
IND vs SA : டெஸ்ட் தோல்வியிலிருந்து மீண்டு ஒருநாள் தொடரை கைப்பற்றுமா இந்தியா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
ஜனவரி 15 ஆம் முடிவடைந்த IND vs SA டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோல்வியடைந்து தொடரை நழுவவிட்டு உள்ள நிலையில் இன்று தொடங்கவிருக்கும் ஒரு நாள் தொடரை இந்திய அணி கைப்பற்றுமா என்று ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
முதல் ஒரு நாள் போட்டி:
தென்னாபிரிக்கா & இந்திய அணிகள் மோதும் முதல் ஒரு நாள் போட்டி இன்று தென்னாபிரிக்கா உள்ள போலந்து மைதானத்தில் மதியம் 2 அணிக்கு தொடங்கவுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி தொடங்கிய 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென்னாபிரிக்க அணி 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் டெஸ்ட் தொடர் தோல்வியிலிருந்து மீண்டு இந்திய அணி ஒருநாள் தொடரை கைப்பற்றுமா என்று அனைத்து தரப்பிலும் எதிர்பார்க்கப்படுகிறது.
Citigroup நிறுவனத்தில் 5,500 இளம் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு – 2023ம் ஆண்டிற்கு முன் இலக்கு!
இதற்கு முன் நடந்த இந்தியா தென்னாபிரிக்கா இடையிலான ஒரு நாள் தொடரில் 5 இல் 4 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சர்வதேச ஒரு நாள் போட்டிகளின் கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோஹ்லி விலகினார். இதை தொடர்ந்து ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார். தற்போது ரோஹித்துக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் இந்திய அணியை KL ராகுல் வழி நடத்தவுள்ளார். விராட் கோஹ்லி இன்று தொடங்கவிருக்கும் ஒருநாள் போட்டியில் KL ராகுல் தலைமையில் ஒரு பேட்ஸ்மேனாக விளையாட இருப்பதால் அவர் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
1 – 9ம் வகுப்பு வரை இன்று முதல் 3 நாட்கள் விடுமுறை | அரசு அதிரடி அறிவிப்பு!
மேலும் இந்த ஆண்டு ஒரு நாள் போட்டிகளில் விராட் கோஹ்லி சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல் MS தோனி கேப்டன் பதிவிலிருந்து விலகி விராட் கோஹ்லி தலைமையில் விளையாடியது குறிப்பிடத்தக்கது. இன்று தொடங்கவுள்ள ஒரு நாள் போட்டிகள் ஜனவரி 23 ஆம் தேதி முடிவடைகிறது. இரு அணிகளும் ஒரு நாள் தொடரில் 3 போட்டிகளில் விளையாட உள்ளன. முதல் ஒரு நாள் போட்டி இன்று நடைபெற இருப்பாதல் இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.