தமிழகத்தில் பொங்கல் பரிசுடன் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2,500 – OPS வலியுறுத்தல்!

0
தமிழகத்தில் பொங்கல் பரிசுடன் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2,500 - OPS வலியுறுத்தல்!
தமிழகத்தில் பொங்கல் பரிசுடன் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2,500 - OPS வலியுறுத்தல்!
தமிழகத்தில் பொங்கல் பரிசுடன் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2,500 – OPS வலியுறுத்தல்!

தமிழகத்தில் இதுவரை வழங்கி வந்தபடியே 2022ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கும் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்கப் பணம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசினை எதிர்கட்சியினை சேர்ந்த ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

பொங்கல் பரிசு:

தமிழகத்தில் கடந்த 2020ம் ஆண்டு முதல் பொங்கல் பண்டிகையின் போது இலவச பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய் போன்ற பொருட்களோடு சேர்த்து ரொக்கபணமாக ரூ.1000 வழங்கப்பட்டது. இதேபோல், 2021 பொங்கல் பண்டிகையின் போதும் கடந்த ஆட்சி மக்களுக்கு ரூ.2,500 உடன் பொங்கல் தொகுப்பு பொருட்களும் வழங்கினர். இந்நிலையில் வர இருக்கும் 2022ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திமுக தலைமையிலான அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இலங்கை தமிழர் மறுவாழ்வு மையங்களில் வசிப்பவர்களுக்கும் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருட்களும் கூடுதலாக சமையலுக்கு தேவையான 20 அத்தியாவசிய பொருட்களும் இலவசமாக வழங்கப்படும் என்றும் இதனுடன் கரும்பும் வழங்க உள்ளதாக அரசு அறிவித்திருந்தது.

திருச்சியில் நாளை (நவ.19) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – பிரபல நிறுவனங்கள் பங்கேற்பு!

இந்நிலையில், தமிழக அரசின் அறிவிப்பை எதிர்த்து அதிமுகவை சேர்ந்த ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளிலும் முறையாக 1,000 மற்றும் 2,500 ரூபாய் தொகையானது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. ஆனால் புதிய அரசு வரும் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு பணம் தருவது பற்றி அறிவிக்கவில்லை. ‘நடைமுறையில் இருக்கும் திட்டத்தை கைவிடுவோம்’ என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. தேர்தல் அறிக்கையில் குறிப்பிடாததை தி.மு.க. அரசு செய்திருக்கிறது.

கொடைக்கானல் சுற்றுலா செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – வனத்துறை முக்கிய அறிவிப்பு!

இது தான் திமுக அறிவித்து வரும் ‘சொல்லாததையும் செய்வோம்’ என்பது போலும். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு அளித்து வந்த நிதி உதவியை நிறுத்துவது என்பது நம்பிக்கையுடன் வாக்களித்த மக்களுக்கு செய்யும் வஞ்சகம் ஆகும். இதனால், தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு தமிழகத்தின் ஏழை எளிய மக்களின் விருப்பத்தினை நிறைவேற்ற வேண்டும். இதற்காக, பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு வழங்கி வந்த நிதி உதவியான ரூ.2,500 ஐ அளிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!