2022 ஆம் ஆண்டிற்கான அரசு பொது விடுமுறை நாட்கள் – மாநில அரசு அறிவிப்பு!

0
2022 ஆம் ஆண்டிற்கான அரசு பொது விடுமுறை நாட்கள் - மாநில அரசு அறிவிப்பு!
2022 ஆம் ஆண்டிற்கான அரசு பொது விடுமுறை நாட்கள் - மாநில அரசு அறிவிப்பு!
2022 ஆம் ஆண்டிற்கான அரசு பொது விடுமுறை நாட்கள் – மாநில அரசு அறிவிப்பு!

கேரள மாநிலத்திற்கான வரும் 2022ம் ஆண்டு அரசு பொது விடுமுறை தினங்களின் பட்டியலை அரசு வெளியிட்டுள்ளது. இதற்காக அமைச்சரவை ஒப்புதலும் கிடைத்துள்ளது.

பொது விடுமுறை தினங்கள்:

வருடம் தோறும் ஒவ்வொரு மாநில அரசுகளும் அடுத்த ஆண்டிற்கான அரசு விடுமுறை தினங்களின் பட்டியலை முன்னதாகவே வெளியிடும். அதன்படி, கேரளா அரசு தற்போது அடுத்து வரும் 2022ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை நாட்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அரசின் பொது விடுமுறை தினங்களில் ஆறு ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் மூன்று இரண்டாவது சனிக்கிழமைகள் வருகின்றது. கேரள அரசின் இந்த பொது விடுமுறை பட்டியலுக்கு அமைச்சரவை ஓப்புதல் அளித்துள்ளது.

ஜனவரி

குடியரசு தினம் – ஜனவரி 26 – புதன்கிழமை

மார்ச்

சிவராத்திரி – மார்ச் 1 – செவ்வாய்

ஏப்ரல்

  • பஸ்கா / டாக்டர் அம்பேத்கர் ஜெயந்தி- ஏப்ரல் 14 – வியாழக்கிழமை
  • புனித வெள்ளி / விஷு- ஏப்ரல் 15- வெள்ளிக்கிழமை

மே

ஈதுல் பித்ர் – மே 2 – திங்கள்

ஜூலை

கர்கடக வாவ் – ஜூலை 28 – வியாழக்கிழமை

ஆகஸ்ட்

  • முஹர்ரம் – ஆகஸ்ட் 8 – திங்கள்
  • சுதந்திர தினம் – ஆகஸ்ட் 15 – திங்கள்
  • ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி – ஆகஸ்ட் 18 – வியாழக்கிழமை

தமிழகத்தின் 13 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் – சென்னை வானிலை ஆய்வு மையம்!

செப்டம்பர்

  • 1 வது ஓணம் – செப்டம்பர் 7 – புதன்
  • திருவோணம் – செப்டம்பர் 8 – வியாழக்கிழமை
  • மூன்றாவது ஓணம் – செப்டம்பர் 9 – வெள்ளிக்கிழமை
  • ஸ்ரீநாராயண குரு சமாதி – செப்டம்பர் 21 – புதன்

அக்டோபர்

  • மகாநவமி – அக்டோபர் 4 – வியாழக்கிழமை
  • விஜயதசமி -அக்டோபர் 5 – வெள்ளிக்கிழமை
  • தீபாவளி – அக்டோபர் 24 – திங்கள்
ஞாயிறு விடுமுறை நாட்கள்:
  • மன்னம் ஜெயந்தி-ஜனவரி 2,
  • ஈஸ்டர்-ஏப்ரல் 17,
  • மே தினம்-மே 1,
  • அய்யங்காளி ஜெயந்தி– ஆகஸ்ட் 28
  • காந்தி ஜெயந்தி– அக்டோபர் 2
  • கிறிஸ்துமஸ்-டிசம்பர் 25
இரண்டாவது சனிக்கிழமை விடுமுறை நாட்கள்:

ஈத்-உல்-அதா (பக்ரீத்) – 4 ஜூலை

4 வது ஓணம் / ஸ்ரீநாராயண குரு ஜெயந்தி– 10 செப்டம்பர்

மிலாடி ஷெரீப் – அக்டோபர் 8

மேலும், ஈதுல் பித்ர், முஹர்ரம், ஈதுல் அதா மற்றும் மிலாடி ஷெரீப் பண்டிகைகள் பிறை காணப்பட்ட நாட்களை பொறுத்து மாறுபடும்.

குறிப்பிட்டவர்களுக்கான விடுமுறை:

அய்யா வைகுந்த சுவாமி ஜெயந்தி – மார்ச் 3 – வெள்ளிக்கிழமை அன்றைய தினம் நாடார் சமூக ஊழியர்கள் மற்றும் அரசு-அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் நாடார் சமூகத்தைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படும்.

தமிழகத்தில் பிப்ரவரி 2022 வரை அனைவருக்கும் ‘இது’ கட்டாயம் – சுகாதாரத்துறை செயலர்!

ஆவணி அவிட்டம் – வியாழக்கிழமை, ஆகஸ்ட் – 8

அன்றைய தினம் பிராமண சமூகத்தைச் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படும்.

விஸ்வகர்மா தினம் – செப்டம்பர் 17- சனிக்கிழமை

விஸ்வகர்மா சமூக ஊழியர்கள் மற்றும் அரசு, அரை அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் விஸ்வகர்மா சமூகத்தைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!