நடப்பு நிகழ்வுகள் – 18 ஜூலை 2023

0
நடப்பு நிகழ்வுகள் - 18 ஜூலை 2023
நடப்பு நிகழ்வுகள் - 18 ஜூலை 2023
நடப்பு நிகழ்வுகள் – 18 ஜூலை 2023

தேசிய செய்திகள்

புது டெல்லியில் “பூமி சம்மான் 2023” ஆனது இந்திய குடியரசு தலைவரால் தொடங்கப்பட உள்ளது.

  • டிஜிட்டல் இந்திய நில ஆவணங்கள் நவீனமயமாக்கல் திட்டத்தின் முக்கிய கூறுகளை நிறைவு செய்வதில் சிறந்து விளங்கிய, ஒன்பது மாநில செயலாளர்கள் மற்றும் அவர்களுடன் 68 மாவட்ட ஆட்சியர்களுடனான “பூமி சம்மான் 2023″ ஆனது ஜூலை 18 அன்று இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அவர்களால் புது தில்லியில் தொடங்கப்பட உள்ளது.
  • இந்த “பூமி சம்மான்” திட்டமானது நம்பிக்கை மற்றும் கூட்டாண்மை அடிப்படையிலான மத்திய-மாநில கூட்டுறவு கூட்டாட்சிக்கு சிறந்த எடுத்துக்காட்டு என்றும் இந்த திட்டத்தின் மூலம் மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு இந்த திட்டமானது மேற்கொள்ளப்பட்டுள்ளது என குடியரசு தலைவர் தெரிவித்துள்ளார்.

கார்பன் பற்றிய ஆய்வுக்காக தேஜ்பூர் பல்கலைக்கழகம் மற்றும் ஐஐடிஎம் புனே இடையே புரிந்துணர்வு ஒப்பந்தமானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

  • அசாம் மாநிலத்தின் புகழ்பெற்ற காசிரங்கா தேசிய பூங்காவில் “கார்பன் டை ஆக்சைட்டின் நிகர சுற்றுச்சூழல் பரிமாற்றத்தை மதிப்பிட்டு மறு ஆய்வினை மேற்கொள்வதற்காக” தேஜ்பூர் பல்கலைக்கழகம் மற்றும் இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனம் புனே (IITM) இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தமானது(MoU) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • தேஜ்பூர் பல்கலைக்கழகம் மற்றும் ஐஐடிஎம் ஆகியவை “பசுமை இல்ல வாயுக்கள் மற்றும் ஆற்றலின் உயிர்க்கோளம் – வளிமண்டல பரிமாற்றம்” தொடர்பான பல்வேறு ஆராய்ச்சிப் பகுதிகளில் ஒத்துழைத்து அவற்றை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு இந்த புரிந்துணர்வு ஒப்பந்தமானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அனைத்து NSO தரவுகளையும் மறு சீராய்வு செய்ய மத்திய அரசாங்கமானது புதிய குழுவை உருவாக்கியுள்ளது.

  • 2019 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அமைக்கப்பட்ட பொருளாதார புள்ளியியல் (SCES) நிலைக் குழுவை மறுசீரமைத்து, வேலை வாய்ப்புகள் மற்றும் நுகர்வு செலவுகள் குறித்த ஆய்வுகளின் உத்தியோகபூர்வ தரவுகளை மதிப்பாய்வு மற்றும் மறுசீராய்வை மேற்கொள்வதற்காக மத்திய அரசாங்கமானது ஒரு ஆராய்ச்சி குழுவை ஜூலை 2023 இல் அமைத்துள்ளது. 
  • சமீபத்தில் வெளியிடப்பட்ட உத்தரவில், புள்ளியியல் அமைச்சகமானது, தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் (NSO) கீழ் நடத்தப்பட்ட ஆய்வுகளின் பொருளாதாரக் குறிகாட்டிகளை மட்டுமே ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த SCES-க்கு மாற்றாக இப்போது புள்ளியியல் நிலைக்குழு (SCoS) மூலம் ஆய்வு நடைபெறும் என்று குறிப்பிட்டுள்ளது.

சர்வதேச செய்திகள்

UAE இன் உடனடி கட்டணத் தளத்துடன் இந்தியாவின் “ஒருங்கிணைந்த கட்டண இடைமுகத்தை” இணைப்பதற்காக இந்தியாவும் ஐக்கிய அரபு அமீரகமும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

  • எல்லை தாண்டிய பரிவர்த்தனைகளுக்கு உள்ளூர்(இந்திய ரூபாய் மற்றும் UAE திர்ஹம்) நாணயங்களைப் பயன்படுத்துதல் மற்றும் அவற்றின் பணம் செலுத்துதல் அமைப்புகளை ஒன்றோடொன்று இணைக்கும் ஒத்துழைப்புகாக இந்தியாவும் ஐக்கிய அரபு அமீரகமும் சில புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளன.
  • இந்த ஒப்பந்தமானது இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகத்திற்கு பெரும் ஊக்கத்தை அளிப்பது மட்டுமில்லாமல் மேம்பட்ட பொருளாதார ஒத்துழைப்புக்கு வழி வகுக்கும் என்றும் இது சர்வதேச நிதி தொடர்புகளை எளிதாக்கும் என்றும் மத்திய ரிசர்வ் வாங்கி ஆளுநர் தாஸ் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா மற்றும் மங்கோலிய ராணுவத்தினருக்கு இடையேயான கூட்டு ராணுவப் பயிற்சியான ‘Nomadic Elephant 2023’ ஆனது தொடங்கியுள்ளது.

  • இந்தியாவுக்கும் மங்கோலியாவுக்கும் இடையிலான கூட்டு ராணுவப் பயிற்சியின் 15வது பதிப்பான  ‘Nomadic Elephant 2023’ ஆனது மங்கோலியாவில் உள்ள உலான்பாதரில் ஜூலை 17 அன்று தொடங்கியுள்ளது. இந்த கூட்டு ராணுவ பயிற்சியானது ஜூலை 17 முதல் 31 ஆம் தேதி வரை நடைப்பெற உள்ளது.
  • “Nomadic Elephant” என்ற கூட்டு ராணுவ பயிற்சியானது இந்தியா மற்றும் மங்கோலியா இடையிலான வருடாந்திர கூட்டு பயிற்சியாகும். கடந்த பதிப்பானது அக்டோபர் 2019 இல் பக்லோவில் உள்ள சிறப்புப் படைகள் பயிற்சி பள்ளியில் நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
Indian soldiers with 2nd Battalion, 5th Gurkha Rifles, 99th Mountain Brigade, stack against a wall as they prepare to clear a building of insurgents during field training with U.S. Soldiers with the 1st Brigade Combat Team, 82nd Airborne Division, at Fort Bragg, N.C., May 13, 2013. The training was part of Yudh Abhyas, an annual bilateral training exercise between the Indian Army and U.S. Army Pacific, hosted this year by the 82nd Airborne Division’s parent organization, 18th Airborne Corps. (U.S. Army photo by Sgt. Michael J. MacLeod/Released)

மாநில செய்திகள்

மகாராஷ்டிராவின் அமராவதியில் PM MITRA வளாகத்தை அம்மாநில முதல்வர் திறந்து வைத்துள்ளார்.

  • மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஜூலை 16 அன்று மஹாராஷ்டிராவின் அமராவதியில் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் பலரின் முன்னிலையில் “PM MITRA PARK” என்ற மாபெரும் ஒருங்கிணைந்த ஜவுளிப் பகுதிகள் மற்றும் ஆடை பூங்காவை தொடங்கி வைத்துள்ளார்.
  • மேலும் இந்த தொடக்க விழா நிகழ்ச்சியில் மத்திய அரசுக்கும் மகாராஷ்டிர அரசுக்கும் இடையே PM-MITRA பூங்கா பற்றிய சில புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் சில முதலீட்டாளர்களுடன் சில புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாதம், ஜவுளித் தொழிலின் வளர்ச்சிக்காக நாடும் முழுவதும் மித்ரா பூங்காக்கள் அமைப்பதற்கான இடங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

திரிபுரா மாநிலமானது “பள்ளி மாணவர்களுக்கு” இலவச படகு சேவையைத் தொடங்கியுள்ளது.

  • திரிபுராவின் குமாதி மாவட்டத்தில் உள்ள தும்பூர் ஏரி தீவுகளில் வசிக்கும் ஏழை மாணவர்களை, அவர்களின் பள்ளிக்கு அழைத்துச் செல்வதற்காக திரிபுரா பள்ளிக் கல்வித் துறையானது ‘இலவச பள்ளி படகு’ சேவையை ஜூலை 2023 இல் தொடங்கியுள்ளது.
  • டம்பூர் ஏரி மற்றும் அதை சுற்றியுள்ள பல சிறு தீவுகளில் வசிக்கும் ஏழை குழந்தைகள் “படகு சவாரி கட்டணத்தை” செலுத்த முடியாததால் பள்ளிக்கு செல்வதற்கு அடிக்கடி சிரமப்படுவதை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கையானது எடுக்கப்பட்டுள்ளது என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். 48 தீவுகளால் சூழப்பட்ட டம்பூர் ஏரியானது மாநிலத் தலைநகரில் இருந்து 120 கி.மீ தொலைவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

3வது ஜி20 நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் மாநாடானது காந்திநகரில் நடைப்பெறுகிறது.

  • மூன்றாவது ஜி20 “நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் (FMCBGs)” மாநாடானது குஜராத் மாநிலத்தின் காந்திநகரில் ஜூலை 17 அன்று தொடங்கியுள்ளது. 
  • ரிசர்வ் வங்கி ஆளுநர் டாக்டர் சக்திகாந்த தாஸ் மற்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் கூட்டாக இந்த மாநாட்டிற்கு தலைமை தாங்குகின்றனர். உணவு, ஆற்றல் பாதுகாப்பின்மை மற்றும் காலநிலை மாற்றம் போன்ற உலகளாவிய சவால்களை எவ்வாறு சமாளிப்பது மற்றும் மேம்பட்ட பொருளாதார ஒத்துழைப்பை உறுதி செய்தல் ஆகியவற்றை நோக்கமாக கொண்டு இந்த மாநாடானது நடைப்பெற உள்ளது.

பாதுகாப்பு அமைச்சர் லக்னோவில் பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார்.

  • மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்திர பிரதேச மாநிலத்தின் லக்னோவில் ஜூலை 17 அன்று தேசிய நெடுஞ்சாலைத் திட்டத்தின் ஒரு பகுதியான மடியான்-ஐஐஎம் கிராசிங் மேம்பாலம் மற்றும் 3300 கோடி மதிப்பிலான இரண்டு தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள் உட்பட பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார். 
  • இந்த திட்டங்களின் மூலம் மக்களின் பொருளாதார வளர்ச்சியானது மேலும் வலுப்படும் எனவும் ஆலம்நகர் மற்றும் ராஜாஜிபுரம் உள்ளிட்ட நகரின் “மேற்குப் பகுதியின்’ பயணிகள் தலைநகரமான புது தில்லிக்கு ரயில்களில் கூட்ட நெரிசலின்றி ஏறவும் இறங்கவும் உதவும் வகையில் புதிதாக உருவாக்கப்பட்ட “ஆலம்நகர் ரயில் நிலையத்தையும்” இந்த நிகழ்வில் திறந்து வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மாநிலத்தில் பேரிடரால் பாதித்த பூர்வீக மக்களுக்கு உதவ ஹிமாச்சல் மாநில முதல்வர் ஒரு வலைத்தளத்தை(PORTAL)  தொடங்கியுள்ளார்.

  • ஹிமாச்சல பிரதேச மாநிலத்தின் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டு இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சுகு ஜூலை 16 அன்று “Aapda Rahat Kosh – 2023″(PORTAL) என்ற வலைத்தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.
  • பேரிடரின் அளவு மிகப் பெரியது என்றும், மாநிலம் இதுவரை இந்தளவு பெரிய பாதிப்பை கண்டதில்லை என்றும் நாட்டில் உள்ளவர்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ளவர்கள் உதவ விருப்பம் உள்ளவர்கள் இந்த வலைத்தளம் மூலம் பணத்தை நன்கொடையாக அளிக்கலாம் என்று ஹிமாச்சல பிரதேச முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

உத்தரகாண்டின் ஹரேலா திருவிழாவானது தொடங்கியுள்ளது.

  • இந்து நாட்காட்டியின் மாதமான ஷ்ரவணில் கொண்டாடப்படும் மழைக்காலத்தின் (பருவமழை) தொடக்கத்தைக் குறிப்பதற்காக இந்த ஷ்ரவன் ஹரேலா திருவிழாவானது கொண்டாடப்படுகிறது. ஹரேலா என்றால் “பசுமை நாள்”என்பதை குறிப்பதாகும்.
  • மேலும் இந்த விழாவில் விவசாயிகள் தங்கள் வயல்களில் பாரம்பரிய விதைப்பு சுழற்சியை தொடங்குவார்கள். ஒவ்வொரு ஆண்டும் இது ஜூலை 16 மற்றும் 17 ஆம் நாட்களில் கொண்டாடப்படுகிறது. 

நியமனங்கள்

அமெரிக்காவின் ஏற்றுமதி கவுன்சிலுக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த ஷமினா சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

  • சர்வதேச வர்த்தகத்தில் முதன்மையான தேசிய ஆலோசனைக் குழுவாக செயல்படும் ஜனாதிபதியின் “ஏற்றுமதி கவுன்சிலின்” உறுப்பினராக இந்திய-அமெரிக்க வணிகத் தலைவர் “ஷமினா சிங்” ஐ அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் நியமித்துள்ளார்.
  • ஷமினா தற்போது மாஸ்டர்கார்டில் நிலைத்தன்மையின் நிர்வாக துணைத் தலைவராக பணியாற்றுகிறார் மற்றும் அவர் வெள்ளை மாளிகை மற்றும் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் மூத்த பதவிகளை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தொல்லியல் ஆய்வுகள்

வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண்ணால் செய்யப்பட்ட தோசைக்கல்  ஆனது கண்டெடுப்பு.

  • விருதுநகா் மாவட்டத்தில் உள்ள வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட அகழாய்வில் சுடுமண்ணால் செய்யப்பட்ட ‘தோசைக்கல்” ஆனது  ஜூலை 17 அன்று (திங்கள் கிழமை) கண்டெடுக்கப்பட்டுள்ளது.
  • வெம்பக்கோட்டை பகுதிக்குள்பட்ட விஜயகரிசல்குளம் கரையோரம் உச்சிமேடு பகுதியில் முதலாம் கட்ட அகழாய்வுப் பணிகள் முடிவுற்ற நிலையில், அங்கிருந்து 3,254 பொருள்கள் ஆனது கண்டெடுக்கப்பட்டன. மேலும், இதே பகுதியில் இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணிகள் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி தொடங்கப்பட்டு 8 குழிகள் தோண்டப்பட்டன. இவற்றிலிருந்து இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருள்கள் ஆனது கண்டெடுக்கப்பட்டுள்ளன.

விளையாட்டு செய்திகள்

இத்தாலியில் நடைபெற்ற ISSF  உலகக் கோப்பை சிறு துப்பாக்கி போட்டியில் இந்திய வீரர் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

  • ஜூலை 16 அன்று இத்தாலியின் லோனாடோவில் நடைபெற்ற ISSF உலகக் கோப்பை சிறு துப்பாக்கி 2023 – ஆடவர் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர் பிருத்விராஜ் தொண்டைமான் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
  • பிருத்வியின் இந்த வெண்கலம் தான் லோனாட்டோ துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு கிடைத்த ஒரே பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த இறுதி போட்டியில் இங்கிலாந்தின் நாதன் ஹேல்ஸ்(முதல்)  49 புள்ளிகளுடன் தங்கப் பதக்கத்தையும், சீனக் குடியரசின் குய் யிங்(இரண்டாவது) 48 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றுள்ளனர்.

ISSF இளையோருக்கான உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடும் வீரர்கள் தங்கப் பதக்கம் வென்றுள்ளனர்.

  • ஜூலை 16 அன்று நடைபெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான ISSF இளையோர் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பிரிவுகளில் துப்பாக்கி சுடும் வீரர்களான ஷுபம் பிஸ்லா மற்றும் சைன்யம் ஆகியோர் இந்தியாவிற்காக தங்கப் பதக்கங்களை வென்றுள்ளனர்.
  • ISSF இளையோர் உலக சாம்பியன்ஷிப் போட்டிகள், கொரியா குடியரசின் “சாங்வான்” பகுதியில் நடைப்பெற்ற வருகின்றன. மேலும் இந்தியா இரண்டு தங்கப் பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அல்காரஸ் ஜோகோவிச்சை வீழ்த்தி தனது முதல் விம்பிள்டன் பட்டத்தை வென்றுள்ளார்.

  • ஏழு முறை சாம்பியனான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சை ஜூலை 16 அன்று தோற்கடித்து, தனது முதல் விம்பிள்டன் பட்டத்தை ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் வென்று சாதனை படைத்து 24வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார்.
  • உலகின் முதல் நிலை வீரரான அல்கராஸ் 1-6, 7-6 (8/6), 6-1, 3-6, 6-4 என்ற புள்ளிகளுடன் நான்கு மணி நேரம் 42 நிமிடங்களுக்குப் பிறகு வெற்றியை பெற்றுள்ளார். கடந்த ஆண்டு அவர் யுஎஸ் ஓபன் பட்டத்தைத் தொடர்ந்து 20 வயதான ஸ்பானியருக்கு இந்த வெற்றியானது இரண்டாவது பெரிய வெற்றியாகும்.

முக்கிய தினம்

 உலக சர்வதேச நீதி தினம் 2023

  • பல குற்றங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்குவதில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மற்றும் பிற அமைப்புகளின் குறிப்பிடத்தக்க சிறப்பான பங்கை போற்றுதல் மற்றும் மதிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 17 ஆம் நாளானது உலக சர்வதேச நீதி தினமானது கடைபிடிக்கப்படுகிறது.
  • “Overcoming Barriers and Unleashing Opportunities for Social Justice” என்பது இந்த ஆண்டிற்கான கருப்பொருளாகும்.


DOWNLOAD PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!