பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து முக்கிய நடிகை வெளியேற்றம் – நடிகையின் பதிவால் ரசிகர்கள் ஷாக்!
பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது பரபரப்பான காட்சிகள் ஒளிபரப்பாகி வரும் நிலையில், சீரியலில் இருந்து முக்கிய நடிகை ஒருவர் வெளியேற உள்ளதாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் இருந்து தெரிகிறது.
நடிகையின் பதிவு:
பாரதி கண்ணம்மா சீரியல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நம்பர் 1 சீரியல் ஆகும். டிஆர்பில் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. முதலில் சீரியலில் கருமையான நிறம் கொண்ட தனது அக்காவை வெறுக்கும் கதாபாத்திரமாக தான் அஞ்சலி அறிமுகம் ஆனார். அஞ்சலியை அழகிப் போட்டியில் பார்த்து இவர் தான் தனது மகன் அகிலுக்கு மனைவியாக வர வேண்டும் என்று சௌந்தர்யா விரும்புவார். ஆனால் பாரதியை முதல்முறை பார்த்ததுமே அஞ்சலி காதலிக்க தொடங்கிவிடுவார். ஆனால் பாரதியோ கண்ணம்மாவை விரும்புவார்.
‘பீஸ்ட்’ படத்தின் தலைப்பு மாற்றம்? – படத்தின் அப்டேட் இதோ!
இதனால் அஞ்சலிக்கு கண்ணம்மா மேல் கோவம் அதிகரிக்க தொடங்கியது. முதலில் வில்லியாக தான் சீரியலில் அறிமுகம் ஆனார். அதன்பின்னர், அவரது குணம் மாறி தற்போது நல்ல மாற்றம் கொண்டுள்ளதாக தொடரில் வருகிறார். தற்போது தொடரில் அஞ்சலி கர்ப்பமாக இருப்பதாகவும், ஆனால் அவருக்கு உடல்நல பிரச்னை இருப்பதாகவும், குழந்தை பிறகும் சூழலில் அவரது உயிருக்கே ஆபத்து என்றும் மருத்துவர்கள் எச்சரித்து உள்ளனர். இதனால் அஞ்சலி மிகவும் கவலையாக இருப்பதாகவே சீரியலில் வருகிறார்.
TN Job “FB
Group” Join Now
அஞ்சலி நிஜ வாழ்க்கையில் சமூக ஊடகங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருப்பார். தினமும், ஷூட்டிங் ஸ்பாட்டில் ரீலிஸ் மற்றும் போட்டோ போன்றவற்றை பதிவிட்டு வருவார். இதனால் இவருக்கு ரசிகர்கள் அதிகம். இந்நிலையில், இன்று திடீரென்று அஞ்சலி தன்னுடன் நடிக்கும் அகிலனை டேக் செய்து ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில், இனி இது போன்ற எடிட்டை மிஸ் செய்வோம் என்று கூறியுள்ளார். இதனால் அவர் இந்த சீரியலில் இருந்து வெளியேறுவதாக ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.