வங்கி பயனர்களே உஷார்! அக்டோபர் மாதத்தில் 21 நாட்கள் Bank விடுமுறை – முழு லிஸ்ட் உள்ளே!

0
வங்கி பயனர்களே உஷார்! அக்டோபர் மாதத்தில் 21 நாட்கள் Bank விடுமுறை - முழு லிஸ்ட் உள்ளே!
வங்கி பயனர்களே உஷார்! அக்டோபர் மாதத்தில் 21 நாட்கள் Bank விடுமுறை - முழு லிஸ்ட் உள்ளே!
வங்கி பயனர்களே உஷார்! அக்டோபர் மாதத்தில் 21 நாட்கள் Bank விடுமுறை – முழு லிஸ்ட் உள்ளே!

நாடு முழுவதும் உள்ள தனியார்த்துறை மற்றும் பொதுத்துறை வங்கிகளில் அக்டோபர் மாதத்திற்கான விடுமுறை நாட்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் இந்த மாதம் வங்கிகளில் 21 நாட்கள் விடுமுறை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கி விடுமுறைகள்:

இந்தியாவில் மக்களின் வசதிக்காக பல தனியார்துறை மற்றும் பொதுத்துறை வங்கிகள் இயங்கி வருகின்றன. அந்த வங்கிகளில் ஒவ்வொரு மாதமும் விடுமுறை நாட்கள் குறித்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிடும். அந்த வகையில் அக்டோபர் மாதத்திற்கான வங்கி விடுமுறை நாட்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. தேசிய விடுமுறை காரணமாக இந்த மாதம் வங்கிகளில் அதிக நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. தேசிய விடுமுறை நாட்களில் வங்கிகள் மூடப்பட்டு இருக்கும். ஆனால் பிராந்திய வங்கி விடுமுறைகளை அந்ததந்த மாநில அரசுகள் நிர்ணயம் செய்கின்றனர்.

மேலும் அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தியில் தொடங்கி மொத்தம் 21 நாட்கள் விடுமுறை நாட்களாக இருக்கின்றன. அந்த விடுமுறை நாட்கள் குறித்தும் அதன் விவரங்கள் குறித்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அது மட்டுமில்லாமல் துர்கா பூஜா மற்றும் தசரா, விஜயதசமி என தொடர்ந்து பண்டிகை நாட்கள் வருவதால் அதிகமாக விடுமுறை இருக்கும் மாதமாக அக்டோபர் மாதம் இருக்கிறது. மேலும் விடுமுறை நாட்கள் குறித்த விவரங்கள் பின்வருமாறு,

Exams Daily Mobile App Download

அக்டோபர் 1 – அரையாண்டிற்கான வங்கி கணக்குகள் நிறைவு

அக்டோபர் 2 – ஞாயிறு & காந்தி ஜெயந்தி விடுமுறை

அக்டோபர் 3 – துர்கா பூஜா (மகா அஷ்டமி) [அகர்தலா, புவனேஸ்வர், குவஹாத்தி, இம்பால், கொல்கத்தா, பாட்னா மற்றும் ராஞ்சி ஆகிய பகுதிகளில்]

அக்டோபர் 4 – துர்கா பூஜை / தசரா

அக்டோபர் 5 – துர்கா பூஜா/ தசரா (ஸ்ரீமந்தா சங்கர்தேவாவின் ஜன்மோத்ஸவ்)

அக்டோபர் 6 – துர்கா பூஜா [கேங்டோக்]

அக்டோபர் 7 – துர்கா பூஜா [கேங்டோக்]

EPFO பயனரா நீங்கள்? .. அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான் – ரூ. 5 லட்சம் வரை முக்கிய பலன்கள்!

அக்டோபர் 8 -இரண்டாவது சனிக்கிழமை விடுமுறை

அக்டோபர் 9 – ஞாயிறு

அக்டோபர் 13 – கார்வா சவுத் [சிம்லா]

அக்டோபர் 14 -ஈத்-இ-மைலட்-உல்-நாபி

அக்டோபர் 16 – ஞாயிறு

அக்டோபர் 18 – கேட்டி பிஹு

அக்டோபர் 22 – நான்காவது சனிக்கிழமை

அக்டோபர் 23 – ஞாயிறு

அக்டோபர் 24 – தீபாவளி

அக்டோபர் 25 – லக்ஷ்மி பூஜா/தீபாவளி /கோவர்தான் பூஜா [கேங்டோக், ஹைதராபாத், இம்பால் மற்றும் ஜெய்ப்பூர்]

அக்டோபர் 26 – கோவர்தன் பூஜா/விக்ரம் சம்வந்த் புத்தாண்டு நாள் சிம்லா மற்றும் ஸ்ரீநகர்]

அக்டோபர் 27 – பைடூஜ்/சித்ரகுப்ட் ஜெயந்தி/லக்ஷ்மி புஜா/ தீபாவளி [கேங்க்டோக், இம்பால், கான்பூர் மற்றும் லக்னோ]

அக்டோபர் 30 – ஞாயிறு

அக்டோபர் 31 – சர்தார் வல்லபாய் படேல்ஸ் பிறந்த நாள் [அகமதாபாத், பாட்னா மற்றும் ராஞ்சி]

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!