மைதானத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.
 • மேலும் அந்த திட்டத்தின் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக இத்திட்டத்திற்கான செயலி மற்றும் வலைத்தளமும் அந்நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ASI அமைப்பானது நாடு முழுவதும் கிட்டத்தட்ட 3696 நினைவுச்சின்னங்களை பாதுகாத்து இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை வெளிப்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சர்வதேச செய்திகள்

காபோன் நாட்டின் இடைக்கால அதிபராக Brice Oligui Nguema பதவியேற்பு.

 • சமீப காலங்களாக பல்வேறு குழப்பங்களில் சிக்கி தவிக்கும் காபோன் நாட்டில், அதன்  இராணுவ ஆட்சிக்குழுவின் தலைவரான பிரைஸ் ஒலிகுய் நுகுமா, அந்நாட்டின் இடைக்கால அதிபராக செப்டம்பர் 04 2023 அன்று பொறுப்பேற்றுள்ளார்.
 • சமீபத்தில் காபோன் ஜனாதிபதி அலி போங்கோ ஒரு சர்ச்சைக்குரிய தேர்தலில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களில் காபோன் நாட்டின் ராணுவ தளபதி நுகுமா தலைமையிலான இராணுவ அதிகாரிகள் மத்திய ஆப்பிரிக்க நாட்டின் அதிகாரத்தை கடந்த வாரம் கைப்பற்றிய பின்னர் இந்த முடிவானது ஒரு மனதாக எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

2023 ஆம் ஆண்டிற்கான உலக டிஜிட்டல் மைனிங் உச்சி மாநாட்டை BITMAIN நடத்த திட்டமிட்டுள்ளது. 

 • 2023 ஆம் ஆண்டிற்கான உலக டிஜிட்டல் மைனிங் உச்சி மாநாடானது(WDMS 2023) இந்த ஆண்டின் செப்டம்பர் 22 ஆம் நாளில் நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த மாநாடானது செப்டம்பர் 22 முதல் செப்டம்பர் 23 ஆம் தேதி வரை நடைபெறக் கூடிய இரண்டு நாள் மாநாடு என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
 • இந்த மாநாட்டினை ஹாங்காங்கின் ANTMINER என்ற உலகின் முன்னணி Cryptocurrency மைனிங் உற்பத்தி மற்றும் சேவைகளை வழங்கும் நிறுவனம் தலைமையில் நடைபெற உள்ளதாகும்.  “Mining for the bull market” என்பதை கருப்பொருளாக கொண்டு இந்த மாநாடானது நடைபெற உள்ளது. மேலும் எதிர்கலாத்தை ஆளப்போகும் பண கருவியாக Cryptocurrency பார்க்கப்படும் நிலையில் இந்த மாநாடானது உலகளவில் பெரிய எதிர்பார்ப்பு உடையதாக உள்ளது என்பது சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

சூதாட்ட விடுதிகளை சட்டப்பூர்வமாக்கும் முதல் வளைகுடா அல்லது அரபு நாடாக UAE உருவாகிறது.

 • ஐக்கிய அரபு அமீரக கூட்டாச்சியானது “வணிக விளையாட்டு” அதிகாரத்தை துறையினை நாட்டில் மேம்படுத்துவதற்கான பல்வேறு முன்னெடுப்புகளை கையில் எடுத்துள்ளது. அதன் படி சமீபத்தில் சூதாட்டம் மற்றும் சூதாட்ட விடுதிகளை அமைப்பதற்கான வழிமுறைகளுக்கு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இந்நடவடிக்கைகள் மூலம் சூதாட்ட விடுதிகளை சட்டப்பூர்வமாக்கும் முதல் வளைகுடா அல்லது அரபு நாடாக UAE உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
 • மேலும் இவ்வகையான வணிக விளையாட்டுகளை மேம்படுத்துவதற்காக பொது வணிக விளையாட்டு ஒழுங்குமுறை ஆணையமானது(GCGRA) உருவாக்கப்படும் எனவும் அந்நாட்டின் அரசு செப்டம்பர் 03 2023 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டின் பசுமை எரிசக்தி திட்டங்களுக்கு நிதியளிப்பதற்காக UBI உடன் IREDA அமைப்பானது ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை மேற்கொண்டுள்ளது.

 • இந்தியாவில் பசுமை மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆற்றலின் வளர்ச்சியை வலுப்படுத்துதல் மற்றும் விரைவுபடுத்துவதற்காக இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு நிறுவனமானது(IREDA) Bank of Baroda(BoB) மற்றும் யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா(UBI) ஆகிய வங்கி நிறுவனங்களுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் செப்டம்பர் 2023 இல் கையெழுத்திட்டுள்ளன.
 • குறிப்பாக அடுக்கு-2 & அடுக்கு-3 தர வரிசையின் நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் ஆற்றலுக்கான வரம்பை விரிவுபடுத்துவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு இந்த புரிந்துணர்வு ஒப்பந்தமானது மேற்கொள்ளபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மாநில செய்திகள்

இமாச்சலப் பிரதேச முதல்வர் சிறப்புத் திறன் கொண்ட குழந்தைகளுக்காக ‘சபால்’ என்ற முக்கிய முன்னெடுப்பு திட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளார்.

 • இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு செப்டம்பர் 04 2023 அன்று மறுகட்டமைப்பு, முக்ய மந்திரி விளையாட்டுத் திறன்கள், அபிலாஷைகள் மற்றும் வாழ்வாதாரத்திற்கான ஒரு முக்கிய முன்னெடுப்பு திட்டத்தை (SABAL) முக்கிய மாவட்டமான நாடானில் தொடங்கி வைத்துள்ளார்.
 • மேலும் வேட்பாளர்களின் தேர்வு அளவுகோல்களில் நேர்மையை உறுதிப்படுத்துவதற்காக அடுத்த இரண்டு மாதங்களுக்குள் அம்மாநில ஹமிர்பூரில் சமீபத்தில் கலைக்கப்பட்ட அம்மாநில தேர்வு ஆணையத்திற்குப் பதிலாக ‘ராஜ்ய சயான் ஆயோக்’ என்ற அமைப்பானது அமைக்கப்படும் என்றும் முதல்வர் அந்த நிகழ்ச்சியில் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ராஜஸ்தான் மாநிலத்தில் பள்ளி கல்வி துறையை மேம்படுத்துவதற்கான பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 • ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மாநில அரசு சமீபத்தில் பல்வேறு மின்-கல்வி முயற்சிகளை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து ராஜஸ்தான் மாநில அரசாங்கமானது ‘பள்ளிக்குப் பிறகு பள்ளி’(School After School) என்ற முக்கிய முன்னெடுப்பு திட்டத்தினை தொடங்க உள்ளதாக அம்மாநில பள்ளிக் கல்வித்துறை செயலர் நவீன் ஜெயின் தெரிவித்துள்ளார்.
 • இதன்மூலம் கிட்டத்தட்ட 12,000 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மின்-கல்வி கிடைக்கச் செய்தல் மற்றும் அவற்றின் திறனை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாக கொண்டு இந்த திட்டமானது மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
 • இந்த திட்டத்தின் கீழ் அம்மாநில பள்ளிகளில் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் தொடர்பான தற்போது கிடைக்கும் அனைத்து கருவிகளின் உதவியுடன் இ-வகுப்பறைகளை(இணையதள வசதி) துறை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கானாவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான புதுமையான கல்வித் திட்டமானது தொடங்கப்பட்டுள்ளது.

 • ஷெல் மற்றும் ஸ்மைல் அறக்கட்டளைகள் இணைந்து தெலுங்கானா மாநிலத்தில் உள்ள முக்கியமான வாரங்கல் மற்றும் கம்மம் மாவட்டங்களில் ‘NXplorers Junior’ என்ற முக்கிய புதுமையான கல்வித் திட்டத்தை செப்டம்பர் 04 அன்று தொடங்கியுள்ளது.
 • இந்த திட்டம் தொடங்கப்பட்ட முதல் ஆண்டில், இந்த இரு மாவட்டங்களிலும் உள்ள கிட்டத்தட்ட 70 பள்ளிகள் இத்திட்டத்தின் கீழ் சேர்க்கப்படும் என்றும் அதன் மேம்பாட்டு வளர்ச்சியினை கணக்கில் கொண்டு மேலும் பல பள்ளிகள் இத்திட்டத்தின் கீழ் இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியமனங்கள்

மேஜர் ஜெனரல் இக்னேஷியஸ் ஃப்ளோரா, எம்என்எஸ் கூடுதல் இயக்குநராக பொறுப்பேற்பு.

 • இந்திய ராணுவத்தின் மேஜர் ஜெனரல் இக்னேஷியஸ் டெலோஸ் ஃப்ளோரா செப்டம்பர் 01 2023 அன்று இராணுவத்திற்கான நர்சிங் சேவையின் (MNS) கூடுதல் இயக்குநராக பொறுப்பேற்றுள்ளார் என இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிவிப்பாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 • 38 ஆண்டுகால அவரது புகழ்பெற்ற தனிப்பட்ட மற்றும் ராணுவ சேவைக்கான பணி வாழ்க்கையில், தலைமை அதிகாரியாக JDMNS (Trg & HS) கிழக்குக் கட்டளை,  முதன்மை மேட்ரான் ஏஐசிடிஎஸ் புனே, பிரிக் MNS உள்ளிட்ட ஆயுதப்படை சிறப்பு மருத்துவ சேவைகளுக்கான மருத்துவமனைகளில் பல்வேறு முக்கிய நியமனங்களை வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

நாஸ்காம் காக்னிசென்ட் குழும தலைவராக ராஜேஷ் நியமனம்.

 • தேசிய மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் சங்கமான Nasscom அமைப்பின் தலைவராக காக்னிசன்ட் இந்தியா குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக ராஜேஷ் நம்பியார் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள சமீபத்திய அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 • இதற்கு முன் மைக்ரோசாப்ட் இந்தியாவின் முன்னாள் தலைவரான ஆனந்த் மகேஸ்வரிக்குப் பிறகு, இவர் தனது முந்தைய துணைத் தலைவராக இருந்து இந்த புதிய பொறுப்பை ஏற்கிறார் என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகும். பல்வேறு துறை அனுபவம் கொண்ட இவர் தனது சீரிய நடவடிக்கைகளின் மூலம் இந்நிறுவனத்தை மேம்படுத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேன்கைண்ட் பார்மா நிறுவனத்தின் டிஜிட்டல் பரிமாற்றத்திற்கான துணைத் தலைவராக தருண் கபூர் நியமனம்.

 • இந்தியாவின் மிகப்பெரிய மருந்து மற்றும் சுகாதார தயாரிப்பு ஆகிய சேவைகளை வழங்குனரான மேன்கைன் ஃபார்மா நிறுவனத்தின் டிஜிட்டல் பரிமாற்றத்திற்கான பிரிவின் புதிய துணைத் தலைவராக தருண் கபூர் என்பவரை நியமித்துள்ளதாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள நிறுவன அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 • முன்பு BT குழுமத்தில் தொழில்நுட்ப விநியோகத் தலைவராகப் பணியாற்றிய இவர், தனது புதிய பாத்திரத்தில் தனது சீரிய முயற்சிகள் மூலம் நிறுவனத்தின் நிலையான மற்றும் பரிமாற்றத்திற்கான இலக்குகளை அடைவதில் பெரும் பங்கு வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா ஃபியூச்சர் பவுண்டேஷன் தலைவராக ஓய்வுப் பெற்ற முன்னாள் லெப்டினன்ட் ஜெனரல் டாக்டர் ராஜேஷ் நியமனம்.

 • இந்தியாவின் தலைநகரமான புதுடெல்லியை மையமாக கொண்ட இலாப நோக்கற்ற சிந்தனைக் குழு மற்றும் அறக்கட்டளையான இந்தியா ஃபியூச்சர் ஃபவுண்டேஷன் (IFF) அமைப்பின் தலைவராக ஓய்வுப் பெற்ற முன்னாள் லெப்டினன்ட் ஜெனரல் டாக்டர் ராஜேஷ் பந்த் நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள சமீபத்திய அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 • இவர் இந்த நியமனத்திற்கு முன்பு இந்திய அரசாங்கத்தின் பிரதமர் அலுவலகத்தில் தேசிய சைபர் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளராக பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த அமைப்பானது நாட்டின் முன்னேற்றத்திற்கான வழிமுறைகள் மற்றும் அதன் பாதைகளை பொது மாக்களிடையே கொண்டு சேர்ப்பதை முக்கிய நோக்கமாக கொண்டு செயல்படக்கூடிய முக்கிய அமைப்பாகும்.

செரினஸ் எனர்ஜி நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக விளாட் ரியாபோ நியமனம்.

 • சர்வதேச எண்ணெய் மற்றும் அது சம்பந்தப்பட்ட சேவைகளை வழங்குனரான செரினஸ் குழுமமானது அந்நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக(CFO) விளாட் ரியாபோ என்பவரை நியமித்துள்ளதாக அந்நிறுவனத்தின் சமீபத்திய அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 • பல்வேறு துறை அனுபவமிக்க நிதித் தொழில் வல்லுநரான இவர் மார்ச் 2023 இல் இக்குழுமத்தின் குழு நிதிக் கட்டுப்பாட்டாளராக பதவி வகித்ததிலிருந்து இந்த பதவிக்கு உயர்த்தப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவர் ஏற்கனவே நிறுவனத்தின் நிதி சிக்கல்களை சமாளித்து அதனை சமன் செய்வதை நோக்கமாக கொண்டு இந்த பொறுப்பிற்கு நியமிக்கப்பட்டுள்ளார் என்பது சிறப்பு வாய்ந்ததாகும்.

டிசிஃபர் லேப்ஸ் நிறுவனத்தின் கூடுதல் இயக்குனராக காயத்ரி ரகுராம் நியமனம்.

 • டெசிஃபர் லேப்ஸ் நிறுவனத்தின் கூடுதல் மற்றும் தனித்துறை இயக்குநராக திருமதி காயத்ரி ரகுராம் என்பவரை செப்டம்பர் 4, 2023 அன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 • இவர் இந்த நியமனத்தின் மூலம் நிறுவன மேன்மைக்கு சிறப்பாக பணியாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கயானா நாட்டிற்கான இந்தியாவின் அடுத்த உயர் ஆணையராக அமித் எஸ் நியமனம்.

 • 2005 ஆம் ஆண்டு இந்திய வெளியுறவு சேவை(IFS) அதிகாரியான அமித் எஸ் தெலாங், கயானா நாட்டிற்கான இந்தியாவின் அடுத்த உயர் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.
 • இவர் இதற்குமுன்பாக பிராங்பேர்ட்டில் இந்திய தூதரக ஜெனரலாக கான்சல் ஜெனரலாக பணியாற்றி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

விருதுகள்

2023 ஆம் ஆண்டிற்கான மைக்ரோசாப்ட் சூப்பர்ஸ்டார்ஸ் விருதை ஆசியா மற்றும் இந்தியாவை சேர்ந்த CloudThat நிறுவனம் வென்றுள்ளது.

 • கிளவுட் பயிற்சி மற்றும் கிளவுட் கன்சல்டிங் மேம்பாட்டு தீர்வுகள் வழங்குநரான CloudThat நிறுவனமானது, ஆசியா மற்றும் இந்தியாவிற்கான பிரிவில் 2023 ஆம் ஆண்டிற்கான மைக்ரோசாஃப்ட் சூப்பர்ஸ்டார்ஸ் விருதைப் பெற்றுள்ளதாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 • இந்த நிறுவனமானது தொடர்ந்து ஆறு ஆண்டுகளில் ஆறு விருதுகளை வாங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் திறமை மற்றும் மேம்பாடு மற்றும் முன்மாதிரியான பயிற்சித் திட்டங்களை வழங்குவதில் CloudThat’s விதிவிலக்கான அர்ப்பணிப்புக்கு இந்த விருதானது வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

DOWNLOAD PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!