தமிழகத்தில் யோகா, இயற்கை மருத்துவம், பிஎன்ஒய்எஸ் மருத்துவ படிப்பு – கால அவகாசம் நீட்டிப்பு!

0
தமிழகத்தில் யோகா, இயற்கை மருத்துவம், பிஎன்ஒய்எஸ் மருத்துவ படிப்பு - கால அவகாசம் நீட்டிப்பு!
தமிழகத்தில் யோகா, இயற்கை மருத்துவம், பிஎன்ஒய்எஸ் மருத்துவ படிப்பு - கால அவகாசம் நீட்டிப்பு!
தமிழகத்தில் யோகா, இயற்கை மருத்துவம், பிஎன்ஒய்எஸ் மருத்துவ படிப்பு – கால அவகாசம் நீட்டிப்பு!

தமிழகத்தில் யோகா, இயற்கை மருத்துவம், பிஎன்ஒய்எஸ் மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க நேற்று கடைசி நாளாக இருந்தது. தற்போது இதற்கு 07.12.2021 வரை கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

கால அவகாசம் நீட்டிப்பு:

தமிழகத்தில் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சுயநிதி யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகளில் 2021-22 ஆம் ஆண்டிற்கான பிஎன்ஒய்எஸ் மருத்துவ படிப்புக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்று கொண்டிருக்கிறது. மேலும் பிஎன்ஒய்எஸ் மருத்துவ பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் தங்களின் 12-ஆம் வகுப்பு பாடத்தில் அறிவியலை முதன்மை பாடமாக எடுத்து தேர்ச்சி பெற்றிக்க வேண்டும். இந்த விண்ணப்பங்கள் 03.11.2021 அன்று முதல் பெறப்பட்டன.

TNPSC 365 காலிப்பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு – செய்திக்குறிப்பு வெளியீடு!

பிஎன்ஒய்எஸ் மருத்துவ பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க www.tnhealth.tn.gov.in  என்ற இணையதளத்தை அணுகலாம். மேலும் இந்த இணையதளம் மூலம் பி.என்.ஒய்.எஸ், படிப்புக்கான அரசு மற்றும் சுயநிதி சிறுபான்மையினர் அல்லது சிறுபான்மையினரற்ற யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகளின் விவரம், தகவல் தொகுப்பேடு, பொது மற்றும் சிறப்பு விண்ணப்ப பதிவிறக்கம் மற்றும் அவற்றின் கட்டணம், குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள், இட ஒதுக்கீடு விதிமுறைகள், படிப்புகளின் விவரம், சிறப்பு பிரிவினர், அடிப்படைத் தகுதி, கல்வி கட்டணம் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம்.

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு 2022 | 1,088 கோடி ரூபாய் ஒதுக்கீடு!

அத்துடன் பிஎன்ஒய்எஸ் மருத்துவ பட்ட படிப்புக்கு விண்ணப்பிக்க நேற்று கடைசி நாளாக இருந்தது. ஆனால் தற்போது 07.12.2021 வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்ப படிவம் மற்றும் தகவல் தொகுப்பினை பதிவிறக்கம் செய்ய 07.12.2021 மாலை 05.00 மணி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம் தபால் அல்லது கூரியர் சேவை வாயிலாக சமர்ப்பிக்க அல்லது நேரில் சென்று விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கால நீட்டிப்பு செய்யப்பட்ட கடைசி நாள் டிசம்பர் 7 மாலை 05.30 மணி வரை என்றும் தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!