தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு 2022 | 1,088 கோடி ரூபாய் ஒதுக்கீடு!
தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரகளுக்கு 2022ம் ஆண்டிற்கான பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்க 1,088 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு கார்டுக்கும் 20 வகையான பொருட்கள் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
பரிசுத்தொகுப்பு:
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் மலிவு விலையில் அரிசி, பருப்பு, சர்க்கரை, சமையல் எண்ணெய், போன்ற பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் விதிக்கப்பட்ட ஊரடங்கு காலத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச மளிகை தொகுப்பு, கொரோனா நிவாரண தொகை போன்றவைகள் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக காய்கறிகளின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனையடுத்து ரேஷன் கடைகள் மூலம் குறைவான விலையில் காய்கறிளை வழங்க அரசு திட்டமிட்டு தற்போது சில மாவட்டங்களில் காய்கறிகளும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சபரிமலையில் 40,000 பக்தர்களுக்கு அனுமதி, ஆன்லைன் முன்பதிவு – அமைச்சரின் முக்கிய அறிவிப்புகள்!
இதனால் வெளி சந்தைகளில் காய்கறிகளின் விலை கணிசமாக குறைந்து வருகிறது. அதனை தொடர்ந்து தற்போது 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் தமிழகத்தில் மக்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் வெள்ளம், பச்சரிசி, திராட்சை,முந்திரி இலவச வேட்டி, சேலை, கரும்பு போன்ற பொருட்கள் வழங்கப்படும். மேலும் ரொக்க பணமும் வழங்கப்படும்.
தமிழகத்தில் பள்ளிகளுக்கு நாளை (நவ.27) விடுமுறை அறிவிப்பு – மாவட்ட நிர்வாகங்கள் உத்தரவு!
ஆனால் இந்த வருடம் ரொக்கப்பணம் குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்த வருடம் பொங்கல் பரிசுத்தொகுபில் 100 மிலி ஆவின் நெய் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பொங்கல் பண்டிகை தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் 2.15 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்க 1,088 கோடி ரூபாய் ஒதுகீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் 505 ரூபாய் மதிப்புள்ள 20 வகையான பொருட்கள் பொங்கல் பரிசுத்தொகுப்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.