நீட் தேர்வு மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – விண்ணப்பக் கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டிப்பு!
2021 இளங்கலை நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்த நாளை வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
விண்ணப்ப கட்டணம்:
தேசிய தகுதி மற்றும் மருத்துவ நுழைவு தேர்வான நீட் தேர்வு வருடத்திற்க்கு ஒரு முறை மட்டுமே நடத்தப்படுகிறது. நீட் தேர்வில் தேர்வானவர்கள் மட்டுமே இளங்கலை மருத்துவ படிப்பில் அனுமதிக்கப்படுவார்கள். நீட் தேர்வு உலகத்திலேயே நடக்கும் மிகப்பெரிய தேர்வாகும். ஆண்டு தோறும் 16 லட்சம் பேர் இத்தேர்வை எழுதுகின்றனர். கொரோனா அச்சம் காரணமாக நீட் நுழைவு தேர்வு நடப்பாண்டில் வழக்கத்தை விட தாமதமாக நடத்தப்படுகிறது. நடப்பு ஆண்டில் நீட் தேர்வு செப்டம்பர் 12ம் தேதி நடக்க இருக்கிறது.
பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து முக்கிய நடிகை வெளியேற்றம் – நடிகையின் பதிவால் ரசிகர்கள் ஷாக்!
இதற்காக ஜூலை 13ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுளள்து. விண்ணப்பங்களில் உள்ள திருத்தங்களை மேற்கொள்வதற்கு ஆகஸ்ட் 11ம் தேதி முதல் ஆகஸ்ட் 14 ( இன்று ) மதியம் 2 மணி வரை அனுமதி அளிக்கப்பட்டது. நடப்பாண்டு நீட் தேர்வில் வினாத்தாள் முறையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரபூர்வ தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2021 நீட் தேர்வில், இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் ஆகிய நான்கு பாடங்கள் உள்ளது. ஒவ்வொரு பாடத்திலும், பலதேர்வு அடிப்படையிலான வினாக்கள் இரண்டு பிரிவுகளாக மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு வினாக்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.
TN Job “FB
Group” Join Now
இந்நிலையில், 2021 நீட் தேர்வுக்கு முன்னதாக விண்ணப்பித்து கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு மீண்டும் ஒரு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக என்டிஏ வெளியிட்டுள்ள அறிக்கையில், மாணவர்களின் தொடர்ச்சியான கோரிக்கையின் பேரில் விண்ணப்ப கட்டணம் செலுத்த ஆகஸ்ட் 15 ம் தேதி இரவு 11: 50 வரை அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்கள் இந்த கடைசி வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இனி, மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.