மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) தொகை 38% ஆக உயர்வு? முழு விவரம் இதோ!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) தொகை 38% ஆக உயர்வு? முழு விவரம் இதோ!
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) தொகை 38% ஆக உயர்வு? முழு விவரம் இதோ!
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) தொகை 38% ஆக உயர்வு? முழு விவரம் இதோ!

சமீபத்தில் கடந்த மார்ச் மாதத்திற்கான AICPI புள்ளி விவரங்கள் வெளியாகி இருக்கும் நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த முறை அகவிலைப்படி தொகை 4% ஆக உயர்த்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

அகவிலைப்படி உயர்வு

தற்போது 7வது ஊதியக் குழுவின் கீழ் ஊதியம் பெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு வரும் நாட்களில் பம்பர் பரிசு அறிவிப்பு இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது, அதிகரித்து வரும் பணவீக்கத்தை சமாளிக்க ஊழியர்களின் அகவிலைப்படி தொகை பெரிய அளவில் அதிகரிக்கப்படலாம் என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த தகவல் ஆனது, மார்ச் மாதத்தில் வந்த AICPI குறியீட்டின் எண்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, வரும் ஜூலை முதல் ஆகஸ்ட் மாதங்களில் அகவிலைப்படி தொகை மேலும் 4% அதிகரிக்கலாம் என தெரிகிறது.

ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு ஹாப்பி நியூஸ் – போட்டோவை மாற்றுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

இருப்பினும், அடுத்த மூன்று மாதங்களுக்கான AICPI எண்கள் இன்னும் வரவில்லை. இதற்கிடையில் அதிகரித்து வரும் பணவீக்கத்தைப் பார்க்கும்போது, வரும் நாட்களில் டிஏ உயர்வு இன்னும் அதிகமாக இருக்கலாம் என்று தெரிகிறது. குறிப்பாக, ஒட்டுமொத்த அகவிலைப்படி (DA) உயர்வு 38% ஐ தாண்டலாம். இதற்கு முன்னதாக ஜனவரி மற்றும் பிப்ரவரி 2022ல் AICPI குறியீட்டில் சிறிது சரிவு ஏற்பட்டது. ஆனால், மார்ச் மாத எண்ணிக்கையில் பெரிய ஏற்றம் ஏற்பட்டுள்ளது. இது மீண்டும் அகவிலைப்படி தொகையை அதிகரிக்க வழிவகை செய்துள்ளது. அந்த வகையில் மார்ச் 2022 இல் AICPI குறியீடு 1 புள்ளி உயர்ந்துள்ளது.

Exams Daily Mobile App Download

இதன் காரணமாக, அடுத்த அகவிலைப்படி உயர்வு 4% என அதிகரிக்க வாய்ப்புள்ளது. இருப்பினும், ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களுக்கான AICPI எண்கள் இன்னும் வரவில்லை. இது இன்னும் அதிகமாகத் தொடர்ந்தால், DA 4% அல்லது அதற்கும் கூடுதலாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமாக, மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை என்ற அளவில் அகவிலைப்படி வழங்கப்படுகிறது. அந்த வகையில் ஜனவரி 2022 வரை, மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% DA உயர்வுடன் மொத்த DA தொகை 34 சதவீதமாக உயர்ந்துள்ளது. இப்போது அடுத்த அகவிலைப்படி உயர்வு ஜூலை மாதம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here