நடப்பு நிகழ்வுகள் – 29 ஜூன் 2023

0
நடப்பு நிகழ்வுகள் - 29 ஜூன் 2023
நடப்பு நிகழ்வுகள் - 29 ஜூன் 2023
நடப்பு நிகழ்வுகள் – 29 ஜூன் 2023

தேசிய செய்திகள்

தொழில் மற்றும் கல்வி துறையில் பாதுகாப்பு மற்றும் R&D-யை ஊக்குவிக்க அனுசந்தன் சிந்தன் சிவிரை DRDO ஏற்பாடு செய்துள்ளது.

  • தொழில்துறை மற்றும் கல்வித்துறையில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான DRDO, புதுதில்லியில் அனுசந்தான் சிந்தன் ஷிவிரை ஜூன் 27 அன்று ஏற்பாடு செய்துள்ளது.
  • இந்த சிந்தன் சிவிரில் பாதுகாப்பு தொழில்நுட்பங்களில் உள்நாட்டு கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் மற்றும் தன்னம்பிக்கையை வளர்க்கும் 75 தொழில்நுட்ப முன்னுரிமை விதிகளின் இந்த பட்டியலானது வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர் ‘மீன் நோய் அறிக்கை’(Report Fish Disease)செயலியை அறிமுகப்படுத்தியுள்ளார்.

  • விவசாயிகள் மற்றும் மீனவர்கள் அடிப்படையிலான நோய் அறிக்கை முறையை வலுப்படுத்துவதற்காகவும் நாட்டில் நீர்வாழ் உயிரி நோய்களைப் பொது மக்கள் புகாரளிப்பதை மேம்படுத்தவும், மத்திய மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீ பர்ஷோத்தம் ரூபாலா, “மீன் நோய் அறிக்கை” (Report Fish Disease-RFD) என்ற செயலியை ஜூன் 28 அன்று அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த செயலியானது நீர்வாழ் விலங்கு நோய்களுக்கான தேசிய கண்காணிப்பு திட்டத்தின் (NSPAAD) கீழ் ICAR-மீன் மரபணு வளங்களின் தேசிய பணியகம் (ICAR-NBFGR) உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
  • விவசாயிகள்  மற்றும் மீனவர்கள் அடிப்படையிலான அறிக்கையிடலை மேம்படுத்தவும், அவர்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின் அவற்றிற்காக அறிவியல் ஆலோசனைகளைப் பெறுவதற்காகவும் நோய்களால் ஏற்படும் இழப்புகளைக் குறைக்கவும் மற்றும் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும் இந்த கைபேசி செயலியானது அனைத்து மக்களுக்கும் உதவுவதை நோக்கமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்திரா காந்தி தேசிய மையமானது “உலக பாரம்பரியத்தின் வங்கி” என்ற மாபெரும் கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது.

  • இந்திரா காந்தி தேசிய மையமானது “ஒரே பூமி ஒரு குடும்பம் ஒரு எதிர்காலம்” அல்லது “வசுதைவ குடும்பகம்” என்ற கருப்பொருளுடன் “உலக பாரம்பரியத்தின் மீதான வங்கி” என்ற மாபெரும் கண்காட்சியை ஜூன் 30 அன்று  ஏற்பாடு செய்யவுள்ளது.
  • இந்த மாபெரும் கண்காட்சியானது IGNCA இல் யுனெஸ்கோவால் பட்டியலிடப்பட்ட முக்கிய மற்றும் பழமைவாய்ந்த உலக பாரம்பரிய தளங்களை சித்தரிக்கும் ரூபாய் நோட்டுகளை ஒரு தனித்துவமான முறையில் உலக அரங்கிற்கு எடுத்து செல்வதை நோக்கமாக கொண்டுள்ளது.

முன்னாள் படைவீரர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்குவதற்காக தனியார் நிறுவனத்துடன் DGR ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.

  • முன்னாள் ராணுவத்தினரை, சிவிலியன் தொழில்களில் தடையற்ற ஒருங்கிணைப்பை ஏற்படுத்தவும் அவர்களுக்கு தங்குதடையற்ற ஒரு பொது வெளி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காகவும் பாதுகாப்பு அமைச்சகத்தின் முன்னாள் படைவீரர் நலத்துறையின் கீழ் இயக்குனரக பொது மீள்குடியேற்றமானது(DGR) தனியார் நிறுவனமான IBM உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை(MoU) மேற்கொண்டுள்ளது.
  • முன்னாள் ராணுவத்தினர் மற்றும் தனியார் நிறுவனங்களை ஒரே தளத்தில் கொண்டு வருவதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக தடையற்ற வேலைவாய்ப்புகளை உருவாக்குவதை நோக்கமாக கொண்டு இந்த ஒப்பந்தமானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வாகனத் தொழிலில் திறனை மேம்படுத்துவதற்கான ஒரு  மூலோபாய கூட்டாண்மை ஒப்பந்தத்தில் சாலிஸ் இந்தியா நிறுவனம் மற்றும் iACE இணைந்து கையெழுத்திட்டுள்ளது.

  • டிஜிட்டல் தொழிநுட்ப தீர்வுகளை வழங்கும் முன்னணி நிறுவனமான SOLIZE India ஜூன் 28 அன்று இன்டர்நேஷனல் ஆட்டோமொபைல் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் (iACE) உடன் வாகனத் தொழிநுட்பத்தில் திறனை மேம்படுத்துவதற்கான ஒரு  மூலோபாய கூட்டாண்மை ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.
  • கற்றல் அனுபவத்தை வழங்குவதற்காக இந்த மையமானது சமீபத்திய ‘நவீன-கலை’ உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப ஆய்வகங்களை வழங்குவதன் மூலம் நாட்டின் ஆட்டோமொபைல் துறையில் புது மற்றும் விரும்பத்தகு மாற்றங்களை ஏற்படுத்துவதை உறுதிப்படுத்துகிறது..

கியூஎஸ் உலக பல்கலைக்கழக தரவரிசையில் ஐ.ஐ.டி பம்பாய் உலகளவில் 149 வது இடத்தை வகிக்கிறது.

  • QS (Quacquarelli Symonds) உலக பல்கலைக்கழக தரவரிசையின்படி, IIT பம்பாய் ஆனது இந்தியாவில் முதலாவது இடத்தையும், உலகளவில் 149வது இடத்தையும் பிடித்துள்ளது. 
  • கடந்த ஆண்டு 172வது இடத்தில் இருந்த இந்நிறுவனம், இந்த ஆண்டு 149வது இடத்திற்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

குஜராத் மாநில அரசாங்கமானது அமெரிக்க நிறுவனமான மைக்ரானுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.

  • குஜராத் மாநில அரசாங்கமானது ஜூன் 28 அன்று அகமதாபாத் மாவட்டத்தில் ஒரு குறைக்கடத்தி ஆய்வகம் மற்றும் சோதனை சிறப்பு வசதியை உருவாக்க அமெரிக்க கணினி சேமிப்பு சிப் தயாரிப்பாளர் மைக்ரான் தொழில்நுட்பத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
  • இந்தத் திட்டத்தின் கீழ், அமெரிக்க நிறுவனம் மத்திய அரசிடமிருந்து திட்ட மதிப்பீட்டில் 50 சதவீதத்தையும், குஜராத் மாநில அரசிடமிருந்து திட்ட மதிப்பீட்டில் 20 சதவீதத்தையும் பெரும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த வசதியானது வரும் ஆண்டுகளில் கிட்டத்தட்ட 5,000 நேரடி வேலைகள் மற்றும் 15,000 சமூக வேலைகளை உருவாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய உற்பத்திச் செலவு மற்றும் மேலாண்மைக் கணக்கியல் நிறுவனத்துடன் ஸ்கோப் நிறுவனம் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.

  • நிலையான வளர்ச்சிக்கான பொது நிறுவனங்களின் அமைப்பு(ஸ்கோப்) மற்றும் இந்திய உற்பத்திச் செலவு மற்றும் மேலாண்மைக் கணக்கியல் நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையே அறிவு கூட்டாண்மை மேம்பாட்டுக்கான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தமானது (MoU) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • திறன் மேம்பாட்டு திட்டங்களை வளர்ச்சியை உறுதி செய்தல், ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகள் பற்றிய விரிவான தொகுப்பினை உருவாக்குதல், துறை சார்ந்த திறன் முயற்சிகளை ஊக்குவித்தல்  ஆகியவற்றை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டு இந்த புரிந்துணர்வு ஒப்பந்தமானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர்  ‘சாகர் சமாஜிக் சஹயாக்’ – புதிய சமூக பொறுப்புணர்வு வழிகாட்டுதல்களை வெளியிடுகிறார்.

  • துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் கீழ் உள்ள கார்ப்பரேட் சமூக ஆணையத்தின் பொறுப்புகளுக்கான (CSR) புதிய வழிகாட்டுதலை ‘சாகர் சமாஜிக் சஹாயோக்’ என்ற பெயரில் கப்பல் மற்றும் நீர்வழிகள் மற்றும் ஆயுஷ் துறை அமைச்சர் ஸ்ரீ சர்பானந்த சோனோவால் தொடங்கி வைத்துள்ளார்.
  • இந்த புதிய வழிகாட்டுதல்களானது CSR நடவடிக்கைகளை நேரடியாக மேற்கொள்ள துறைமுகங்கள் மற்றும் அது சம்பத்தப்பட்ட துறை நிறுவனங்களுக்கு அதிகாரம் அளிக்கிறது. மேலும் இந்த புதிய CSR வழிகாட்டுதல்களானது, உள்ளூர் சமூகங்களின் பிரச்சினைகளை மிகவும் கூட்டாண்மையுடனும் விரைவான முறையிலும் தீர்க்க வழிவகை செய்கிறது.

மத்திய அமைச்சர் “சாம்பியன்ஸ் 2.0” என்ற வலைத்தளம் மற்றும் கைபேசி செயலியை அறிமுகப்படுத்தியுள்ளார்.

  • MSME அமைச்சகத்தின் பல்வேறு முன்முயற்சிகளை ஊக்குவிப்பதற்காகவும்  கிளஸ்டர் திட்டங்கள் மற்றும் தொழில்நுட்ப மையங்களின் ஜியோ-தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்காகவும் சாம்பியன்ஸ் 2.0 என்ற வலைத்தளம் மற்றும் கைபேசி செயலியை மத்திய MSME அமைச்சர் ஸ்ரீ நாராயண் ரானே அறிமுகப்படுத்தியுள்ளார்.
  • இந்த முன்னெடுப்பானது தொழில் முனைவோர்கள் மற்றும் சிறு குறு நடுத்தர நிறுவங்களின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதை நோக்கமாக கொண்டு தொடங்கப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

NTPC நிறுவனமானது மிக உயர்ந்த GeM கொள்முதல் செயல்திறனுக்கான பிளாட்டினம் விருதைப் பெற்றுள்ளது.

  • இந்தியாவின் மிகப்பெரிய மின் உற்பத்தி அரசு நிறுவனமான NTPC ஆனது, GeM கொள்முதலில் (அரசு இ-மார்க்கெட்பிளேஸ்) தனது மிகச் சிறப்பான செயல்பாட்டிற்காக “பிளாட்டினம் விருதை” ஜூன் 2023இல் பெற்றுள்ளது.
  • இந்த மதிப்புமிக்க விருதானது, நிறுவனத்தின் சிறந்த பங்களிப்புகள் மற்றும் கொள்முதல் நடவடிக்கைகளில் சிறந்து விளங்கியற்காக வழங்கப்பட்டுள்ளது என மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஜூன் 27 அன்று பாதுகாப்பு முதலீட்டு விழாவில் சிறப்புமிக்க சேவை விருதுகளை வழங்கியுள்ளார்.

  • இந்திய ராணுவம் மற்றும் இந்திய கடலோர காவல்படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற 84 முன்னாள் படைவீரர்களுக்கு நாட்டின் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஜூன் 27, 2023 அன்று சிறப்புமிக்க சேவை விருதுகளை வழங்கியுள்ளார்.
  • மேலும் இந்த விருது வழங்கும் விழாவானது புதுதில்லியில் நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்..

மாநில செய்திகள்

சத்தீஸ்கர் மாநிலத்தின் பள்ளி கல்வி தரத்தை மேம்படுத்த, உலக வங்கி 300 மில்லியன் டாலர் கடனை பெறுவதற்கான ஒப்பந்தத்தை மேற்கொள்கிறது.

  • சத்தீஸ்கரில் மாநில அரசால் நடத்தப்படும் பள்ளிகளின் கல்வித் தரத்தை விரிவுபடுத்தவும் அதனை அடுத்தக்கட்டத்திற்கு மேம்படுத்தவும் உதவும் வகையில் 300 மில்லியன் அமெரிக்க டாலர் (ரூ. 2,459 கோடி) கடனுக்கு உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளதாக  ஜூன் 27 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.
  • கிட்டத்தட்ட 4 மில்லியன் மாணவர்கள் அதாவது பெரும்பாலும் மாநிலத்தில் உள்ள ஏழை மற்றும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களின் கல்வி வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக இந்த கடனானது பெறப்படுகிறது என சத்தீஸ்கர் மாநில அரசாங்கமானது தெரிவித்துள்ளது.

லடாக்கின் புகழ்பெற்ற ஹெமிஸ் மடாலய திருவிழாவானது தொடக்கம்.

  • லடாக்கில், “ஹெமிஸ் சேசு” என்று அழைக்கப்படும் வருடாந்திர ஹெமிஸ் மடாலய திருவிழாவானது மிகுந்த மத ஆர்வத்துடனும் மகிழ்ச்சியுடனும் அங்குள்ள மக்களால் இரண்டு நாள் கொண்டாடப்படுகிறது.
  • இந்த திருவிழாவானது குரு பத்ம சாம்பவாவின் பிறந்த நாளைக் குறிக்கும் வகையில், பிரம்மாண்டமான பிராத்தனைகள், புனித முகமூடி நடனங்கள் மற்றும் தங்கம் அல்லது சுவரோவிய ஓவியக் கண்காட்சி ஆகியவை வெகு சிறப்பாக நடத்தப்படுகிறது.

நியமனங்கள்

பெடரல் வங்கியின் தலைவராக “திரு ஏ பி ஹோட்டா” நியமனம்.

  • பெடரல் வங்கியானது அதன் தலைவராக திரு ஏ பி ஹோட்டாவை நியமிக்க இந்திய ரிசர்வ் வங்கியானது சமீபத்தில்  ஒப்புதல் அளித்துள்ளது.
  • ஜூன் 26, 2023 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பில் ஜூன் 29, 2023 முதல் ஜனவரி 14, 2026 வரை ஃபெடரல் வங்கியின் பகுதி நேரத் தலைவராக, சுயேச்சை இயக்குனரான திரு ஏ பி ஹோட்டாவை நியமிப்பதற்கு மத்திய ரிசர்வ் வங்கியானது தனது ஒப்புதலை வழங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய தினம்

தேசிய புள்ளியியல் தினம் 2023

  • புள்ளிவிவரங்கள் மற்றும் பொருளாதார திட்டமிடல் துறைகளில், பேராசிரியர் (காலமான) பிரசாந்தா சந்திர மஹலானோபிஸ் செய்த குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை நினைவு கூறுதல் மற்றும் அங்கீகரிக்கும் வகையில், இந்திய அரசாங்கமானது ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 29 ஆம் தேதியை தேசிய புள்ளிவிவர தினமாக கடைப்பிடிக்கிறது.
  • “நிலையான வளர்ச்சி இலக்குகளை கண்காணிப்பதற்கான தேசிய காட்டி கட்டமைப்புடன் மாநில காட்டி கட்டமைப்பை சீரமைத்தல்” என்பது இந்த ஆண்டிற்க்கான புள்ளியியல் தினத்தின் கருப்பொருளாகும்.

DOWNLOAD PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!