Uber நிறுவனத்தில் ரூ.2 கோடி சம்பளத்தில் வேலைவாய்ப்பு – IIT பட்டதாரிகளுக்கு ஜாக்பாட்!

0
Uber நிறுவனத்தில் ரூ.2 கோடி சம்பளத்தில் வேலைவாய்ப்பு - IIT பட்டதாரிகளுக்கு ஜாக்பாட்!
Uber நிறுவனத்தில் ரூ.2 கோடி சம்பளத்தில் வேலைவாய்ப்பு - IIT பட்டதாரிகளுக்கு ஜாக்பாட்!
Uber நிறுவனத்தில் ரூ.2 கோடி சம்பளத்தில் வேலைவாய்ப்பு – IIT பட்டதாரிகளுக்கு ஜாக்பாட்!

உபெர் நிறுவனம் இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் கேம்பஸ் பணி வாய்ப்பை வழங்கி வரும் நிலையில், அதில் முதல் நாள் பட்டதாரிகளுக்கு ரூ.2 கோடி வரை சம்பள பேக்கேஜை வழங்கியுள்ளது. இது வரும் ஆண்டுகளில் இன்னும் அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

கேம்பஸ் வேலைவாய்ப்பு:

உபெர் நிறுவனம் நாட்டின் சிறந்த தொழில்நுட்பப் பள்ளியான இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (IITs) மாணவர்களுக்கு கேம்பஸ் வேலைவாய்ப்பு முகாமினை நடித்துள்ளது. இதில் அனைவரும் அதிசயிக்கும் வகையில் வேலைவாய்ப்புகளின் முதல் நாளிலேயே ரூ.2 கோடி வரம்பில் சம்பளச் சலுகைகளை வழங்கியுள்ளது. Uber நிறுவனம் ஆண்டுக்கு ரூ 2.05 கோடி அளவில் அறிவித்துள்ளதாகவும், இதில் ரூ.96 லட்சம் அடிப்படை ஊதியம், இலக்கு போனஸ், புதிய வாடகை மானியம் மற்றும் உள் நுழைவு போனஸ் ஆகியவை வழங்கப்படும் என்று அறிவிப்பட்டுள்ளது.

சபரிமலை செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – முன்பதிவில் விலக்கு! தேவஸ்தானம் அறிவிப்பு!

மேலும் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு பிறகு ஐஐடிகளில் இந்த அளவு சலுகை இப்போது தான் தரப்படுகிறது. 2020 ஆம் ஆண்டில், சான் ஜோஸை தளமாகக் கொண்ட கோஹெசிட்டி அதிகபட்சமாக ரூ.1.48 கோடி சம்பளம் அளித்தது குறிப்பிடத்தக்கது. கேப்-ஹெய்லிங் நிறுவனம் பம்பாய், மெட்ராஸ், ரூர்க்கி, கான்பூர், குவஹாத்தி மற்றும் வாரணாசியில் உள்ள ஐஐடிகளில் வேலைவாய்ப்பினை வழங்கியுள்ளதாக ஐஐடி வேலை வாய்ப்பு உறுப்பினர்கள் அறிவித்துள்ளனர். இது தொடர்பாக Uber இன் செய்தித் தொடர்பாளர், “நிறுவனம் தனது ஹைதராபாத் மற்றும் பெங்களூரு மையங்களுக்கு பொறியாளர்களை பணியமர்த்துவதாக” செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

தமிழகத்தில் அனைத்து பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு – ஒமிக்கிரான் தொற்று விழிப்புணர்வு! நெறிமுறைகள் வெளியீடு!

ஐஐடிகள் உட்பட இந்தியா முழுவதும் உள்ள சிறந்த தொழில்நுட்ப வளாகங்களை Uber தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், பட்டதாரிகளுக்கு சிறந்த வாய்ப்புகளை வழங்க உள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும், Quantbox Research, Graviton Research, Da Vinci Derivatives மற்றும் Quadeye போன்ற வர்த்தக நிறுவனங்களும் கேம்பஸ் வேலைவாய்ப்பின் போது பட்டதாரிகளுக்கு லாபகரமான சம்பள பேக்கேஜ்களை வழங்குகிறது. இந்த நிறுவனங்களில் சில, ரூ.1.8 கோடி வரை சம்பளமாக வழங்குவது குறிப்பிடத்தக்கது. ஐஐடி கவுகாத்தியில் உள்ள தொழில் மேம்பாட்டு மையத்தின் தலைவர் அபிஷேக் குமார் இது தொடர்பாக, ஐஐடி நிறுவனம் இந்த ஆண்டு உள்நாட்டு மற்றும் சர்வதேச அளவிலான சாதனை படைத்துள்ளதாக கூறினார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!