தமிழகத்தில் 50% மானியத்துடன் இருசக்கர வாகனம் – தகுதிகள், விண்ணப்பப் பதிவு & முழு விபரம் இதோ!

0
தமிழகத்தில் 50% மானியத்துடன் இருசக்கர வாகனம் - தகுதிகள், விண்ணப்பப் பதிவு & முழு விபரம் இதோ!
தமிழகத்தில் 50% மானியத்துடன் இருசக்கர வாகனம் - தகுதிகள், விண்ணப்பப் பதிவு & முழு விபரம் இதோ!
தமிழகத்தில் 50% மானியத்துடன் இருசக்கர வாகனம் – தகுதிகள், விண்ணப்பப் பதிவு & முழு விபரம் இதோ!

இருசக்கர வாகனங்கள் வாங்க மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் 50% மானியத்துடன் இருசக்கர வாகனம் வழங்கப்படவுள்ளது. விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி இருசக்கர வாகனத்தை பெற்று கொள்ளவும்.

50% மானியம்:

தமிழ்நாடு வக்பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட வக்பு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இருசக்கர வாகனங்கள் வாங்க மானியம் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டது. தற்போது அந்த திட்டத்தில் சிறிய மாற்றம் கொண்டு வரவுள்ளதாக விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மோகன் அறிவித்துள்ளார். மேலும், இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தகுதியான நபர்களுக்கு அந்த இருசக்கர வாகனத்தின் மொத்தவிலையில் 50% அல்லது ரூ.25,000 க்கு குறைவாக அந்த இருசக்கர வாகனத்தை வாங்க முடியும்.

பள்ளிகளுக்கு ஏப்ரல் மாதத்தில் 7 நாட்கள் விடுமுறை – 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு

தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இருசக்கர வாகனங்கள் வாங்க மானியம் வழங்கும் திட்டத்தில் கொண்டுவந்துள்ள மாற்றங்களை காணலாம். அதாவது முதலில் வயது வரம்பு 18 லிருந்து 40 ஆக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. தற்போது 18 லிருந்து 45 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 8 ம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும் என முன்பு அறிவிக்கப்பட்டது. தற்போது கல்வித்தகுதி தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வக்பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட வக்பு நிறுவனங்களில் விண்ணப்பதாரர் குறைந்தது மூன்று ஆண்டுகள் பணியாற்றிருக்க வேண்டும்.

மேலும், விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் தமிழ்நாட்டை சேர்ந்தவராக இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் போது LLR சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். பதிவு செய்யப்பட்ட வக்பு நிறுவனத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் மானிய உதவி கோரி விண்ணப்பித்தால் பேஷ் இமாம், அரபி ஆசிரியர்கள், மோதினார், முஜாஜர் என்ற முன்னுரிமை அடிப்படையில் ஒருவருக்கு மட்டும் மானியம் வழங்கப்படும். மேலும், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வயது சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை, புகைப்படம், சாதிச் சான்று உள்ளிட்ட ஆவணங்களை இணைக்க வேண்டும்.

மேலும், விண்ணப்பதாரர் மாற்றுத்திறனாளியாக இருப்பின் அதற்குரிய சான்றிதழையும் இணைக்க வேண்டும். வங்கி கணக்கு எண் மற்றும் IFSC எண் ஆகியவற்றுடன் கூடிய வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம் நகலை இணைக்க வேண்டும். மேலும், முத்தவல்லியிடம் வக்பில் எத்தனை ஆண்டுகள் பணிபுரிகிறார் என்பதற்கான சான்றிதழையும் இணைக்க வேண்டும். மானிய விலையில் இரு சக்கர வாகனம் வாங்க தேவையான ஆவணங்கள் அனைத்தையும் இணைத்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் (முதல் தளம்), மாவட்ட ஆட்சியரகம், விழுப்புரம் என்ற முகவரிக்கு நேரில் சென்று ஒப்படைக்கும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!