வாழ எளிதான நகரங்களில் மதுரை 22வது இடம் – மத்திய அரசு ஆய்வு!!

0
வாழ எளிதான நகரங்களில் மதுரை 22வது இடம் - மத்திய அரசு ஆய்வு!!
வாழ எளிதான நகரங்களில் மதுரை 22வது இடம் - மத்திய அரசு ஆய்வு!!
வாழ எளிதான நகரங்களில் மதுரை 22வது இடம் – மத்திய அரசு ஆய்வு!!

மத்திய அரசின் சார்பில் ‘Ease of Living 2020’ என்ற பெயரில் இந்தியாவில் உள்ள வாழ எளிதான நகரங்களை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், மதுரை 22வது இடத்தை பிடித்துள்ளது.

ஆய்வுகள்:

மத்திய அரசின் சார்பில் ‘Ease of Living 2020’ என்ற பெயரில் வாழ எளிதான நகரங்கள் குறித்த சர்வே மேற்கொள்ளப்பட்டது. மக்கள் தொகை அடிப்படையில் வெவேறு பிரிவுகளாக சர்வே நடைபெற்றது. 10 லட்சத்திற்கும் அதிகமான நகரங்களுக்கு என்று தனியாக போட்டி நடத்தப்பட்டது. 10 லட்சத்திற்கும் அதிகமான நகரங்களின் பட்டியலில் 49 நகரங்கள் இடம் பிடித்துள்ளது.

முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் – வழக்கு தள்ளுபடி

வசதிகள்:

இந்தியாவில் தமிழகத்தில் உள்ள சென்னை, மதுரை , கோவை என்ற மூன்று நகரங்கள் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளது. இந்த நகரங்களின் கல்வி, சுகாதாரம், குடியிருப்பு வசதி, வேலை வாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி, பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மற்றும் தங்கள் நகர் குறித்து மக்கள் அளித்த கருத்துகள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் பட்டியலிடப்பட்டது.

TN Job “FB  Group” Join Now

மதுரை:

பட்டியலின் முதல் மூன்று இடங்களில் பெங்களூரு, புனே, ஆமதாபாத் போன்ற நகரங்கள் இடம்பெற்றுள்ளது. சென்னை 4வது இடத்திலும், கோவை 7வது இடத்திலும் உள்ளது. மதுரை நகரம் வாழ எளிதான நகரங்களின் பட்டியலில் 22வது இடத்தை பெற்றுள்ளது. நல்ல திட்டங்கள் மூலம் அரசும், சரியான நடவடிக்கைகள் மூலம் மக்களும் மதுரை நகரம் முன்னேற வழிவகை செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!