பொறியியல் படிப்புகளுக்கு கணிதம், இயற்பியல் பாடங்கள் அவசியம் – ஏஐசிடிஇ அறிவிப்பு!!

0
பொறியியல் படிப்புகளுக்கு கணிதம், இயற்பியல் பாடங்கள் அவசியம் - ஏஐசிடிஇ அறிவிப்பு!!
பொறியியல் படிப்புகளுக்கு கணிதம், இயற்பியல் பாடங்கள் அவசியம் - ஏஐசிடிஇ அறிவிப்பு!!
பொறியியல் படிப்புகளுக்கு கணிதம், இயற்பியல் பாடங்கள் அவசியம் – ஏஐசிடிஇ அறிவிப்பு!!
தமிழகத்தில் இளநிலை பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு கணிதம், இயற்பியல் பாடங்கள் படிக்க அவசியமில்லை என்று ஏஐசிடிஇ அறிவித்திருந்த நிலையில், தற்போது இந்த அறிவிப்பை திரும்ப பெற்றுள்ளது.

பொறியியல் படிப்புகள்:

பொறியியல் படிப்புகளுக்கு மாணவர்கள் தங்களின் 12ம் வகுப்பில் இயற்பியல், கணிதம், வேதியியல் பாடங்களை முதன்மை பாடமாக கண்டிப்பாக படித்திருக்க வேண்டும். இந்த பாடங்களில் மாணவர்கள் எடுத்திருக்கும் கட்ஆப் மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை இளநிலை பொறியியல் பாடங்களில் நடக்கும்.

இரண்டாம் ஆண்டு பியூசி தேர்வுகள் திருத்தப்பட்ட அட்டவணை – கல்வித்துறை வெளியீடு!!   

மாற்றம்:

பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளுக்கான 2021-22ம் ஆண்டு ஒப்புதல் கையேட்டை ஏஐசிடிஇ வெளியிட்டது. அதன்படி, இளநிலை பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளுக்கு கணிதம், இயற்பியல் பாடங்கள் கட்டாயமில்லை என்று ஏஐசிடிஇ அறிவித்தது. மேலும், இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான கல்வித்தகுதிகளையும் மாற்றியமைத்துள்ளது.

TN Job “FB  Group” Join Now

ஏஐசிடிஇ முடிவில் மாற்றம்:

ஏஐசிடிஇ.,யின் இந்த முடிவுக்கு கல்வியாளர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு நிலவியது. இதனால் ஏஐசிடிஇ.,யின் இளநிலை பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளுக்கு கணிதம், இயற்பியல் பாடங்கள் கட்டாயமில்லை என்ற அறிவிப்பை தற்காலிகமாக திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது. பொறியியல் படிப்புகளுக்கு வழக்கம் போல் கணிதம், இயற்பியல் பாடங்கள் அவசியம் என்றும் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!