மத்திய அரசு பணிகளில் கடந்த 5 ஆண்டுகளில் 2.46 லட்சம் பேர் நியமனம் – மத்திய அமைச்சர் தகவல்!
மத்திய அரசு துறைகளில் கடந்த 5 ஆண்டுகளில் நியமனம் செய்யப்பட்டுள்ள பணியாளர்களின் எண்ணிக்கை குறித்து மத்திய அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் அறிவித்துள்ளார்.
பணி நியமனம்:
நாட்டின் நாடாளுமன்ற கூட்ட தொடர் தற்போது நடந்து வருகிறது. இதில், பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்த கேள்விகள் மத்திய அமைச்சரவைக்கு எதிர்க்கட்சிகள் மற்றும் பிற தலைவர்களிடம் இருந்து கேட்கப்படுகிறது. இதற்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். இந்நிலையில்,நாட்டின் வேலைவாய்ப்பு மற்றும் மத்திய அரசு பணியாளர் நியமனம் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது.
ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – டிச.10 குறைதீர்ப்பு முகாம்!
Exams Daily Mobile App Download
அதற்கு அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் அவர்கள் பதில் அளித்துள்ளார். அப்போது, ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (UPSC) மற்றும் பணியாளர் தேர்வாணையம் (SSC) மூலம் கடந்த 5 ஆண்டுகளில் 2,46,914 பேர் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார். மேலும் நிரப்பப்படாத பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்பட உரிய நடவடிக்கைகள் எடுக்குமாறு மத்திய அரசு அனைத்து துறை அமைச்சகங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.