“விக்ரம்” திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக 3 சீரியல் நடிகைகள்? ஷிவானி முதல் மைனா வரை!

0
"விக்ரம்" திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக 3 சீரியல் நடிகைகள்? ஷிவானி முதல் மைனா வரை!
“விக்ரம்” திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக 3 சீரியல் நடிகைகள்? ஷிவானி முதல் மைனா வரை!

“விக்ரம்” திரைப்படத்தில் நடிக்கவிருக்கும் விஜய் சேதுபதிக்கு ஷிவாங்கி தான் ஜோடியாக நடிக்கிறார் என்று தகவல் வெளிவந்ததை தொடர்ந்து, தற்போது மேலும் 2 சீரியல் நடிகைகள் அவருக்கு ஜோடியாக இணைய இருக்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“விக்ரம்” திரைப்படம்:

தமிழ் சினிமாவில் புதிதாக களம் இறங்கி இருக்கும் இயக்குனர் தான், லோகேஷ் கனகராஜ். தற்போது இவர் உலகநாயகன் கமல்ஹாசனை வைத்து புதிதாக “விக்ரம்” என்ற திரைப்படத்தினை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் ஆகிவை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றது. தற்போது இந்த படத்திற்கான ஷூட்டிங் காரைக்குடி அருகே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வில்லன்களாக மலையாள நடிகர் பகத் பாசில் மற்றும் விஜய் சேதுபதி நடிக்க இருக்கின்றனர். இதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.

கோபி மீது சந்தேகப்படும் பாக்கியா, ராதிகாவுடன் பார்த்ததை கூறிய செல்வி – இன்றைய எபிசோட்!

இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி “மாஸ்டர்” படத்தினை போலவே மிரட்டல் வில்லனாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவருக்கு ஜோடியாக “பிக் பாஸ் 4” புகழ் ஷிவாங்கி நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருந்தது. தற்போது இவரை தொடர்ந்து மேலும் 2 சீரியல் நடிகைகள் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி சோகளின் மூலமாக புகழ் அடைந்த ‘மைனா’ நந்தினி நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

TN Job “FB  Group” Join Now

அதே போல் பிரபல சீரியல்களில் நடித்த மஹேஸ்வரியும் இந்த திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் என கூறப்பட்டுள்ளது. அப்படி என்றால், விஜய் சேதுபதிக்கு இந்த திரைப்படத்தில் 3 ஜோடியா? என்று ரசிகர்கள் குழப்பம் அடைந்து வருகின்றனர். ‘மைனா’ நந்தினி மற்றும் மஹேஸ்வரி இருவரும் ஏற்கனவே ஒரு சில திரைப்படங்களில் நடித்து இருக்கின்றனர். இருந்தும், இந்த திரைப்படம் இவர்களது திரைப்பயணத்தில் முக்கிய திருப்பமாக இருக்கும் என்றால் மிகையாகாது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!