தமிழக அரசு பணிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு – அரசாணை வெளியீடு!

0
தமிழக அரசு பணிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு - அரசாணை வெளியீடு!
தமிழக அரசு பணிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு - அரசாணை வெளியீடு!
தமிழக அரசு பணிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு – அரசாணை வெளியீடு!

தமிழக அரசுப்பணிகளில் வேலைவாய்ப்பிற்காக, மாற்றுத் திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு செய்து இது தொடர்பாக அரசாணை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதனை கண்காணிக்க உயர்மட்ட குழு ஒன்றும் அரசால் அமைக்கப்பட்டுள்ளது.

இட ஒதுக்கீடு:

பொதுவாக படித்து பட்டம் பெற்ற ஒவ்வொரு பட்டதாரிகளுக்கும் ஏதாவதொரு அரசுத்துறைகளில் பணிபுரிய வேண்டும் என்பது கனவாக இருக்கும். அந்த வகையில் தமிழகத்தில் கூட அரசு வேலைக்காக காத்திருக்கும் நபர்கள் லட்சக்கணக்கில் இருக்கின்றனர். இப்போது அரசுத்துறைகளில் ஏற்படும் காலியிடங்கள் அனைத்தும் தேர்வுகள் மூலமே நிரப்பப்பட்டு வந்தாலும் இதில் இட ஒதுக்கீடு என்பது முக்கிய பங்காற்றி வருகிறது. அந்த வகையில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு, பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இட ஒதுக்கீடு என பல வகைகளில் இந்த அரசு வேலைகளுக்கான இடஒதுக்கீடு உள்ளது.

இந்திய அலுவலக நிர்வாகங்களுக்கு ஷாக் – அடுத்த 6 மாதங்களில் 86% ஊழியர்கள் ராஜினாமா!

அந்த வகையில் மாற்றுத் திறனாளிகளுக்கும் அரசு வேலைவாய்ப்பில் 4 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என அரசாணை ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பில், தமிழகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம் 2016ல் வலியுறுத்தப்பட்டுள்ள படி, அரசு வேலைவாய்ப்பில் 4 சதவீத இட ஒதுக்கீட்டை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க ஏதுவாக காலிப்பணியிடங்கள் கண்டறியப்பட்டு பணி நியமனம் செய்யப்படும் என்றும் இதற்காக சிறப்பு உயர்மட்ட குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Exams Daily Mobile App Download

இதற்கான குழுவில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அரசு செயலர் தலைவராகவும், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை செயலர், மனிதவள மேம்பாட்டுத்துறை செயலர், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் செயலர், மருத்துவ பணியாளர் தேர்வு வாரிய செயலர் உட்பட 8 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த குழு மாற்றுத்திறனாளிகளுக்கு அரசுத் துறைகள், அரசு சார்பு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், கழகங்கள், வாரியங்கள், பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் இருக்கும் வேலைவாய்ப்புகளை கண்டறிந்து 4 சதவீத இட ஒதுக்கீட்டின் படி வேலைவாய்ப்புகளை அளிக்க இருக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here