பிரிட்டனில் பயிலும் இந்திய கல்வியாளர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – 2 ஆண்டு பணி விசா வழங்கல்!
பிரிட்டன் மாகாணத்தில் பயிலும் இந்தியா உட்பட வெளிநாட்டு கல்வியாளர்கள் பட்டம் பெற்றதும் முன்பு போல் தற்போதும் 2 ஆண்டுகள் பணி விசா வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய கல்வியாளர்கள் அதிகம் பயனடைவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டன்:
வெளிநாடுகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஸ்டுடென்ட் விசா வழங்கப்படுவது வழக்கம். அவர்களின் கல்வி காலம் முடிவுக்கு வந்ததும் அவர்கள் தங்கள் தாய்நாட்டுக்கு திரும்பும் நிலை ஏற்படும். இந்த நடைமுறை ஒவ்வொரு நாட்டிற்கும் வேறுபடும். சில நாடுகளில் மாணவர்கள் ஆறு மாதங்கள் வரையிலும் சில நாடுகளில் ஒரு ஆண்டு வரையிலும் மாணவர்கள் தங்களுக்கான பணியை தேடி கொள்வதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பிரிட்டனில் 2 ஆண்டு பணி விசா வழங்கப்பட்டு வந்தது.
தமிழகத்தில் ஆவின் பணி நியமனத்தில் முறைகேடு – வெளியான அதிர்ச்சி தகவல்!
ஆனால் இந்த நடைமுறையை கடந்த 2012 ல் பிரதமர் பதவியேற்ற தெரசா அவர்கள் பணி விசாவை 4 மாதங்களாக குறைத்து உத்தரவிட்டார். இதனால் பிரிட்டனில் பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் அனைவரும் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். இந்நிலையில் தற்போது பிரிட்டன் பிரதமராக திகழும் போரிஸ் ஜான்சன் அவர்கள் இதுகுறித்து ஆய்வு செய்து ஓர் மாற்றத்தை கொண்டு வந்துள்ளார். அது அனைத்து தரப்பினர் மத்தியிலும் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.
அதன்படி முதற்கட்டமாக 4 மாத விசாவை 6 மாதமாகவும், முனைவர் பட்டம் பெற்றவர்களுக்கு 1 ஆண்டும் அதிகரித்து உத்தரவிட்டார். மேலும் வெளிநாட்டு மாணவர்கள் பட்டம் பெற்றதும் முன்பு போல் 2 ஆண்டுகள் பணி விசா வழங்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் இது குறித்து உள்துறை செயலாளர் கூறியதாவது, பிரிட்டனில் பட்டம் பயில விரும்பும் மாணவர்கள் முதல் முறையாக ஆன்லைனில் முழுமையாக விண்ணப்பிக்கலாம்.
TN Job “FB Group” Join Now
இவ்விசாவை பெற விரும்புபவர்கள் முறையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். தற்போது இதற்கான செயலியை மாணவர்கள் தங்கள் ஸ்மார்ட்போன் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார். இந்த முறையில் மாணவர்கள் எளிதில் விசா பெற என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு மாணவர்கள் யுகே விசா மற்றும் குடியேற்ற மையத்துக்கு நேரில் சென்று விசா விண்ணப்பம் செய்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.