நடப்பு நிகழ்வுகள் – 26 ஆகஸ்ட் 2023

0
நடப்பு நிகழ்வுகள் - 26 ஆகஸ்ட் 2023
நடப்பு நிகழ்வுகள் - 26 ஆகஸ்ட் 2023
நடப்பு நிகழ்வுகள் – 26 ஆகஸ்ட் 2023

 தேசிய செய்திகள்

‘மேரா பில் மேரா அதிகார்’ என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

  • அனைத்து விற்பனை-வாங்குதல்களுக்கும் பில்களைக் கேட்கும் பயனர் மற்றும் வாடிக்கையாளர்களின் கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் வகையில், ‘மேரா பில் மேரா அதிகார்’ என்ற பெயரில் ஒரு முக்கிய முன்னெடுப்பு ஊக்கத் திட்டத்தை மத்திய அரசாங்கமானது ஆகஸ்ட் 2023 இல் அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இந்த முன்னெடுப்பானது மத்திய அரசு மற்றும் மாநில அரசால் இணைந்து மேற்கொள்ளப்படுகிறது. மேலும் இந்த முன்னோடி திட்டமானது செப்டம்பர் 1, 2023 அன்று தொடங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த திட்டமானது முதலில் புதுச்சேரி, தாத்ரா நகர் ஹவேலி மற்றும் அசாம், டாமன் & டையூ, குஜராத் & ஹரியானா ஆகிய மாநிலங்களில் தொடங்கப்படும் என்றும் அதன் வளர்ச்சியை ஒப்பிட்டு மற்ற மாநிலங்களில் மேம்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலக்கரி உற்பத்தியை மேம்படுத்துவதற்காக SECL மற்றும் பெல்மா காலியரிஸ் நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தமானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

  • நிலக்கரி உற்பத்தியாளர் மற்றும் நிர்வகிப்பவர்(MDO) முறையில் தென்கிழக்கு நிலக்கரி வயல் கூட்டமைப்பான SECL இன் பெல்மா சுரங்கமானது “சத்தீஸ்கரில் முதல் திறந்தவெளி சுரங்கமாக” மாறுவதற்கான ஒரு மேம்பாட்டு ஒப்பந்தத்தை பெல்மா காலீரீஸ் நிறுவனத்துடன் ஆகஸ்ட் 2023இல் மேற்கொண்டுள்ளது.
  • இந்த சுரங்கமானது ராய்கர் பகுதியில் அமைந்துள்ளது. இந்த மேம்பாட்டு ஒப்பந்தமானது நாட்டின் முக்கிய பிரிவான SECL இன் நிலக்கரி உற்பத்தியை விரிவுபடுத்தவும் அதனை மேம்படுத்தவும்  உதவும் மற்றும் கோல் இந்தியாவின் 1 பில்லியன் டன் உற்பத்தி இலக்கை அடைவதற்கான முக்கிய வழிமுறைகளை வழங்குவதை நோக்கமாக கொண்டு இந்த  புரிந்துணர்வு ஒப்பந்தமானது மேற்கொள்ளபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

டெலி-லா – 2.0 என்ற செயலியை மத்திய அரசு புதுதில்லியில் அறிமுகப்படுத்தியுள்ளது.

  • தேசிய தலைநகரான புதுதில்லியில் நாடு முழுவதும் நீதித்துறைக்கான அணுகலை உறுதி செய்வதற்காக நியாயா பந்து மற்றும் டெலி-லா ஆகிய செயலியை ஒருங்கிணைக்கும் “டெலி-லா – 2.0” என்ற புதிய செயலியை மத்திய அரசாங்கம் ஆகஸ்ட் 25 2023 அன்று அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இந்த செயலியானது மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சட்ட உதவி, சட்ட ஆலோசனை மற்றும் சட்டப் பிரதிநிதித்துவம் ஆகியவற்றை ஒரே பதிவுதளத்தில் மற்றும் டெலி-லாவின் ஒற்றை நுழைவாயில் மூலம் சாதாரண குடிமகன் அணுகுவதை நோக்கமாக கொண்டு இது வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

2023 ஆம் ஆண்டிற்கான தேசிய பாதுகாப்பு உத்திகள் மாநாடானது புதுடெல்லியில்நடைபெற்றுள்ளது.

  • இந்திய பிரதமர் திரு மோடியின் தலைமையில், தேசிய பாதுகாப்பு பொறிமுறையின் அனைத்து அம்சங்களையும் பலப்படுத்துவதன் மூலம் உறுதியான மற்றும் பாதுகாப்பான தேசத்தை உறுதி செய்யும் வகையில் புதுதில்லியில் ஆகஸ்ட் 24 அன்று தேசிய பாதுகாப்பு உத்திகள் (என்எஸ்எஸ்) மாநாடு-2023 ஆனது தொடங்கப்பட்டுள்ளது. 
  • இது இரண்டு நாள் மாநாடாகும். மேலும் இந்த மாநாட்டை மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தொடங்கி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ராணுவத்தின் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்த ரூ.7,800 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு DAC ஒப்புதல் அளித்துள்ளது.

  • மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஸ்ரீ ராஜ்நாத் சிங் தலைமையில் ஆகஸ்ட் 24, 2023 அன்று நடைபெற்ற “பாதுகாப்பு கையகப்படுத்துதல் கவுன்சில்(டிஏசி) கூட்டத்தில், கிட்டத்தட்ட சுமார் ரூ. 7,800 கோடி மதிப்பிலான பல்வேறு மூலதன கையகப்படுத்தல் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
  • இதில் இந்திய விமானத்தின் செயல்திறனை மேலும் வலுப்படுத்த ஹெலிகாப்டர்களின் “சிறந்த உயிர்வாழ்வை மேம்படுத்தும் பை” (இந்தியன்-ஐடிடிஎம்) பிரிவின் கீழ் நாட்டின் Mi-17 V5 ஹெலிகாப்டர்களில் “எலக்ட்ரானிக் வார்ஃபேர் (EW) சூட்டை வாங்குவதற்கும் சில அதிக பனி உறைவிடங்களில் குளிரை தங்குவதற்கான வீரர்களின் உடைகளை உருவாக்குவதையும் நோக்கமாக கொண்டு இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் EW Suite ஆனது மத்திய பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்திடம் இருந்து வாங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சர்வதேச செய்திகள்

40 ஆண்டுகளில் முதல் முறையாக இந்தியப் பிரதமர் ஒருவர் கிரீஸ் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

  • பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் இருந்து சமீபத்தில் கிரீஸ் நாட்டிற்கு சென்றுள்ளார். இது இரு நாடுகளின் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளில் இந்தியப் பிரதமர் ஒருவர் கிரீஸ் நாட்டிற்குச் செல்வது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
  • மேலும் இந்தியாவின் ராஜதந்திர ஐரோப்பிய உறவிற்கான நுழைவாயிலாக மாறுவதை நோக்கமாக கொண்டு பல்வேறு மேம்பாடு ஒப்பந்தங்களும் இந்த பயணத்தின் போது மேற்கொள்ளப்படும் என வெளிநாட்டு விவகாரங்கள் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

கிரீஸ் நாட்டின் உயரிய கிராண்ட் கிராஸ் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் ஹானர் என்ற விருதானது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டுள்ளது.

  • கிரீஸ் நாட்டின் உயரிய கிராண்ட் கிராஸ் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் ஹானர் விருதை இந்திய நாட்டின் பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் அதிபர் கேடரினா என். சகெல்லரோபௌலோ ஆகஸ்ட் 25 2023 அன்று வழங்கி கௌரவித்தார்.
  • இந்த விருதானது அந்நாட்டின் தலைநகரான ஏதென்ஸில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதானது பிரதமர் மோடி உலகின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக ஆற்றிய சிறப்பான பங்களிப்பை காட்டுகிறது என்றும் இந்தியா மீது கிரீஸ் நாடு வைத்திருக்கும் மரியாதையை காட்டுகிறது என்றும் அந்நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார்.

மாநில செய்திகள்

B 20 உச்சி மாநாடானது புதுதில்லியில் தொடங்குகிறது.

  • 2023 ஆம் ஆண்டிற்கான B20 உச்சி மாநாடானது இந்தியாவின் தலைநகரமான புது டெல்லியில் ஆகஸ்ட் 25 அன்று தொடங்கியுள்ளது. R.A.I.S.E என்ற கருப்பொருளை அடிப்படையாக கொண்டு இந்த மாநாடானது நடைபெறுகிறது.
  • இது உலக நாடுகளின் பெரிய கட்டமைப்பு திட்டங்களில் கவனம் செலுத்தவும் அதை பற்றி விவாதிக்கவும், B20 இந்தியா ஆப்பிரிக்க பொருளாதார ஒருங்கிணைப்பில் சமூகம் , சுற்றுச்சூழல் மற்றும் வணிகத்தில் முன்னேற்றத்தை மேற்கொள்வது ஆகியவற்றை நோக்கமாக கொண்டு இந்த மாநாடானது நடைபெறுகிறது.

கட்டமைப்பு ஒருமைப்பாடு குறித்த மூன்றாவது சர்வதேச மாநாடானது சென்னையில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.

  • 2023 ஆம் ஆண்டிற்கான “கட்டமைப்பு ஒருமைப்பாடு” குறித்த மூன்றாவது சர்வதேச மாநாடானது(ICONS 2023) தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற மாமல்லபுரத்தில் ஆகஸ்ட் 23, 2023 அன்று நடைபெற்றுள்ளது.
  • இந்த மாநாடானது அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி அமைப்பின் இயக்குநர் டாக்டர் என் கலைச்செல்வி அவர்களால் தொடங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த மாநாடானது இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் மற்றும் சொசைட்டி ஃபார் ஃபெயில்யர் அனாலிசிஸ் ஆகியவற்றின் கூட்டு முயற்சியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகும்.

ஜம்மு மற்றும் காஷ்மீரில்  “புட்காம் நகரத்தை அழகுபடுத்துதல்” என்ற முன்னெடுப்பு முயற்சியுடன் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் தொடங்கி  வைக்கப்பட்டுள்ளது.

  • ஜம்மு & காஷ்மீரின் காஷ்மீர் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள புட்காம் மாவட்டத்தில், துணைநிலை ஆளுநரான மனோஜ் சின்ஹா ஆகஸ்ட் 24 அன்று பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார். மக்களுக்கும் அப்பிராந்தியத்திற்கும் மிகவும் பயனுள்ள வகையில் இந்த திட்டங்களானது வடிவமைக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
  • மேலும் அந்த மாவட்டத்தில் “புத்காம் நகரத்தை அழகுபடுத்துதல்” என்ற ஒரு முன்னெடுப்பு முயற்சியையும் தொடங்கியுள்ளார். பொருளாதாரத்தின் விரைவான வளர்ச்சியை அதிகரித்தல், அதன் சூழலியலை வலுப்படுத்துதளுக்கு உதவும் வகையில் இந்த முன்னெடுப்பானது வடிவமைக்கப்பட்டுள்ளது என அவர் அந்த திறப்பு விழாவில் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு இந்தியாவின் முதல் பல்முனை  ஆயுர்வேத மருத்துவமனையை மத்திய அமைச்சர் திறந்து வைத்துள்ளார்.

  • ஆயுர்வேத மற்றும் இயற்கை மருத்துவப் பல்கலைக்கழக மருத்துவமனை(UHAN) என்ற முன்னெடுப்பு திட்டத்தின் கீழ், வடகிழக்கு இந்தியாவின் முதன்மையான பல்முனை ஆயுர்வேத மருத்துவமனையானது மேகாலயாவில் மாநில சுகாதாரம் மற்றும் FW, I & PR மற்றும் சட்ட அமைச்சர் டாக்டர் எம் அம்பரீன் லிங்டோஹ் அவர்களால் மாநில USTM நிறுவன வளாகத்தில் அதிகாரப்பூர்வமாக ஆகஸ்ட் 24 அன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
  • வடகிழக்கு பிராந்தியத்தில் உள்ள மக்களின் ஆஸ்துமா, மூட்டுவலி மற்றும் செரிமானக் கோளாறுகள் போன்ற நாட்டபட்ட நிலைகளுக்கு சிகிச்சையளிப்பதில் இந்த மருத்துவமனை குறிப்பாக பயனுள்ளதாக அமைவதை நோக்கமாக கொண்டு இந்த மருத்துவமனையானது தொடங்கப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நியமனங்கள்

உத்திர பிரதேச மாநில தலைமை தேர்தல் அதிகாரியாக நவ்தீப் நியமனம்.

  • அடுத்த ஆண்டு(2024) நடைபெறவுள்ள நாட்டின் மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக, இந்தியாவின் முக்கிய மற்றும் அதிக தொகுதிகளை உள்ளடக்கிய உத்தரப் பிரதேசத்தின் தலைமைத் தேர்தல் அதிகாரியாக (CEO) நவ்தீப் ரின்வா, இந்தியத் தேர்தல் ஆணையத்தால் (ECI) ஆகஸ்ட் 24 அன்று நியமிக்கப்பட்டதாக சமீபத்திய அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • இவர் இதற்கு முன்பு தலைமைத் தேர்தல் அதிகாரியாக பணியாற்றிய அஜய் குமார் என்பவருக்கு அடுத்தபடியாக இந்திய நிர்வாக சேவை (IAS) அதிகாரி நவ்தீப் ரின்வா நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். பல்வேறு துறைகளில் அனுபவம் கொண்ட இவர் தனது சிறப்பான முன்னெடுப்புகளை மேற்கொள்ளுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SMEV நிறுவனத்தின் புதிய தலைவராக ஆர் கே மிஸ்ரா நியமனம்.

  • இந்தியாவின் மின்சார வாகனத் துறையின் புகழ்பெற்ற மற்றும் உச்ச அமைப்பான மின்சார வாகன உற்பத்தியாளர்களின் சங்கமானது(SMEV), 2023-24 ஆம் ஆண்டிற்கான அந்நிறுவனத்தின் புதிய தலைவராக RK மிஸ்ராவை நியமிப்பதாக ஆகஸ்ட் 24 அன்று வெளியான அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • மேலும் இவர் இந்த நியமனத்திற்கு முன்பாக Magna Yuma இயக்குநராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவர் Yulu Bikes இன் இணை நிறுவனர்களுள் ஒருவராவார்.

விருதுகள்

2023 ஆம் ஆண்டிற்கான 69வது தேசிய திரைப்பட விருதுகள் பட்டியல் வெளியீடு:

  • 2023 ஆம் ஆண்டிற்கான 69ஆவது தேசிய திரைப்பட விருதுகளின் வெற்றியாளர்கள் பட்டியலானது ஆகஸ்ட் 24 அன்று தேசிய தலைநகரமான புது தில்லியில் உள்ள “தேசிய ஊடக மையத்தில்” அறிவிக்கப்பட்டுள்ளது.
  • மேலும் இந்த பட்டியலின் வெற்றியாளர்கள் குடியரசுத் தலைவரால் எதிர்கால தேதியில் நடைபெறும் விழாவில் கௌரவிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கான சில பட்டியல் பின்வருமாறு:

                        வகைப்பாடு                       வெற்றியாளர் 
சிறந்த திரைப்படம் ராக்கெட்ரி
சிறந்த இயக்குனர் நிகில் மகாஜன் (கோதாவரி)
சிறந்த நடிகர் அல்லு அர்ஜுன்(புஷ்பா)
சிறந்த தமிழ் திரைப்படம் கடைசி விவசாயி

 

விளையாட்டு செய்திகள்

2023 ஆம் ஆண்டிற்கான சதுரங்க உலகக் கோப்பையில், இந்தியாவின் ஆர். பிரக்ஞானந்தா வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

  • அஜர்பைஜான் நாட்டின் தலைநகரமான பாகுவில் நடைபெற்ற 2023 ஆம் ஆண்டிற்கான FIDE சதுரங்க உலகக் கோப்பை தொடரில் தமிழகத்தை சேர்ந்த ஆர். பிரக்ஞானந்தா வெள்ளி வென்றுள்ளார். மேலும் இந்த தொடரில் நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
  • “உலக கோப்பை இறுதிப் போட்டிக்கு வந்த இரண்டாவது இந்தியர்” என்ற அந்தஸ்தை இவர் படைத்துள்ளார். இதற்கு முன் விஸ்வநாதன் ஆனந்த் உலக கோப்பை இறுதி போட்டிக்கு வந்த முதல் நபர் என்ற பட்டத்தை வைத்துள்ளார் என்பது சிறப்பு வாய்ந்தததாக பார்க்கப்படுகிறது.

2023 ஆம் ஆண்டிற்கான ISSF உலக சாம்பியன்ஷிப் தொடரின் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்தியா தங்கம் வென்றுள்ளது.

  • அஜர்பைஜானின் தலைநகரமான பாகு நகரில் ஆகஸ்ட் 23 அன்று நடைபெற்ற 2023 ஆம் ஆண்டிற்கான ISSF உலக சாம்பியன்ஷிப் தொடரின் ஆண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் இந்திய வீரர் அமன்பிரீத் சிங் தங்கம் வென்றுள்ளார்.
  • மேலும் இந்த போட்டியில் இந்திய அணி 2 புள்ளிகள் வித்தியாசத்தில் வெண்கலத்தையும் ஹர்ஷ் குப்தா ஒரு புள்ளியில் வெண்கலத்தையும் தவறவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த நாள் தொடரில் இந்திய அணியானது கிட்டதட்ட  நான்கு வெண்கலம் மற்றும் ஐந்து தங்க பதக்கங்களுடன் மொத்தமாக ஒன்பது பதக்கங்களுடன் நிறைவு செய்துள்ளது.

முக்கிய தினம்

உலக பெண்கள் சமத்துவ தினம் 2023

    • அமெரிக்க அரசியலமைப்பில் 1920 ஆம் ஆண்டு பத்தொன்பதாம் திருத்தம்(பெண்களின் வாக்குரிமை) மேற்கொள்ளப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டதன் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 26 ஆம் நாளானது உலக பெண்கள் சமத்துவ தினமாக கொண்டாடப்படுகிறது.
  • இந்த தினமானது 1971 ஆம் ஆண்டில், அமெரிக்க காங்கிரஸ் செனட் சபையானது ஆகஸ்ட் 26 ஐ உலக பெண்கள் சமத்துவ தினமாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும். Embrace Equity என்பது இந்த ஆண்டிற்கான கருப்பொருளாகும்.

DOWNLOAD PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!