L & T Infotech நிறுவனத்தில் 4,000 பேருக்கு வேலைவாய்ப்பு – வெளியான தகவல்!

0
L & T Infotech நிறுவனத்தில் 4,000 பேருக்கு வேலைவாய்ப்பு - வெளியான தகவல்!
L & T Infotech நிறுவனத்தில் 4,000 பேருக்கு வேலைவாய்ப்பு - வெளியான தகவல்!
L & T Infotech நிறுவனத்தில் 4,000 பேருக்கு வேலைவாய்ப்பு – வெளியான தகவல்!

தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக இந்தியாவின் முன்னணி IT சேவை நிறுவனமான L&T நடப்பு நிதியாண்டில் மட்டும் சுமார் 4,000 பேருக்கு வேலைவாய்ப்புகளை அளித்திருப்பதாக தெரிவித்துள்ளது.

வேலை வாய்ப்பு

இந்தியாவில் மும்பை மாநகரத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் லார்சன் அண்ட் டூப்ரோ இன்போடெக் (L&T) நிறுவனம், இந்த நிதியாண்டின் துவக்கத்தில் மட்டும் 4,000 பேருக்கு புதிய வேலை வாய்ப்புகளை அளித்துள்ளதாக அறிவித்துள்ளது. அதாவது, IT துறைகளுக்கு இடையே நிலவி வரும் உயர் அட்ரிஷன் விகிதங்களுக்கு மத்தியில், லார்சன் அண்ட் டூப்ரோ இன்போடெக் (L&T) நிறுவனம் செப்டம்பர் 30 ஆம் தேதியுடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில் தற்போதைய பணியாளர்களின் 42 சதவிகிதத்துடன் கூடுதலாக 10 சதவிகித ஊழியர்களை இணைத்துள்ளது.

2022 ஆம் ஆண்டிற்கான அரசு பொது விடுமுறை நாட்கள் – மாநில அரசு அறிவிப்பு!

அந்த வகையில் நடப்பு நிதியாண்டிற்கான பணியமர்த்தும் இலக்கை சுமார் 5,500 புதிய பட்டதாரிகளிடமிருந்து துவங்கி இருப்பதாக L&T நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் இந்நிறுவனத்தின் கடைசி 12 மாதங்களுக்கான அட்ரிஷன் விகிதம் 19.6 சதவீதமாக இருந்திருக்கிறது. இந்த விகிதம் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 15.2 சதவீதமாக கணக்கிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக L&T நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர் சஞ்சய் ஜலோனா கூறுகையில், ‘எங்கள் நிறுவனத்தில் 42,000 ஊழியர்கள் பணியில் உள்ளனர்.

இதனுடன் 2021ம் ஆண்டின் 4ம் காலாண்டில் 2,000 நபர்களையும், 22ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் 2,300 பேரையும் புதிதாக சேர்த்துள்ளோம். இதில் குறிப்பாக இந்த காலாண்டில் மட்டும் 4,084 பேரை பணியமர்த்தி இருக்கிறோம். இதன் மூலம் மொத்த பணியாளர்களில் 10 சதவிகிதம் பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்’ என குறிப்பிட்டுள்ளார். மேலும் புதிய ஊழியர்களை மேம்படுத்துவதற்கான சிறப்பு முயற்சிகளை மேற்கொள்ளும் விதத்தில் ஆறு மாதங்களுக்கு பயிற்சி அளித்து, பின்னர் தொழில்நுட்ப திறமைகளாக அவர்களை மாற்றுவது குறித்து சிந்தித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் பிப்ரவரி 2022 வரை அனைவருக்கும் ‘இது’ கட்டாயம் – சுகாதாரத்துறை செயலர்!

இதற்கிடையில் அந்நிறுவனத்தின் நிகர லாபம் நடப்பு நிதியாண்டில் மட்டும் 20.77 சதவிகிதம் அதிகரித்து ரூ.551.7 கோடியாக உயர்ந்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டு இதே காலாண்டில் ஒப்பிடுகையில் இதன் லாபம் ரூ.456.8 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இது தவிர L&T இன்போடெக் நிறுவனம் ஒரு விரிவான 5 ஜி நெட்வொர்க்கை பரிசோதித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது தானியங்கி வாகன உற்பத்தி, மீடியா மற்றும் பொழுதுபோக்கு உள்ளிட்ட ஒவ்வொரு துறைகளிலும் சில வித்தியாசங்களை உருவாக்க 5 ஜி தொழில்நுட்ப முறை உருவாக்கத்திற்கு இந்நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!