தமிழகத்தில் பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் மீது 30 மாணவர்கள் புகார்!!

0
30 students complain about school and college teachers in Tamil Nadu !!
30 students complain about school and college teachers in Tamil Nadu !!
தமிழகத்தில் பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் மீது 30 மாணவர்கள் புகார்!!

தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் மாணவிகளிடம் அத்துமீறி நடந்ததாக 30 மாணவர்கள் துணை கமிஷனரை தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளனர். மேலும் புகார்களின் உண்மை தன்மையை காவலர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

ஆசிரியர்கள் மீது புகார்:

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மாணவர்களின் நலன் கருதி அரசு பள்ளி, கல்லுரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அளித்துள்ளது. மாணவர்களுக்கு பாடங்கள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆன்லைன் வகுப்பில் சென்னை பத்ம சேஷாத்திரி பாலபவன் பள்ளியை சேர்ந்த ராஜகோபாலன் என்ற ஆசிரியர் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. இதனால் அவர் கைது செய்யப்பட்டார். போக்சோ சட்டத்தின் கீழ் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

TN Job “FB  Group” Join Now

இது குறித்து நேரில் விசாரிக்க சென்ற போது மாவட்ட குழந்தைகள் நல அலுவலரிடம், துணை கமிஷனரிடம் பள்ளி நிர்வாகம் ஒத்துழைப்பு வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. பத்ம சேஷாத்திரி பள்ளி தாளாளர் ஷீலா ராஜேந்திரா, முதல்வர் கீதா கோவிந்தராஜன் ஆகியோருக்கு போலீசார் சம்மன் அனுப்பி அவர்களிடம் நேற்று முன்தினம் சென்னை அசோக் நகர் காவல் நிலையத்தில் 3 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.

மே 29 முதல் ஜூன் 7 வரை தீவிர முழு ஊரடங்கு – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!!

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு துணை கமிஷனர் ஜெயலட்சுமி பள்ளியில் பாலியல் தொந்தரவு குறித்து புகார் அளிக்க தன்னுடைய 94447 72222 என்ற செல்போன் எண்ணிற்கு அழைக்கலாம் என கேட்டுக் கொண்டார். இதையடுத்து துணை ஆணையர் ஜெயலட்சுமியின் செல்போன் எண்ணுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த மாணவிகள், முன்னாள் மாணவிகள் என சுமார் 30 பேர் தங்கள் ஆசிரியர்களின் அத்துமீறல்கள் தொடர்பாக புகார் தெரிவித்ததாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!