2024: மத்திய அரசின் பட்ஜெட் அப்டேட் – வருமான வரி உச்ச வரம்பில் மாற்றம் இல்லை!

0
2024: மத்திய அரசின் பட்ஜெட் அப்டேட் - நிதியமைச்சர் தாக்கல்!
2024: மத்திய அரசின் பட்ஜெட் அப்டேட் - நிதியமைச்சர் தாக்கல்!
2024: மத்திய அரசின் பட்ஜெட் அப்டேட் -வருமான வரி உச்ச வரம்பில் மாற்றம் இல்லை!!!

மத்திய அரசின் 2024 -2025 ம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தற்போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். 2024 – 2025ம் நிதியாண்டுக்கான முழு பட்ஜெட் நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் ஜூன் மாதம் தாக்கல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஏப்ரல் – ஜூன் இடைக்கால செலவினங்களுக்கான பட்ஜெட் விவரங்கள் தெரிவிக்கப்பட உள்ளது.

பிற்பகல் 12.10

நாட்டின் பட்ஜெட் நிதியமைச்சர் மூலம் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தற்போது நாடாளுமன்ற மக்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பிற்பகல் 12.00

இந்த நிதியாண்டில் மொத்த செலவினம் ₹ 44.90 லட்சம் கோடியாக திருத்தப்பட்டது. 24 நிதியாண்டில் கடன் வாங்கியதைத் தவிர மற்ற மொத்த வரவுகள் ₹ 27.56 லட்சம் கோடி ஆகும். FY24 வரி வரவுகள் ₹ 23.24 லட்சம் கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.7 லட்சம் வரையிலான தனிநபர் வருமானத்திற்கு வருமான வரி செலுத்த தேவையில்லை. மறைமுக வரிகளிலும் எந்த விதமான மாற்றமும் இல்லை. நாட்டின் வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 8 கோடிக்கும் மேல் அதிகரித்துள்ளது. மக்களின் தனிநபர் வருவாய் 50% அதிகரித்துள்ளது. மக்கள் தொகை உயர்வால் ஏற்படும் சவால்களை சமாளிக்க குழு அமைக்கப்படும். 40,000 ரயில் பெட்டிகள் வந்தே பாரத் ரயில் பெட்டிகளுக்கு இணையாக தரம் உயர்த்தப்படும்.

காலை 11:55

நாட்டின் நிதிப்பற்றாக்குறை எதிர்வரும் ஆண்டில் GDB யில் 5.15 % ஆக இருக்கும். கடந்த சில ஆண்டுகளில் நேரடி வரி வருவாய் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. ரூ. 7 லட்சம் வரை வருமானவரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நாட்டின் உள்கட்டமைப்பிற்கான நிதி உயர்த்தப்பட்டள்ளது. மாதாந்திர GST வருவாய் ரூ.1.66 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

ஸ்டார்ட்அப்களுக்கான வரிச் சலுகைகள், இறையாண்மைச் செல்வத்தால் செய்யப்படும் முதலீடுகள், ஓய்வூதிய நிதிகள் மார்ச் 2025 வரை நீட்டிக்கப்படும். ரூ.11.11 கோடி பாதுகாப்பு துறைக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

காலை 11:45

லட்சதீவில் சுற்றுலா மேம்படுத்தப்படும். ஆன்மீக சுற்றுலா போன்றவை உள்ளூர் மக்களின் தொழில் முனைவுக்கு ஊக்கம் அளிக்கும். சுற்றுலாவை மேம்படுத்த மாநிலங்களுக்கு வட்டியில்லா கடன் உதவி வழங்கப்படும். பாதுகாப்பு நோக்கங்களுக்காக ஆழமான தொழில்நுட்பத்தை வலுப்படுத்த புதிய தொழில்நுட்பம் தொடங்கப்படும்.

வட்டி விகிதங்கள் இல்லாத அல்லது குறைவான வட்டி விகிதங்களுடன் நீண்ட கால நிதியுதவியை வழங்க 50 வருட வட்டியில்லா கடனுடன் ₹ 1 லட்சம் கோடி கார்பஸ் நிறுவப்படும். கடல் உணவுப்பொருட்களின் ஏற்றுமதி 10 ஆண்டுகளில் இரட்டிப்பாகி உள்ளது. மீன்வளத்துறையில் 55 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

காலை 11:40

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் பலன்கள் அனைத்து ஆஷா மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கும் விரிவுபடுத்தப்படும். நடுத்தர மக்களுக்கு சொந்த வீடு கட்ட அரசு உதவும். பெண்களுக்கு கர்ப்பப்பை புற்றுநோய் ஏற்படுவதை தடுக்க தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்படும். 10 ஆண்டுகளில் உயர்கல்வியில் சேரும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு. விமான நிலையங்களின் எண்ணிக்கை 149 ஆக அதிகரித்துள்ளது.

விமான நிறுவனங்கள் புதிதாக 1000 விமானங்களை வாங்க உள்ளது. 3 பிரதான ரயில்வே வழித்தடம் அமைக்கப்படும். அந்நிய நேரடி முதலீட்டை அதிகரிக்க இருதரப்பு வர்த்தக ஒப்பந்தங்கள் ஊக்குவிக்கப்படும். 600 மில்லியன் டாலர் மதிப்பிலான அந்நிய முதலீடுகள் குவிந்துள்ளது. மின்சார வாகனங்களுக்கான கட்டமைப்பு, உற்பத்தி அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்க நாட்டில் புதிய திட்டங்கள் கொண்டு வரப்படும்.

காலை 11:35

அதிக அளவிலான மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்பட உள்ளன. உலகின் பால் உற்பத்தி துறையில் இந்தியா முக்கிய இடத்தை பிடித்துள்ளது.5 ஒருங்கிணைந்த அக்வா பார்க்குகள் அமைக்கப்பட உள்ளது. திறன் இந்தியா திட்டத்தின் மூலம் 43 கோடி பேர் பயனடைந்துள்ளனர். நாட்டிலுள்ள சுமார் 3 கோடி லட்சம் பெண்கள் லட்சாதிபதியாக மாறியுள்ளனர்.

காலை 11:30

அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 2 கோடி வீடுகள் கட்டப்படும். 4 கோடி இலவச வீடுகள் இதுவரையிலும் வழங்கப்பட்டுள்ளது. வீடுகளில் சூரிய மின் தகடுகள் பாதிக்கும் திட்டம் மூலம் 1 கோடி வீடுகளுக்கு மாதம் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. அங்கன்வாடி மையங்களை மேம்படுத்த போஷன் 2.0 திட்டம் செயப்படுத்தப்பட உள்ளது.

காலை 11:25

நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது. தொழில் முனைவராகும் பெண்களின் எண்ணிக்கை 10 ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. மகளிர் இட ஒதுக்கீடு, முத்தலாக் தடை போன்ற பெண்களுக்கான சட்டங்களை அரசு நிறைவேற்றியுள்ளது. நாட்டில் பண வீக்கம் அதிகமாக இருந்த போதிலும் G-20 மாநாடு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. நாட்டின் வளர்ச்சிக்கான வாய்ப்புகளுக்கு வானமே எல்லையாக உள்ளது.

காலை 11:20

முத்ரா திட்டத்தின் கீழ் பெண்களுக்கு இதுவரை 30 கோடி முறையும், பொதுமக்களுக்கு 43 கோடி முறையும் கடன்கள் வழங்கப்பட்டுள்ளது. திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 3,000 ITI கள் தொடங்கப்பட்டுள்ளது. விளையாட்டு துறையில் இந்தியா பதக்கங்களை குவித்து வருகிறது. இந்தியாவில் 80 கிராண்ட் மாஸ்டர்கள் உள்ளனர்.

காலை 11:15

ஏழைகள், விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள் ஆகிய 4 தரப்பினரின் முன்னேற்றத்திற்கு அரசு முக்கியத்துவம் அளிக்கிறது. நாடு முழுவதும் 11.8 கோடி விவசாயிகளுக்கு நேரடியாக மத்திய அரசின் உதவித்தொகை வழங்கப்படுகிறது. 4 கோடி விவசாயிகளுக்கு பயிர் காப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளது. 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

காலை 11:05

அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை அரசு செயல்படுத்துகிறது. மக்கள் அனைத்து அடிப்படை வசதிகளையும் மத்திய அரசால் பெற்று பலனடைகின்றனர். மக்கள் இதனால் மீண்டும் பாஜக ஆட்சியை தான் தேர்வு செய்வார்கள். 2047ல் புதிய இந்தியாவை படைப்போம். சமூக நீதி தான் மத்திய அரசின் நோக்கம்.

காலை 11 

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையை தொடங்கியுள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக இந்திய பொருளாதாரம் வளர்ச்சி பாதையில் பயணிக்கிறது.

Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!