2100க்குள் உலக வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸை விட அதிகரிக்கும் – எச்சரிக்கும் IPCC அறிக்கை!

0
2100க்குள் உலக வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸை விட அதிகரிக்கும் - எச்சரிக்கும் IPCC அறிக்கை!
2100க்குள் உலக வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸை விட அதிகரிக்கும் - எச்சரிக்கும் IPCC அறிக்கை!
2100க்குள் உலக வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸை விட அதிகரிக்கும் – எச்சரிக்கும் IPCC அறிக்கை!

உலக வெப்பமயமாதல் என்றவொரு விஷயம் தற்போது மீண்டும் ஓங்கியுள்ளது. இவை மனித நடவடிக்கைகளால் தான் ஏற்படுகிறது என்று கூறுவதற்கு உறுதியான ஆதாரம் இல்லை என்றாலும், வரும் 2100 ஆண்டுக்குள் உலக வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸை விட அதிகமாகும் என அறிக்கைகள் கூறுகிறது.

புவி வெப்பமயமாதல்

முந்தைய காலங்களுடன் ஒப்பிடும்போது புவி வெப்பமடைதலால் ஏற்படும் அச்சுறுத்தலின் மற்றொரு நினைவூட்டலாக, வரும் 2100 ஆம் ஆண்டில் சராசரி உலகளாவிய வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸை விட அதிகமாக உயரும் என்று காலநிலை மாற்றத்திற்கான இடை-அரசு குழு (IPCC) எச்சரிக்கை கொடுத்துள்ளது. இது தொடர்பாக IPCC ன் ஆறாவது மதிப்பீட்டு அறிக்கையின் (AR6) முதல் பகுதி கூறுகையில், இது பூமியின் தட்பவெப்பநிலை, அதில் நிகழும் மாற்றங்கள், இவை கிரகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்கள், வாழ்க்கை வடிவங்களின் சமீபத்திய மதிப்பீட்டு அறிக்கைகள் அனைத்தும் பூமியின் காலநிலை குறித்து வெளிப்படுத்திய அறிவியல் கருத்து ஆகும்.

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை – ரேஷன் கார்டில் புகைப்படம் மாற்றம் தீவிரம்!

காலநிலை மாற்றத்திற்கான அறிவியல் சான்றுகளை முன்வைக்கும் AR6 இன் முதல் பகுதி, தொழில்துறைக்கு முந்தைய காலத்திலிருந்து உலகளாவிய வெப்பநிலை ஏற்கனவே சுமார் 1.1 டிகிரி செல்சியஸ் உயர்ந்துள்ளது என்று கூறுகிறது. இது 1850 மற்றும் 1900 க்கு இடைப்பட்ட காலத்தைக் குறிக்கிறது. மேலும் 1.5 டிகிரி செல்சியஸ் கூடுதல் வெப்பமயமாதலை எச்சரித்த அறிக்கை, இந்த மாற்றம் 2040 க்கு முன்னர் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறுகிறது. 2015 பாரிஸ் ஒப்பந்தத்தின் குறிக்கோள், காலநிலை மாற்றத்தை எதிர்த்து போராடுவதற்கான சர்வதேச வெப்பநிலையை 2 டிகிரி செல்சியஸுக்குள் கட்டுப்படுத்துவதாகும்.

ஆனால் 2 டிகிரி செல்சியஸுக்கு மேல் உலக வெப்பநிலை அதிகரிப்பு என்பது பேரழிவு மற்றும் மீள முடியாத மாற்றங்களை ஏற்படுத்தும் எனவும் இது மனிதர்கள் மற்றும் பிற உயிரினங்கள் உயிர்வாழ்வதை கடினமாக்குகிறது எனவும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இதற்கிடையில் கிரீன்ஹவுஸ் வாயு உமிழ்வுகளில் மிக விரிவான மாற்றங்கள் தொடங்கினாலும், வெப்பநிலை உயர்வு 1.6 டிகிரி செல்சியஸை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது புவி வெப்பமடைதல் மனித நடவடிக்கைகளால் ஏற்படுகிறது என்று சொல்வதற்கு உறுதியான ஆதாரங்கள் இல்லை என அறிக்கை கூறுகிறது.

உலக வானிலை அமைப்பு (WMO) மற்றும் UN சுற்றுச்சூழல் திட்டம் (UNEP) ஆகியவற்றால் 1988 இல் நிறுவப்பட்ட IPCC, எந்த புதிய அறிவியலையும் உருவாக்கவில்லை. அதற்கு பதிலாக, இது உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகளை ஒன்றுகூடி, பருவநிலை மாற்றம் தொடர்பான அனைத்து அறிவியல் இலக்கியங்களையும் மதிப்பாய்வு செய்து, கவனிக்கப்படும் போக்குகள் பற்றிய பொதுவான முடிவுகளுக்கு வருகிறது. புவி வெப்பமடைதலால் ஏற்படும் கடல் மட்ட உயர்வு அல்லது பனிப்பாறை உருகுவது போன்ற சில மாற்றங்கள் நூறாயிரக்கணக்கான ஆண்டுகளில் மீள முடியாததாக இருக்கும்.

TN Job “FB  Group” Join Now

கடந்த 100 ஆண்டுகளில் சராசரியாக சுமார் 20 செ.மீ உயர்ந்துள்ள கடல் மட்டங்கள், எதிர்கால உமிழ்வை பொறுத்து 30 செமீ முதல் ஒரு மீட்டர் வரை உயர வாய்ப்புள்ளது. அடுத்த 20 ஆண்டுகளில், புவி வெப்பமடைதல் 1.5 டிகிரி செல்சியஸை எட்டும் அல்லது தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், கிரீன்ஹவுஸ் வாயு உமிழ்வை நாம் விரைவாக குறைத்தால், 2050 இல் உலகளாவிய நிகர பூஜ்ஜிய CO2 உமிழ்வை எட்ட முடிந்தால், புவி வெப்பமடைதலை 2 டிகிரிக்கு கீழே வைத்திருக்க முடியும். இப்படி செய்தால், இந்த நூற்றாண்டின் இறுதியில் வெப்பநிலை படிப்படியாக குறைந்து அல்லது சுமார் 1.5 டிகிரி செல்சியஸாக குறைய வாய்ப்புள்ளது. ஆனால் இதற்கான சாத்தியக்கூறுகள் தற்போது இல்லை என கூறப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!