Reliance Jio 56 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்கள் – முழு விபரம் இதோ!

1
Reliance Jio 56 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்கள் - முழு விபரம் இதோ!
Reliance Jio 56 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்கள் - முழு விபரம் இதோ!
Reliance Jio 56 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்கள் – முழு விபரம் இதோ!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு 56 நாட்கள் வேலிடிட்டியில் உள்ள ப்ரீபெய்ட் திட்டங்களை பல சலுகைகளுடன் வழங்கி வருகிறது. இந்த திட்டங்களை பற்றிய முழு விவரங்களை இந்த பதிவில் காண்போம்.

ப்ரீபெய்ட் திட்டங்கள்:

கொரோனா தொற்று பரவல் காரணமாக பல மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. இதனால் மக்கள் வெளி இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைவரும் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் சூழ்நிலை உள்ளது. இதனால் இணையத்தின் தேவை அதிகரித்துள்ளது. மேலும், ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளவும் தொலைபேசி இணைப்பு அவசியமாகியுள்ளது. மக்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்களும் இணையத்தின் மூலம் அதிகரித்துள்ளது.

இதனால் பல தொலைத்தொடர்பு நிறுவனங்களும் மக்களுக்கு அதிக அளவிலான சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் ஜியோ தனது ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு 56 நாட்கள் வேலிடிட்டியில் அதிக பலன்களை கொண்ட திட்டங்களை வழங்கி வருகிறது.

ஜியோவின் ரூ.598 திட்டம்:

இந்த திட்டத்தின் மூலம் 56 நாட்கள் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இதனால் மொத்தம் 112 ஜிபி வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கிறது. மேலும் அன்லிமிடெட் கால்கள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது.

TN Job “FB  Group” Join Now

இவை தவிர, வாடிக்கையாளர்கள் 1 வருடத்திற்கு டிஸ்னி + ஹாட்ஸ்டாருக்கு இலவச சந்தா மற்றும் ஜியோடிவி, ஜியோசினிமா மற்றும் ஜியோநியூஸ் போன்ற செயலிகளுக்கான இலவச சந்தாவும் பெறுகிறார்கள்.

ஜியோவின் ரூ.444 திட்டம்:

இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 56 நாட்கள் வேலிடிட்டி உடன் தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இதனுடன் வாடிக்கையாளர்களுக்கு தினமும் அன்லிமிடெட் கால்கள், மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இது தவிர, இந்த திட்டத்தின் மூலம் ஜியோ டிவி, ஜியோசினிமா மற்றும் ஜியோ நியூஸ் போன்ற செயலிகளுக்கு இலவச அணுகல் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

ஜியோ ரூ.399 திட்டம்:

இந்த திட்டத்தின் மூலம் தினமும் 1.5 ஜிபி டேட்டா வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. அதாவது இந்த திட்டத்தில் மொத்தம் 84 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. மேலும், அன்லிமிடெட் கால்கள், மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்திலும், வாடிக்கையாளர்களுக்கு ஜியோ பயன்பாடுகளுக்கான இலவச சந்தாவும் கிடைக்கிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. மக்கள் பணத்தை எப்படியாவது சுரண்டும் வேலையை பாருங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!