மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு 356% அகவிலைப்படி உயர்வு – தகுதி உள்ளிட்ட விவரங்கள்!

0
மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு 356% அகவிலைப்படி உயர்வு - தகுதி உள்ளிட்ட விவரங்கள்!
மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு 356% அகவிலைப்படி உயர்வு - தகுதி உள்ளிட்ட விவரங்கள்!
மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு 356% அகவிலைப்படி உயர்வு – தகுதி உள்ளிட்ட விவரங்கள்!

மத்திய அரசுத்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ள அரசு ஊழியர்களின் DR தொகை 312 சதவிகிதத்திலிருந்து 356% சதவிகிதமாக உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புகள் ஜூலை மாத தவணையுடன் அளிக்கப்பட இருக்கிறது.

DR உயர்வு

ஓய்வுபெற்ற மத்திய ஊழியர்கள் அல்லது CPF பயனாளிகளின் DR தொகை 312 சதவிகிதத்திலிருந்து 356 சதவிகிதமாக உயர்த்தப்பட்டிருப்பதாக ஓய்வூதிய மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை அமைச்சகம் தகவல் அளித்துள்ளது. இந்த DR உயர்வுத்தொகை நவம்பர் 18, 1960 முதல் டிசம்பர் 31, 1985 வரையுள்ள காலங்களில் ஓய்வு பெற்ற மத்திய ஊழியர்களுக்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சமீபத்திய திருத்தத்தின் மூலம் மத்திய அரசுத்துறையில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு DR உயர்வு தொகை ஜூலை 1, 2021 முதல் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசு சார்பில் இலவச மின் இணைப்பு – முதல்வர் நாளை தொடக்கி வைப்பு!

இது தவிர ஜனவரி 1, 2020, ஜூலை 1, 2020 மற்றும் ஜனவரி 1, 2021 ஆகிய 3 தவணைக்குமான COF நன்மைகளும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட உள்ளது. மேலும் CPF பயனாளிகளுக்கான இழப்பீடு தொகையை அதிகரிப்பதற்கான முடிவு, 5 வது CPC தொடரின் கீழ் எடுக்கப்பட்டதாக ஓய்வூதியதாரர்கள் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – 8 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி!

அந்த வகையில் இந்த ஆண்டு ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் இந்த நடைமுறைகள் மூலம் குழு A, B, C மற்றும் D இன் கீழ் இருக்கும் CPF பயனாளிகள் ரூ .3000, ரூ.1000, ரூ.750, மற்றும் ரூ.650 அடிப்படையிலான இழப்பீடு தொகையை பெறுவார்கள். இதனுடன் ஓய்வுபெற்ற ஊழியர்களின் மற்றொரு பிரிவை சேர்ந்த ஓய்வூதியதாரர்களின் DR தொகையும் 306 சதவீதத்திலிருந்து 356 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விதியின் மூலம் விதவைகள் மற்றும் பயனாளிகளின் குழந்தைகள் மாதந்தோறும் 645 ரூபாய் இழப்பீடு பெறுவார்கள்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!