திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிட்டுள்ளோர் கவனத்திற்கு – 20 நிமிடத்தில் விற்று தீர்ந்த டிக்கெட்டுகள்!

0
திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிட்டுள்ளோர் கவனத்திற்கு - 20 நிமிடத்தில் விற்று தீர்ந்த டிக்கெட்டுகள்!
திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிட்டுள்ளோர் கவனத்திற்கு - 20 நிமிடத்தில் விற்று தீர்ந்த டிக்கெட்டுகள்!
திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிட்டுள்ளோர் கவனத்திற்கு – 20 நிமிடத்தில் விற்று தீர்ந்த டிக்கெட்டுகள்!

திருப்பதி ஏழுமலையான் திருக்கோயிலில் ஜனவரி மாதத்திற்கான ரூ.300 கட்டண தரிசன டிக்கெட்டுகள் இன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்ட 20 நிமிடத்தில் 4.52 லட்சம் டிக்கெட்டுகள் விருப்பனையாகி உள்ளது.

ஆன்லைன் டிக்கெட்:

கொரோனா தாக்கம் குறைந்ததை அடுத்து ஆந்திராவில் உள்ள புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோயிலில் முன்பதிவு அடிப்படையில் மீண்டும் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் 20 ம் தேதி அடுத்த மாதத்திற்கான முன்பதிவு தொடங்கப்படுகிறது. கோயில் இணையதளம் மூலம் 300 ரூபாய் தரிசன டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது. முன்பதிவு செய்யப்பட்ட பக்தர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் கொரோனா அச்சம் காரணமாக பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு மாதமும் அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கையும் தேவஸ்தானம் அதிகரித்து வருகிறது.

CBSE 10, 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – அமைச்சரிடம் முக்கிய கோரிக்கை!

இந்த நிலையில் தற்போது தேவஸ்தானம் உதய அஸ்தமன சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. காலை நடைபெறும் பூஜை முதல் இரவு நடைபெறும் ஏகாந்த சேவை வரை பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி பக்தர்கள் 25 ஆண்டுகளுக்கு உதய அஸ்தமன சேவையில் கலந்து கொள்ளலாம். இதற்கான கட்டணம் 1 கோடி ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தற்போது வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பையொட்டி ஜனவரி மாதத்திற்கான ரூ.300 கட்டண தரிசன டிக்கெட்டுகள் திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் இன்று காலை 9 மணிக்கு வெளியிடப்பட்டது.

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு – மாநில அரசு நடவடிக்கை!

வெளியிடப்பட்டு இருபதே நிமிடத்தில் சுமார் 4.52 லட்சம் டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தது. திருப்பதி செல்ல லட்சக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் டிக்கெட் முன்பதிவு செய்ய முயன்றதால் இணையதள கோளாறு ஏற்பட்டது. இதழ் பக்தர்கள் அவதிக்குள்ளாகினர். மேலும் நாளை காலை 9 மணிக்கு நாளைக்கு 5 ஆயிரம் இலவச தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படவுள்ளது. நேரடி இலவச டிக்கெட்டுகள் டிசம்பர் 31ம் தேதி வரை வழங்கப்படும் ஸ்ரீனிவாசன் விசுவாசம் மற்றும் வழிப்பறி ஆகிய 3 இடங்களில் இதற்கான டிக்கெட் கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here