TNPSC 429 காலிப்பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு – செய்திக்குறிப்பு வெளியீடு!

0
TNPSC 429 காலிப்பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு - செய்திக்குறிப்பு வெளியீடு!
TNPSC 429 காலிப்பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு - செய்திக்குறிப்பு வெளியீடு!
TNPSC 429 காலிப்பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு – செய்திக்குறிப்பு வெளியீடு!

TNPSC தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட தமிழ்நாடு வேளாண் விரிவாக்க சார்நிலைப் பணிகளில் அடங்கிய உதவி வேளாண் அலுவலர் பணிக்கு வரும் டிசம்பர் 15 மற்றும் 16ம் தேதிகளில் மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு நடைபெற உள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

TNPSC அறிவிப்பு:

தமிழகத்தில் பல்வேறு அரசுத் துறைகளுக்கான தேர்வு TNPSC தேர்வாணையத்தால் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு வேளாண் விரிவாக்க சார்நிலைப் பணிகளில் அடங்கிய உதவி வேளாண் அலுவலர் பணிக்கு கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்ட அறிக்கையின் பேரில் கடந்த ஏப்ரல் மாதம் 17ம் தேதி எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. பின்னர் அதற்கான தேர்வு முடிவுகள் கடந்த செப்டம்பர் 23ம் தேதி அன்று TNPSC தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டது.

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு 2022 | 1,088 கோடி ரூபாய் ஒதுக்கீடு!

தற்போது இந்த தெரிவு தொடர்பான மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு சென்னை – 3 தேர்வாணையச்சாலை பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் கோட்டை ரயில் நிலையம் அருகில் உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு வரும் டிச.15 மற்றும் 16ம் தேதிகளில் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் கலந்தாய்விற்கு தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் மதிப்பெண், ஓட்டுமொத்த தரவரிசை எண், இட ஒதுக்கீட்டு விதி மற்றும் காலிப்பணியிடங்கள் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட தற்காலிக பட்டியல் TNPSC இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

சபரிமலையில் 40,000 பக்தர்களுக்கு அனுமதி, ஆன்லைன் முன்பதிவு – அமைச்சரின் முக்கிய அறிவிப்புகள்!

மேலும் மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு நடைபெறும் நாள், நேரம் மற்றும் விபரங்கள் அடங்கிய நுழைவு கடிதத்தினை TNPSC தேர்வாணைய அதிகாரபூர்வ இணையதளமான https://www.tnpsc.gov.in/ ல் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு அதற்கான விபரம் SMS மற்றும் e-Mail மூலம் தெரிவிக்கப்படும். கலந்தாய்விற்கு அனுமதிக்கப்படும் அனைவரும் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என்று உறுதியில்லை. மேலும் இந்த கலந்தாய்வில் கலந்து கொள்ளாத விண்ணப்பதாரர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Official Notification

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!