இந்து சமய அறநிலையத்துறையில் 42 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
இந்து சமய அறநிலையத்துறையில் 42 காலிப்பணியிடங்கள் - விண்ணப்பங்கள் வரவேற்பு!
இந்து சமய அறநிலையத்துறையில் 42 காலிப்பணியிடங்கள் - விண்ணப்பங்கள் வரவேற்பு!
இந்து சமய அறநிலையத்துறையில் 42 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழக இந்து அறநிலையத்துறையில் செயல் அலுவலர் நிலை – III பதவிகளுக்கான ஆட்கள் சேர்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. எனவே தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC வேலைவாய்ப்பு:

தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலை பாதிப்புகள் குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பும் நிலையில் ஊரடங்கால் வேலையிழந்தோர் மீண்டும் வேலை வாய்ப்புகளை தேடி வருகின்றனர். கடந்த 2 வருடங்களாக பரவிய கொரோனா தொற்றால் விதிக்கப்பட்ட ஊரடங்கால் அரசுத்துறை பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படவில்லை. தற்போது கட்டுப்பாடுகள் விலக்கி கொள்ளப்பட்ட நிலையில் அரசு துறை காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்யும் வகையில் போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது.

Exams Daily Mobile App Download

அடுத்ததாக மார்ச் மாதம் குருப் 4 & VAO தேர்வு அறிவிப்பு வெளியாகி அதற்கான விண்ணப்ப பதிவுகளும் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் VII-B தேர்வின் கீழ் இந்து சமய அறநிலைய சார்நிலை பணிகளுக்கான தேர்வு நடைபெற உள்ளது. தற்போது இந்து சமய அறநிலையில் செயல் அலுவலர் நிலை – III பதவிகளில் 42 காலிப்பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான எழுத்துத் தேர்வு செப்டம்பர் 10ம் தேதி நடைபெறும் என்றும் மதிப்பெண்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊட்டிக்கு செல்ல திட்டமிட்டவர்கள் கவனத்திற்கு – ரயில் பயண நாட்கள், கட்டணம் உட்பட முழு விவரம் இதோ!

இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.20,600–75900 வரை வழங்கப்படும். இந்த பணியிடங்களுக்கு 10, 12 மற்றும் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் மதம் மற்றும் சமய நிறுவனங்களில் குறைந்தது 5 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்ட விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்  www.tnpsc.gov.in / www.tnpscexams.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!