20,000 ஊழியர்கள் அதிரடி பணி நீக்கம் – Amazon வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
மிகப் பெரிய இ – வணிக நிறுவனமான அமேசான் தொடர்ந்து ஆட்கள் குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. தற்போதைய அறிக்கையின் படி 20,000 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
பணி நீக்கம்:
உலகம் முழுவதும் நிலவி வரும் பொருளாதார மந்த நிலை அனைத்து துறைகளையும் பாதித்துள்ளது. இதனால் வளர்ச்சி அடைந்த மிகப்பெரிய நிறுவனங்கள் முதல் சிறிய நிறுவனங்கள் வரை அனைத்தும் தங்களின் நிர்வாக செலவுகளை கட்டுப்படுத்த ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது. இந்த நடவடிக்கை பணிபுரியும் ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
மற்ற நிறுவனங்களைத் தொடர்ந்து இ – காமர்ஸ் நிறுவனமான அமேசானும் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது. அண்மையில் 10,000 பணியாளர்களை நீக்கம் செய்ய உள்ளதாக அமேசான் தெரிவித்திருந்த நிலையில் தற்போது இந்த எண்ணிக்கை 20,000 ஆக உயரும் என்று தகவல்கள் வந்துள்ளது. இது மொத்த பணியாளர்களின் எண்ணிக்கையில் 1.3% ஆகும்.
TNPSC தேர்வர்களின் கவனத்திற்கு.. மாற்றப்பட்ட தேர்வு மையங்கள் – முக்கிய அறிவிப்பு!
Exams Daily Mobile App Download
இந்த பணி நீக்கம் என்பது நிறுவனத்தின் குறிப்பிட்ட துறைகளில் மட்டுமில்லாமல் அனைத்து துறைகளிலும் இருக்கும். பிறகு அதிகமான போது ஆட்கள் குறைக்கப்பட்டு வருகின்றனர். அமேசான் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டால் அதற்கான அறிவிப்பு அவர்களுக்கு 24 நிமிடத்தில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த பணி நீக்கம் குறித்து பேசிய அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி, பணி நீக்கம் தவிர்க்க முடியாதது 2023 ஆம் ஆண்டிலும் இவை தொடரும் என்று தெரிவித்துள்ளார். மேலும் பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு சலுகைகள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.