
TN TET ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – ஜூலை மாதத்தில் தேர்வு நடத்த வாய்ப்பு!
இரண்டு ஆண்டுகள் கழித்து இந்தாண்டு தான் ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெற இருக்கிறது. தேர்வு நடைபெற இருக்கும் தேதியை மட்டும் அறிவிக்காமலேயே இருக்கின்றனர். இந்நிலையில் ஆசிரியர் தகுதி வாரியம் ஜூலை மாதத்தில் தேர்வு நடக்க வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது.
ஆசிரியர் தகுதி தேர்வு:
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உள்ள காலிபணியிடங்களை நிரப்ப ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. மார்ச் 14 முதல் ஏப்ரல் 26 ஆம் தேதி வரைக்கும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெற இருப்பதால் இது வரை 6.3 லட்சத்திற்கும் அதிகமானோர் தகுதி தேர்விற்கு விண்ணப்பித்துள்ளனர். ஆசிரியர் தகுதி தேர்வு மொத்தமாக இரண்டு தாள்களை கொண்டது. முதல் தாளில் தகுதி பெற்றவர்கள் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கற்பிக்கலாம்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி (DA) உயர்வு – மே 31ம் தேதி அறிவிப்பு?
இரண்டாம் தாளில் தகுதி பெற்றவர்கள் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கற்பிக்கலாம். பி.எட் படித்தவர்கள் முதல் தாள் மற்றும் இரண்டாம் தாள் இரண்டையுமே எழுதலாம். இரண்டு தாள்களிலும் 150 கேள்விகள் இடம் பெற்றிருக்கும். ஒவ்வொரு கேள்விக்கும் 1 மதிப்பெண் வீதம் 150 மதிப்பெண்ணுக்கு தேர்வு நடைபெறும். தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண் வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும். 18 வயது பூர்த்தி செய்தவர்கள் அனைவருமே ஆசிரியர் தகுதி தேர்வினை எழுதலாம்.
Exams Daily Mobile App Download
ஆசிரியர் தகுதி தேர்விற்கான பாடத்திட்டங்கள் அனைத்தும் சமீபத்தில் வெளியிடப்பட்டிருந்தது. ஆசிரியர் தகுதி தேர்வு மட்டுமே ஒரு ஆண்டில் இரண்டு முறை நடைபெறுகிறது. ஆசிரியர் தகுதி தேர்வு எந்த தேதியில் நடைபெற இருக்கிறது என்பதற்கான அறிவிப்பை மட்டும் CTET தகுதி வாரியம் வெளியிடவில்லை. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை விட்ட பிறகு தான் தேர்வு நடத்த முடியும் என்பதால் விடுமுறைக்காக காத்து கொண்டிருக்கின்றனர். பெரும்பாலும் ஜூலை மாதத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெற வாய்ப்பிருக்கிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.