நடப்பு நிகழ்வுகள் – 22 ஆகஸ்ட் 2023

0
நடப்பு நிகழ்வுகள் - 22 ஆகஸ்ட் 2023
நடப்பு நிகழ்வுகள் - 22 ஆகஸ்ட் 2023
நடப்பு நிகழ்வுகள் – 22 ஆகஸ்ட் 2023

தேசிய செய்திகள்

மத்திய அமைச்சர் பாரத் புதிய கார் மதிப்பீட்டு திட்டத்தை (பாரத் NCAP) அறிமுகப்படுத்துகிறார்.

  • மத்திய நெடுஞ்சாலை மற்றும் சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஸ்ரீ நிதின் கட்கரி, நாட்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட “பாரத் புதிய கார் மதிப்பீடு என்ற முன்மாதிரி திட்டத்தை (பாரத் NCAP) ஆகஸ்ட் 22, 2023 அன்று தொடங்கி வைக்க உள்ளார்.
  • நாட்டின் சாலை போக்குவரத்து மற்றும் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உயர்த்துவதன் மூலம் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான மத்திய அரசாங்கத்தின் உறுதிப்பாட்டில் இந்தத் திட்டம் ஒரு குறிப்பிடத்தக்க படியாக அமையும் என மத்திய அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த திட்டமானது இந்தியாவில் “பாதுகாப்பு உணர்திறன் கொண்ட கார் மூலதன சந்தையை உருவாக்கும்” என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.

IREDA அமைப்பானது பல்வேறு மேம்பாட்டு திட்டங்களில் இணைந்து செயல்படுவதற்காக மத்திய அரசுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை  மேற்கொண்டுள்ளது.

  • இந்திய அரசின் மினி ரத்னா வகை – I சார்ந்த நிறுவனமான இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு நிறுவனம் (IREDA), மத்திய அரசாங்கத்துடன் செயல்திறன் மேம்பாடு அடிப்படையிலான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்(MoU) ஆகஸ்ட் 2023 இல் கையெழுத்திட்டுள்ளது. 
  • IREDA அமைப்பானது புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் நிர்வாக கட்டுப்பாடுடையது என்பது குறிப்பிடத்தக்கதாகும். 2023-24 நிதியாண்டில் ₹ 4,350 கோடி மற்றும் 2024-25 நிதியாண்டில் ₹ 5,220 கோடி IREDA-க்கான செயல்பாடுகள் மூலம் இந்திய அரசுக்கான வருவாயாக வழங்குவதை நோக்கமாக கொண்டு இந்த புரிந்துணர்வு ஒப்பந்தமானது மேற்கொள்ளப்பட்டுள்ளதாகும்.

நாட்டின் விலங்கு சுகாதார அமைப்பை வலுப்படுத்துவதற்காக G20 தொற்றுநோய் நிதியமானது 25 மில்லியன் டாலர் கடனுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

  • இந்தியாவின் கால்நடை சுகாதார அமைப்பை வலுப்படுத்துவதற்காக தேசிய கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறையின் 25 மில்லியன் டாலர் முன்னெடுப்பு திட்டத்திற்கு G20 தொற்றுநோய் நிதியம் அமைப்பானது சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது. 
  • இந்தோனேசியாவின் G20 தலைமையின் கீழ் நிறுவப்பட்ட, இந்த தொற்றுநோய் நிதியம் அமைப்பானது, மிகக்குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட வளரும் நாடுகளில் கவனம் செலுத்தி, தேசிய, பிராந்திய மற்றும் உலகளாவிய தொற்றுநோய் தடுப்பு, தயார்நிலை மற்றும் அதன் எதிர்ப்பு திறன்களை வலுப்படுத்தற்காக முக்கியமான முதலீடுகளுக்கு நிதியளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்தியாவின் முதல் விளையாட்டு அடிப்படையிலான கற்றலியல் நூலகமானது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

  • புதுமையான கல்வி வழங்கும் சேவை நிறுவங்களின் முன்னணியில் இருக்கும் Ryan Group of Schools நிறுவனமானது The All India Toy Manufacturers’ Association (TAITMA) அமைப்புடன் இணைந்து, “இந்தியாவின் முதல் தொடக்க பொம்மை நூலகம்” என்று பெயரிடப்பட்ட “விளையாட்டு அடிப்படையிலான கற்றலியல் நூலகத்தை” ஆகஸ்ட் 2023 இல் அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இந்த நூலகமானது கற்றல் மற்றும் முழுமையான வளர்ச்சியை வளர்ப்பது மற்றும் குழந்தைகள் இந்த நூலகம் மூலம் பொம்மைகளை கடன் வாங்கவும், அவற்றை வீட்டில் அனுபவிக்கவும், அதை மீண்டும் திருப்பித் ஒப்படைப்பதன் மூலம் விளையாட்டு அடிப்படையிலான கற்றலை முன்பை விட அணுகக்கூடியதாக ஆக்குவதை நோக்கமாக கொண்டு இந்த நூலகமானது வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சர்வதேச செய்திகள்

போலந்தின் 16வது ஐஓஏஏவில் இந்தியா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

  • போலந்து நாட்டின் சோர்சோவில் நடைபெற்ற 2023 ஆம் ஆண்டிற்கான வானியல் மற்றும் வானியற்பியல் (IOAA) 16வது சர்வதேச ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணியானது நான்கு தங்கம் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
  • இந்த தொடரானது ஆகஸ்ட் 10 முதல் ஆகஸ்ட் 20 வரை நடைபெற்றுள்ளது. மேலும் இதில் ஐக்கிய இராச்சியம் ஐந்து தங்க பாதகங்களுடன் முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த ஒலிம்பியாட் போட்டியில் கிட்டத்தட்ட 50 நாடுகளைச் சேர்ந்த 236 மாணவர்கள் கலந்து கொண்டு அனைத்துப் தொகுப்பு விளையாட்டு பிரிவுகளிலும் 27 தங்கம், 41 வெள்ளி மற்றும் 50 வெண்கலம் ஆகிய பதக்கங்களை வென்றுள்ளனர்.

இந்தியாவின் “பே ஆஃப் ப்ளட்” என்ற முக்கிய ஆவணப்படமானது டாக்காவில் திரையிடப்பட்டுள்ளது.

  • 1971 ஆம் ஆண்டு நடைபெற்ற வங்கதேச விடுதலைப் போரின் போது நடைபெற்ற மோசமான இனப்படுகொலை பற்றிய “பே ஆஃப் ப்ளட்” என்ற முக்கிய வரலாற்று ஆவணப்படமானது ஆகஸ்ட் 19 அன்று வங்கதேச தலைநகரமான டாக்காவில் உள்ள “லிபரேஷன் வார் மியூசியத்தில்” திரையிடப்பட்டுள்ளது.
  • வங்கதேச தேசத் தந்தை மற்றும் பங்கபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மானின் 48வது நினைவு தினத்தை நினைவு கூறும் வகையில், “லிபரேஷன் வார் மியூசியத்தில்” இந்த ஆவணப்படத்தை திரையிட்டுள்ளது. மேலும் இது பிரபல இந்திய திரைப்பட தயாரிப்பாளர் “கிருஷ்ணேந்து போஸ்” அவர்களால் எழுதி இயக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ரஷ்யாவின் நிலவுப் பயணமான  லூனா-25 விண்கலம் நிலவில் மோதி விபத்துக்குள்ளானது.

  • ரஷ்யாவின் நிலவு பயணத்திற்கான விண்கலம் லூனா -25 ஆனது தனது கட்டுப்பாட்டை இழந்து நிலவில் மோதி விபத்துக்குள்ளானது என்று ரஷ்ய விண்வெளி ஆய்வு நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ் ஆகஸ்ட் 20 அன்று தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.
  • இந்த விண்கலத்திற்கு தரையிறங்குவதற்கு முந்தைய நீள்வட்ட சுற்றுப்பாதையை உருவாக்குவதற்கான உந்துவிசையானது வழங்கப்பட்டதை தொடர்ந்து மாஸ்கோ நேரம் சுமார் 14:57 மணியளவில் விண்கலத்துடனான இணைப்பு தடைப்பட்டது. எனவே அது நிலவில் மோதி விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நமது நாட்டிற்கான நிலவு பயணமான சந்திராயன் 3 ஆனது ஆகஸ்ட்  23 ஆம் நாளானது நிலவில் தரையிறங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மாநில செய்திகள்

32 வது-மணிப்பூரி மொழி தினம் சிறப்பாக கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

  • மணிப்பூர் மாநிலத்தின் மணிப்பூரி மொழியானது ஆகஸ்ட் 20, 1992 அன்று இந்திய அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டதை மதிப்பளிக்கும் மற்றும் மொழியின் உன்னதத்தை குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 20 அன்று மணிப்பூர் மொழி தினமாக அனுசரிக்கப்படுகிறது.
  • இந்த ஆண்டு 32வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது. மேலும் மொழிக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் மத்திய குடிமை பணி தேர்வுகளில் புகுத்தப்பட்டதாகவும் இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பல்வேறு பாடப்பிரிவுகளை மணிப்பூரி மொழியில் கற்பிக்கப்படுவதாகவும் மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பல KVI முன்னெடுப்புகள் தொடக்கம்.

  • தேசிய காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின்(KVIC) தலைவர் ஸ்ரீ மனோஜ் குமார், தமிழ்நாட்டில் பல்வேறு KVI அமைப்பின் முன்னெடுப்பு செயல்பாடுகளை தொடங்கி வைத்துள்ளார். 
  • மேலும் இவர் ஆகஸ்ட் 19, 2023 அன்று கோயம்புத்தூர் மாவட்டத்தின் சித்ராவில் நடைபெற்ற “காதி கரிகர் சம்மேளனத்திற்குத்” தலைமை தாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் இந்த முன்னெடுப்புகளானது வேலையின்மை, வறுமை, பட்டினி ஆகியவற்றுக்கு எதிரான ஆயுதமாகவும் அதே நேரத்தில் கிராமங்களின் வளர்ச்சிக்கும், பெண்களின் அதிகாரத்தை மேம்படுத்துவதையும் நோக்கமாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது என அவர் கூறியுள்ளார்.

நிதி அமைச்சகத்தின்  மேம்பாட்டுக்கான சிந்தன் ஷிவிர் கெவாடியாவில் நடத்த திட்டம்.

  • நிதி அமைச்சகத்தின் துறை, மேம்பாட்டுக்கான சிந்தன் ஷிவிர் நிகழ்ச்சியை ஆகஸ்ட் 21 அன்று குஜராத்தின் கெவாடியாவில் உள்ள “ஒற்றுமை சிலையில்”(Statue of Unity) தொடங்கியுள்ளது.
  • மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், நிதி இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி மற்றும்  துணை நிதி அமைச்சர் பகவத் கரத் ஆகியோர் முன்னிலையில் இந்த கூட்டமானது நடைபெற்றுள்ளது. நிதி அமைச்சகத்தில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் மற்றும் மேம்பாடு குறித்தும் 2047ஆம் ஆண்டிற்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான வரைபடம் உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டு முன்னெடுப்புகள் குறித்தும் இதில் விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியமனங்கள்

ஹிகல் நிறுவனமானது அதன் குழுவில் கூடுதல் இயக்குநர்களாக இரு நிபுணர்களை நியமித்துள்ளது.

  • மும்பையைச் சேர்ந்த புகழ்பெற்ற மருந்து மற்றும் உயிர் அறிவியல் நிறுவனமான ஹிகல் நிறுவனமானது, அதன் மேம்பாட்டு குழுவில் கூடுதல் இயக்குநர்களாக ராமச்சந்திர கவுண்டினியா வின்னகோடா மற்றும் பெர்ஜிஸ் மினு தேசாய் ஆகியோரை நியமித்துள்ளது.
  • இவர்கள் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் இந்த பொறுப்பை ஏற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் தொடர்ந்து இந்த பொறுப்பில் 5 ஆண்டுகாலம் வகிப்பார்கள் எனவும் இவர்களின் சீரிய நடவடிக்கைகள் மூலம் நிறுவன வளர்ச்சியை உறுதிப்படுத்துவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

விளையாட்டு செய்திகள்

2023 ஆம் ஆண்டிற்கான ஆசிய இளையோர் ஸ்குவாஷ் தொடரில் இந்தியா தங்கம் வென்றுள்ளது.

  • சீனாவின் டேலியன் நகரில் நடைபெற்ற 2023 ஆம் ஆண்டிற்கான ஆசிய இளையோர் ஸ்குவாஷ் தனிநபர் சாம்பியன்ஷிப் தொடரில் U-17 பிரிவில் இந்தியாவின் விளையாட்டு வீரரான அனாஹத் சிங் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
  • இந்த விளையாட்டு போட்டியானது ஆகஸ்ட் 16 முதல் 20 வரை நடைபெற்றுள்ளது. ஆகஸ்ட் 20 அன்று நடைபெற்ற நடைபெற்ற இறுதிப் போட்டியில் 15 வயதான இவர்  3-1 என்ற புள்ளிகள் கணக்கில் ஹாங்காங்கின் எனா குவாங்கை தோற்கடித்து இந்த தங்கப் பதக்கத்தை  வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

2023 ஆம் ஆண்டிற்கான ISSF உலக சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவின் வீரரான மெஹுலி வெண்கலம் வென்றுள்ளார்.

  • அஜர்பைஜான் நாட்டின் பாகுவில் நடைபெற்ற 2023 ஆம் ஆண்டிற்கான ISSF உலக சாம்பியன்ஷிப் தொடரில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவு போட்டியில் இந்தியாவின் மெஹுலி கோஷ் வெண்கலத்தை வென்றுள்ளார்.
  • இந்த வெற்றியின் மூலம் இவர் இந்தியாவிற்கான பாரிஸ் 2024 ஒலிம்பிக் ஒதுக்கீட்டைப் பெற்றுள்ளார். சமீபத்தில் நடைபெற்றுள்ள இந்த இறுதிப் போட்டியில், மெஹுலி 229.8 புள்ளிகளை தக்க வைத்துக்கொண்டு சீனாவின் ஜிலின் ஹாங் மற்றும் ஜியாயு ஹான் ஆகியோரை வென்று இந்த வெண்கல பதக்கத்தினை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

FIFA மகளிர் உலகக் கோப்பை தொடரை ஸ்பெயின் அணி கைப்பற்றியுள்ளது.

  • 2023 ஆம் ஆண்டிற்கான FIFA மகளிர் உலகக் கால்பந்து கோப்பை பட்டத்தை, ஸ்பெயின் அணியானது ஆகஸ்ட் 20 அன்று ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடைபெற்ற இறுதி போட்டியில் முதன்முறையாக இங்கிலாந்தை 1-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளது.
  • லா ரோஜா என்றழைக்கப்படும் ஸ்பெயின் நாட்டின் தேசிய கால்பந்து அணியானது, ஜெர்மனிக்குப் பிறகு, பெண்கள் மற்றும் ஆண்கள் உலகக் கால்பந்து கோப்பைகளை வென்ற “இரண்டாவது நாடு” என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

FIDE உலகக் கோப்பையில் அரையிறுதிக்குச் செல்லும் இரண்டாவது இந்தியர் என்ற அந்தஸ்த்தை ஆர்.பிரக்ஞானந்தா பெறுகிறார்.

  • FIDE உலகக் கோப்பையில் அரையிறுதிக்குச் செல்லும் இரண்டாவது இந்தியர் அல்லது விஸ்வந்தன் ஆனந்துக்குப் பிறகு FIDE உலகக் கோப்பையின் அரையிறுதிக்கு செல்லும் முதல் இந்தியர் என்ற அந்தஸ்தை தமிழகத்தை சேர்ந்த ஆர்.பிரக்ஞானந்தா சமீபத்தில் பெற்றுள்ளார்.
  • தற்போது அஜர்பைஜான் நாட்டின் பாகுவில் நடைபெற்று வரும் 2023 ஆம் ஆண்டிற்கான FIDE உலகக் கோப்பையில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்த அந்தஸ்தை பெற்றுள்ளார். இந்திய செஸ் கூட்டமைப்பு தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளது.

பொருளாதார செய்திகள்

டாபர் நிறுவனம் மேம்பாட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை சன்ஷூர் எனர்ஜி நிறுவனத்துடன் மேற்கொண்டுள்ளது.

  • இந்தியாவின் முன்னணி மற்றும் புகழ்பெற்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான சன்ஷூர் எனர்ஜி ஆனது, இந்தியாவின் முன்னணி அறிவியல் சார்ந்த ஆயுர்வேத நிறுவனமான டாபர் இந்தியா நிறுவனத்துடன் திறந்த அணுகல் வகையிலான சூரிய PPA மின்திறன் மேம்பாட்டு ஒப்பந்தத்தில் ஆகஸ்ட் 2023 இல் கையெழுத்திட்டுள்ளது. 
  • இந்த திட்டத்தின் கீழ் டாபர் நிறுவனமானது தனது காசியாபாத்(உத்தர பிரதேசம்) தொழிற்சாலையின் மொத்த மின் தேவையில் குறிப்பிடத்தக்க பகுதியை மேம்படுத்துவதையும் மற்ற பிரிவுகளை வலுப்படுத்துவதையும் நோக்கமாக கொண்டு இந்த புரிந்துணர்வு ஒப்பந்தமானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • மேலும் இந்த திட்டத்தின் மூலம் டாபரின் காசியாபாத் தொழிற்சாலைக்கு கிட்டத்தட்ட 4 மில்லியன் யூனிட் பசுமை மின்சாரம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

369ஹப் வென்ச்சர்ஸ் நிறுவனம் மற்றும் ஏஏபிசி நிறுவனம் ஆகியவை மருத்துவ குறியீட்டுத் தொழிலை மாற்றியமைப்பதற்கான கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

  • நாட்டின் மருத்துவ-குறியீட்டுத் துறையை மேம்படுத்தவும் அதில் புரட்சியை ஏற்படுத்துவதையும் நோக்கமாக கொண்டு,  369ஹப் வென்ச்சர்ஸ் நிறுவனம் மற்றும் ஏஏபிசி நிறுவனம் இணைந்து சர்வதேச பிராந்திய வளர்ச்சிக்கான கூட்டுறவு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
  • ஆகஸ்ட் 18, 2023 அன்று தேசிய தலைநகரமான புதுடெல்லியில் அதிகாரப்பூர்வமாக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்தக் கூட்டாண்மையானது, நாட்டின் சுகாதாரம் மற்றும் மருத்துவக் குறியீட்டுத் துறைகளில் மாணவர்கள் மற்றும் நிபுணர்களுக்கு அதிகாரம் அளிக்கவும் அதன் சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

DOWNLOAD  PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!