Post Office இல் தினமும் ரூ.50 முதலீடு செய்தால் 35 லட்ச ரூபாய் ரிட்டன்ஸ் – சூப்பரான சேமிப்பு திட்டம்!

0
Post Office இல் தினமும் ரூ.50 முதலீடு செய்தால் 35 லட்ச ரூபாய் ரிட்டன்ஸ் - சூப்பரான சேமிப்பு திட்டம்!
Post Office இல் தினமும் ரூ.50 முதலீடு செய்தால் 35 லட்ச ரூபாய் ரிட்டன்ஸ் - சூப்பரான சேமிப்பு திட்டம்!
Post Office இல் தினமும் ரூ.50 முதலீடு செய்தால் 35 லட்ச ரூபாய் ரிட்டன்ஸ் – சூப்பரான சேமிப்பு திட்டம்!

மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட அஞ்சல் சேமிப்பு திட்டங்களில் அதிகளவு லாபங்களை பெற முடியும். தற்போது Gram Suraksha Scheme என்ற சேமிப்பு திட்டம் குறித்த வட்டி விகிதம், குறைந்தப்பட்ச தொகை உள்ளிட்ட பல்வேறு பலன்களை பற்றி பார்க்கலாம்.

Gram Suraksha Scheme

இந்திய அஞ்சல் துறையில் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் நடைமுறையில் உள்ளது. இந்த சேமிப்பு திட்டங்களில் ஏராளமான வாடிக்கையாளர்கள் இணைந்து வருகின்றனர். ஏனெனில் சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலமாக நிலையான லாபமும் மற்றும் 100% பாதுகாப்புமும் முதலீட்டாளர்களுக்கு கிடைக்கிறது. அத்துடன் குறைவான முதலீடு செய்வது மூலமாக அதிகமான வட்டி தொகையும் கிடைக்கிறது. மேலும் அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருவதால் அதிக நம்பிக்கையும் ஏற்படுகிறது.

ஆவின் நூடுல்ஸ் முதல் பாயாசம் மிக்ஸ் வரை – 5 புதிய பால் பொருட்கள்! முதல்வர் அறிமுகம்!

இதில் Gram Suraksha Scheme என்ற சேமிப்பு திட்டம் மிகவும் பிரபலமான திட்டமாக உள்ளது. இத்திட்டத்தில் இணைவது மூலமாக குறைந்த நாட்களில் அதிகமான லாபங்களை பெற முடிகிறது. அதனால் நடுத்தர வர்க்கத்தை சார்ந்த மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை இத்திட்டம் பெற்றுள்ளது. Gram Suraksha திட்டத்தில் 19 வயது முதல் 55 வயது உள்ளவர்கள் வரை சேமிப்பு கணக்கை தொடங்க முடியும். அத்துடன் இதன் Sum insured அளவு ரூ.10,000 முதல் 10 லட்சம் ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் தங்களுக்கு தேவையான Sum insured அளவை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

IND vs SA : டெஸ்ட் தோல்வியிலிருந்து மீண்டு ஒருநாள் தொடரை கைப்பற்றுமா இந்தியா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

மேலும் இத்திட்டத்தில் செலுத்த வேண்டிய பிரீமியம் தொகையை மாதம், காலாண்டு, அரையாண்டு அல்லது வருடாந்திர முறையில் செலுத்த முடியும். இதையடுத்து இத்திட்டத்தில் 19 வயது நிரம்பிய நபர் இணைந்து sum insured அளவு ரூ.10 லட்சம் என்று தேர்ந்தெடுத்தால் முதிர்வு காலம் முடியும் வரை ரூ.1515 பிரீமியம் தொகை செலுத்த வேண்டும். அதன்படி 55 வயது வரை ஒவ்வொரு நாளும் ரூ.50.5 சேமித்தால் முதிர்வு காலம் முடியும் போது ரூ.31.60 லட்சம் சேமிக்க முடியும். அத்துடன் இதனை இன்னும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்தால் முதிர்வு காலம் முடியும் போது 34.60 லட்சம் ரூபாய் சேமிக்க முடிகிறது. இத்திட்டம் மூலமாக சிறு முதலீட்டாளர்கள் அதிகளவு பயன் அடைகின்றனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!