மத்திய அரசு ஊழியர்களுக்கு 31% DA உயர்வு? மாதம் & ஆண்டு ஊதிய விவரம் கணக்கீடு!

1
மத்திய அரசு ஊழியர்களுக்கு 31% DA உயர்வு? மாதம் & ஆண்டு ஊதிய விவரம் கணக்கீடு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு 31% DA உயர்வு? மாதம் & ஆண்டு ஊதிய விவரம் கணக்கீடு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு 31% DA உயர்வு? மாதம் & ஆண்டு ஊதிய விவரம் கணக்கீடு!

பண்டிகை காலத்தை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு 31% DA உயர்வு அளிக்கப்பட்டால் பல்வேறு நிலைகளை சேர்ந்த ஊழியர்களின் அடிப்படை சம்பள விகிதம் எவ்விதத்தில் மாற்றமடையும் என்பதை இப்பதிவில் காணலாம்.

DA உயர்வு

மத்திய அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்பட இருக்கும் ஊதிய உயர்வு மூலம் அவர்களுக்கான அகவிலைப்படி (DA) தொகையானது கணிசமான உயர்வை காணும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இப்போது மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி ஜூன் 2021 கணக்குடன் 3% அதிகரிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளிவந்துகொண்டிருக்கும் நிலையில், அது நடந்தேற்றினால் மத்திய அரசு ஊழியர்களுக்கு மாத ஊதியமும் உயர்வடையும்.

வீட்டுக் கடனுக்கு 12 மாத தவணை தள்ளுபடி – Axis வங்கி அதிரடி சலுகை!

இதற்கிடையில் 7வது ஊதிய குழு அளித்துள்ள தகவலின் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% DA அதிகரிக்கப்பட்டால் அவர்களது அடிப்படை DA விகிதம் 31% ஆக இருக்கும். அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களின் ஆண்டு ஊதியம் ரூ.6,480 முதல் ரூ.81,000 வரை அதாவது அவரவர்கள் வாங்கும் அடிப்படை ஊதியத்தை பொறுத்து DA தொகை உயரும். அதே போல மத்திய அரசு ஊழியர்களின் மாத ஊதியமும் ரூ.6,750 என்ற வகையில் கணிசமான அதிகரிப்பை காணும்.

நாட்டில் அடுத்த ஆண்டு ஊழியர்கள் எதிர்பார்க்கும் சம்பள உயர்வு – கணக்கெடுப்பு விவரங்கள்!

இப்போது ரூ.18,000 தொகையை மாத ஊதியமாக பெறும் ஊழியர்கள் 31% DA உயர்வு மூலம் ரூ.540 என்ற வகையில் DA தொகையை பெறுவார்கள். இந்த ஊதியத்தை ஒரு ஆண்டுக்கு கணக்கிடுகையில் ரூ.6,480 வரை DA தொகை கிடைக்கும். இதுவே ரூ.2,25,000 என்ற தொகையை மாத ஊதியமாக பெறும் ஊழியர்கள் 31% DA உயர்வு மூலம் மாதத்திற்கு ரூ.6,750 என்ற வகையில் வருடத்திற்கு ரூ.81,000 வரை DA தொகையை பெறுவார்கள்.

இப்போது ஒரு ஊழியரின் அடிப்படை சம்பளம் ரூ .18,000 என்றால்:
  • தற்போதுள்ளDA தொகை (28%) – ரூ. 5040/மாதம்
  • புதிய டிDA தொகை (31%) – ரூபாய் 5580/மாதம்
  • வித்தியாசம் – 5580-5040 = ரூ. 540/மாதம்
  • ஆண்டு சம்பளம் 540X12 = ரூ.6,480 அதிகரிப்பு
ஊழியரின் அடிப்படை சம்பளம் ரூ.2,25,000 என்றால்:
  • தற்போதுள்ள DA தொகை (28%) ரூ .63,000/மாதம்
  • புதிய DA தொகை (31%) – ரூ.69,750/மாதம்
  • வித்தியாசம் – 69,750 -63,000 = ரூ. 6,750/மாதம்
  • ஆண்டு சம்பளம் – 6,750 X 12 = ரூ 81,000 ஆகும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. Let the govt., announce and then post messages related to DA hike.,influencing promotion of your news app by posting messages with ? mark or ! mark. Some times we could observe other vital/sensitive messages were not posted ontime in this app. Thanks

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!