மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி (DA) உயர்வு – மே 31ம் தேதி அறிவிப்பு?

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி (DA) உயர்வு - மே 31ம் தேதி அறிவிப்பு?
மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி (DA) உயர்வு - மே 31ம் தேதி அறிவிப்பு?
மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி (DA) உயர்வு – மே 31ம் தேதி அறிவிப்பு?

சமீபத்தில் வெளிவந்துள்ள 7வது ஊதியக் குழுவின் தகவலின் படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த முறை அகவிலைப்படி (DA) உயர்வு 4% ஆக இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த முக்கிய அப்டேட் மே 31ம் தேதி வெளியாக வாய்ப்புள்ளது.

அகவிலைப்படி உயர்வு

இப்போது அடுத்த அகவிலைப்படி (DA) உயர்வுக்காக காத்திருக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு, இது குறித்த புதிய அப்டேட் வரும் மே 31ம் தேதியன்று வெளியாகும் என தகவல்கள் பெறப்பட்டுள்ளது. அதாவது, மே 31, 2022 அன்று, அடுத்த தவணைக்கான அகவிலைப்படி தொகை எவ்வளவு அதிகரிக்கும் என்று மீண்டும் ஒருமுறை மதிப்பிடப்படும். அந்த வகையில் மே 31ல் ஏஐசிபிஐ குறியீட்டின் புதிய எண்கள் வரவுள்ளன. மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது வரை 34% அகவிலைப்படி (DA) வழங்கப்படுகிறது. ஆனால், அடுத்த அகவிலைப்படியில் கூடுதல் திருத்தம் செய்யப்பட உள்ளது.

அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – மேரா ரேஷன் ஆப்! முழு விவரம் இதோ!

தற்போதைய நிலவரப்படி, அகவிலைப்படி (DA) தொகை 4% அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இது ஆகஸ்ட் 2022ல் அறிவிக்கப்படலாம். பொதுவாக 7வது ஊதியக் குழுவின் படி, மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஆண்டுக்கு இருமுறை திருத்தம் செய்யப்படுகிறது. இது ஆண்டின் தொடக்கத்தில் (ஜனவரி) மற்றும் இரண்டாம் பாதியின் தொடக்கத்தில் (ஜூலை) ஒரு முறை அறிவிக்கப்படுகிறது. அந்த வகையில் 2022 ஆம் ஆண்டிற்கான முதல் தவணை அகவிலைப்படி தொகை 34 சதவீதமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, நுகர்வோர் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழ்நிலையில், அகவிலைப்படி கூடுதலாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exams Daily Mobile App Download

இதற்கு முன்னதாக ஏப்ரலில் வந்த ஏஐசிபிஐ குறியீடு 1% அதிகரித்தது. இதை தொடர்ந்து அகவிலைப்படி அதிகரிப்பதற்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டில் பணவீக்க எண்கள் மே 31 அன்று வர உள்ளன. இதில், ஏப்ரல் மாதத்திற்கான பணவீக்க எண்கள் புதுப்பிக்கப்படும். இந்த எண்ணிக்கை இதுவரை 126 ஆக உள்ளது. தற்போது, அடுத்த அகவிலைப்படி உயர்வு 3% வரை இருக்கலாம் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில், அடுத்த மூன்று மாதங்களில் குறியீடு இன்னும் ஏற்றம் காட்டினால் DA உயர்வு 4% ஆகவும் இருக்கலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!