உலக மகளிர் தினம் (மார்ச் 8) – புதிய செயலி வெளியீடு!!
இன்று உலக மகளிர் தினம் (மார்ச் 8) நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் பல துறைகளில் சாதனை படைக்க விரும்பும் பெண்களுக்கான புதிய வலைத்தளம் குறித்த அறிவிப்பை இந்த பதிவில் காணலாம்.
உலக மகளிர் தினம்:
இன்று உலகம் முழுவதும் மகளிர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தாயாக, தாரமாக, அக்கா தங்கையாக, மகளாக, தோழியாக நம்முடன் பயணம் செய்யும் பெண்கள் பெருமைபடுத்தும் விதத்தில் இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆண்களை விட பெண்கள் தான் உடல் மற்றும் மனதளவில் வலிமையானவர்களாக உள்ளனர்.
TN Job “FB Group” Join Now
ஆண்களை போலவே பெண்களும் அரசியல், சமூகசெயல்பாடுகள், பொழுதுபோக்கு, விளையாட்டு, தொழில்துறை, விண்வெளி என அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயலாற்றி வருகின்றனர். நாடு விட்டு நாடு சென்று சாதனை படைத்த பெண்கள் எண்ணிக்கை அதிகம் தற்போது அமெரிக்காவின் துணை செயலாளர் இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் உள்ளார்
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள்!!
இவ்வாறு சிறப்பு மிக்க பெண்களுக்கான பிரத்யேகமாக Her Circle எனும் சமூக வலைதளத்தை ரிலையன்ஸ் பவுன்டேஷன் தலைவர் நீட்டா முகேஷ் அம்பானி இன்று உலக மகளிர் தின பரிசாக வெளியிட்டுள்ளார். இந்த வலைதளம் மூலமாக பெண்களுக்கு அதிகாரம், மகிழ்ச்சி, ஒத்துழைப்பு மற்றும் ஊக்கம் அளிக்கும் நோக்கில் துவங்கப்பட்டு வருகிறது. இந்த வலைத்தளம் மூலமாக பெண்களுக்கு தேவையான வீடியோக்கள், புகைப்படங்கள், கட்டுரைகள் மற்றும் பல்வேறு இதர தரவுகள் கிடைக்கின்றன.
12 ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான தத்கால் விண்ணப்பம் – தேர்வு துறை அறிவிப்பு!!
இவை அனைத்தும் ஆரோக்கியம், வர்த்தகம், பணி, சமூக சேவை, அழகு, பொழுதுபோக்கு மற்றும் பல்வேறு பிரிவுகளில் கிடைக்கின்றன. இந்த வலைத்தளத்தில் தொண்டு நிறுவனங்கள் மற்றும் இதர நிறுவனங்கள் கலந்துகொள்ள முடியும். இதன் மூலமாக பல பெண்களின் திறமைகள் வெளி வர முடியும்.
வாக்களிக்க தகுதியான 11 ஆவணங்கள் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!!
இது வலைதளம், கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஜியோ ஆப் ஸ்டோர்களின் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஐஒஎஸ் தளத்தில் இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய முடியாது காரணம் இந்த செயலியை பெண்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதால் அவ்வாறு உருவாக்கப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்