தமிழகத்தில் புதிதாக 25 ஆயிரம் களப்பணியாளர்கள் நியமனம் – முதல்வர் உத்தரவு!

0
தமிழகத்தில் புதிதாக 25 ஆயிரம் களப்பணியாளர்கள் நியமனம் - முதல்வர் உத்தரவு!
தமிழகத்தில் புதிதாக 25 ஆயிரம் களப்பணியாளர்கள் நியமனம் - முதல்வர் உத்தரவு!
தமிழகத்தில் புதிதாக 25 ஆயிரம் களப்பணியாளர்கள் நியமனம் – முதல்வர் உத்தரவு!

இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் சாமனப்பள்ளியில், “மக்களை தேடி மருத்துவம்” திட்டம் தொடங்கப்பட்டுள்ள நிலையில் முதற்கட்டமாக 25 ஆயிரம் மருத்துவம் சார்ந்த களப்பணியாளர்களை நியமனம் செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மக்களை தேடி மருத்துவம்:

தமிழகத்தில் புதிய முதல்வராக முக ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்தி வருகிறார். அவருடைய நலத்திட்டங்கள் அனைத்துமே, மக்கள் அனைவருக்கும் சமமான முறையில் கிடைக்கும் வகையில் உள்ளது. இந்த வரிசையில் இந்தியாவிலேயே முதன்முறையாக மக்களது வீடுகளுக்கே நேரடியாக சென்று மருத்துவம் பார்க்கும் “மக்களை தேடி மருத்துவம்” திட்டத்தை முதல்வர் இன்று கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சாமனப்பள்ளி பகுதியில் தொடங்கி வைக்கிறார்.

இந்தியாவில் IT துறையில் உயரும் வேலைவாய்ப்புகள் – ஆய்வு தகவல்!

இந்த திட்டம் மூலமாக வயதானவர்களும், நோயாளிகளும் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த திட்டம் தொடக்கத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறுகையில், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களில் இருக்கும் செவிலியர்கள் மற்றும் துணை செவிலியர்கள் அனைவருக்கும் ஏற்கனவே வெளி முகமை மூலம் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படும் கடந்த 15 நாட்களாக பணி செய்து கொண்டிருக்கிறார்கள். மேலும் இந்த திட்டத்தில் தன்னார்வலர்களை ஈடுபடுத்த உள்ளோம்.

TN Job “FB  Group” Join Now

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை பொறுத்தவரை ஏறத்தாழ மருத்துவம் சார்ந்த 25 ஆயிரம் களப்பணியாளர்களை இந்த ஆண்டு இறுதிக்குள் பணியமர்த்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும் புதிய பணியாளர்கள் ஏற்கனவே இருக்கும் பணியாளர்கள் என மொத்தம் 25 ஆயிரம் பேர் இந்த பணியில் ஈடுபட உள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார். இதனால் மருத்துவத் துறையில் வேலைவாய்ப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஊட்டச்சத்து பரிசு பெட்டகத்தை பொறுத்தவரை கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக கொரோனா காரணமாக வழங்கப்படவில்லை. தற்போது முதல்வர் அது பழைய திட்டமாக இருந்தாலும் அதனை தொடர வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!