நடப்பு நிகழ்வுகள் – 17 செப்டம்பர் 2023

0
நடப்பு நிகழ்வுகள் - 17 செப்டம்பர் 2023
நடப்பு நிகழ்வுகள் - 17 செப்டம்பர் 2023
நடப்பு நிகழ்வுகள் – 17 செப்டம்பர் 2023

தேசிய செய்திகள்

PM விஸ்வகர்மா திட்டத்தை பிரதமர் மோடி தொடங்க உள்ளார்.

 • தேசிய தலைநகரமான புதுதில்லியில் உள்ள இந்திய சர்வதேச மாநாட்டு மற்றும் கண்காட்சி மைய வளாகத்தில் செப்டம்பர் 17 2023 அன்று விஸ்வகர்மா ஜெயந்தி தினத்தை முன்னிட்டு “PM விஸ்வகர்மா திட்டத்தை” இந்திய பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.
 • நாடு முழுவதும் உள்ள  நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள கைவினைஞர்களுக்கு நிதி ரீதியாக ஆதரவளிப்பது மட்டுமல்லாமல், கலாச்சாரம், பழமையான பாரம்பரியம் மற்றும் பல்வேறு பாரம்பரியத்தை உயிருடன் வைத்திருப்பதும், உள்ளூர் தயாரிப்புகள் உட்பட கலை மற்றும் கைவினைப்பொருட்கள் மூலம் முன்னேற்றம் அடைவதை நோக்கமாக கொண்டு இந்த திட்டமானது மேற்கொள்ளப்பட்டுள்ளதாகும்.

வந்தே பாரத் படுக்கை அமைப்புகள்(ஸ்லீப்பர்) ரயில் அறிமுகப்படுத்த திட்டம்.

 • வந்தே பாரத் படுக்கை அமைப்புகள்(ஸ்லீப்பர்) கொண்ட ரயில்களின் முதல் பதிப்பை இந்திய ரயில்வே துறையானது விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.
 • இந்த வகையை சார்ந்த வந்தே பாரத் ரயிலானது நடப்பு நிதியாண்டில் உற்பத்தி செய்யப்பட்டு மார்ச் 2024 இல் வெளியிடப்படும் என மத்திய ரயில்வே துறை வெளியிட்டுள்ள சமீபத்திய அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது. இது வந்தே மெட்ரோ ரயிலானது 12 பெட்டிகள் கொண்ட ரயிலாக இருக்கும் என்றும் குறுகிய தூர பயணத்திற்கு இந்த ரயிலானது பயன்படுத்தப்படும் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்போதா கண்காட்சி மற்றும் அரங்கமானது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 • நேபாளத்தின் இந்திய தூதரகம் மற்றும் நேபாள புத்த கூட்டமைப்பு மற்றும் இந்திய-நேபாள அறக்கட்டளை ஆகியவை இணைந்து நேபாள தலைநகரமான காத்மாண்டுவில் உள்ள நேபாள கலை மன்றத்தில் “சம்போதா அல்லது போதி ஸ்கிரிப்ட்” என்பதை பற்றிய இரண்டு நாள் கண்காட்சி மற்றும் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது.
 • இதில் முக்கியமாக ஆறாம் நூற்றாண்டிற்குப் பிறகு ஆச்சார்யா சம்போதாவால் உருவாக்கப்பட்ட நேபாளம், பூட்டான், திபெத் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் மாபெரும் புத்தரின் பிரசங்கத்தை அனுப்ப “சம்போதா ஸ்கிரிப்ட்” பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

உலகின் சிறந்த நிறுவனங்களின் முதல் 100 தரவரிசை பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இந்திய நிறுவனம் – இன்ஃபோசிஸ்.

 • இணையதள டேட்டா பிளாட்ஃபார்ம் ஸ்டேடிஸ்டா மற்றும் புகழ்பெற்ற டைம் இதழ் இணைந்து வெளியிடப்பட்ட 2023 ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த நிறுவனங்களின் முதல் 100 தரவரிசை பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இந்திய நிறுவனம் என்ற அந்தஸ்தை சமீபத்தில் இன்ஃபோசிஸ் பெற்றுள்ளது.
 • இந்த தரவரிசை பட்டியலில் இந்தியாவின் ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் 100க்கு கிட்டத்தட்ட 88.38 மதிப்பெண்களுடன் 64 வது இடத்தைப் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் இந்த பட்டியலில் ஆப்பிள், மைக்ரோசாப்ட் மற்றும் ஆல்பாபெட் ஆகியவை தரவரிசையில் முன்னிலையில் உள்ளது சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

CSIR-NIScPR அமைப்பானது ‘அறிவியல் அறிவு” என்ற மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளது.

 • CSIR-NIScPR அமைப்பானது தேசிய தலைநகரமான புதுதில்லியில் ‘அறிவியல் அறிவு’ என்ற தலைப்பிடப்பட்ட மாநாட்டை செப்டம்பர் 15 2023 அன்று நடத்த ஏற்பாடு செய்துள்ளது. 
 • CSIR-NIScPR அமைப்பின் இயக்குனர் டாக்டர் ரஞ்சனா அகர்வால் அவர்களின் தலைமையில் இந்த மாநாடானது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மாநாடானது CSIR அமைப்பின் ஒரு வாரம் ஒரு ஆய்வகம் என்ற முக்கிய  முன்னெடுப்பின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். “ஆராய்ச்சி முயற்சிகள் எப்போதும் ஒரு சமூக தாக்கத்தை உருவாக்கும்” என்பதை முக்கிய கருப்பொருளாக கொண்டு இந்த முன்னெடுப்பானது இயங்கி கொண்டிருக்கிறது.

மாநில செய்திகள்

LPG சிலிண்டர்களை ரூ.450க்கு வழங்க மத்திய பிரதேச அரசு முடிவு செய்துள்ளது.

 • மத்திய பிரதேச மாநிலத்தில் பிரதான்மந்திரி உஜ்ஜவாலா மற்றும் முக்யமந்திரி லாட்லி பெஹ்னா யோஜனா ஆகிய திட்டங்களின் கீழ் மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட அனைத்து பெண்களுக்கும் 450 ரூபாய் விலை மதிப்பளவில் “வீட்டு எரிவாயு சிலிண்டர்கள்” கிடைக்கும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
 • இந்த முக்கிய திட்டத்திற்கான பதிவு செயல்முறையை அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் செப்டம்பர் 15 2023 அன்று தொடங்கி வைத்துள்ளார். மேலும் மாநில அரசும் மற்ற சம்பந்தப்பட்ட நிறுவனம் மற்றும் துறைகளும் இந்த கூடுதல் தொகையை மாநிலத்தின் தகுதியான பெண்களின் வங்கிக் கணக்கில் மீண்டும் டெபாசிட் செய்து, மாதம் ஒரு வீட்டு உபயோக சிலிண்டர் என கிட்டதட்ட வெறும் 450 ரூபாய்க்கு பெறத் தொடங்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

சத்தீஸ்கரில் கிட்டத்தட்ட சுமார் ₹ 3,055 கோடி மதிப்பளவிலான பல்வேறு மேம்பாட்டு திட்டங்களை இந்திய பிரதமர் தொடங்கி வைத்துள்ளார்.

 • சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்கர் பகுதியில் கிட்டத்தட்ட சுமார் ₹ 3,055 கோடி செலவில் கட்டப்பட்ட தென்கிழக்கு நிலக்கரி நிறுவனத்தின்(SECL) கிழக்கு ரயில் பாதை திட்டத்தின் கட்டம்-1 ஐ பிரதமர் மோடி செப்டம்பர் 15 அன்று நாட்டிற்கு அர்ப்பணித்துள்ளார் என SECL அமைப்பானது வெளியிட்டுள்ள சமீபத்திய அதிகாரப்பூர்வ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 • தரம்ஜெய்கர் மற்றும் கார்சியா இடையேயான 124 கிமீ நீளமுள்ள இந்த பாதையானது SECL இன் நிலக்கரி சுரங்கங்கள் மற்றும் ராய்கர் பிராந்தியத்தை சுற்றியுள்ள மாவட்டத்தில் பரவியுள்ள மண்ட்-ராய்காட் நிலக்கரி சுரங்கங்களில் இருந்து மின் உற்பத்தி திட்டங்கள் உட்பட பல்வேறு இறுதி பயன்பாட்டு திட்டங்களுக்கு நிலக்கரி மற்றும் பிற மூலப்பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களையும் கொண்டு செல்வதை நோக்கமாக கொண்டு இந்த திட்டமானது மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

நியமனங்கள்

ED அமைப்பின் பொறுப்பு இயக்குநராக ராகுல் நவின் நியமனம்.

 • நாட்டின் முக்கிய IRS அதிகாரியான ராகுல் நவின், அமலாக்க இயக்குனரகத்தின்(ED) பொறுப்பு இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள சமீபத்திய அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 • இந்த பதவியானது தற்போது அந்த பொறுப்பில் உள்ள சஞ்சய் குமார் மிஸ்ரா அவர்களின் பதவிக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து செப்டம்பர் 15 2023 அன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் அடுத்த உத்தரவு வரும் வரை அந்த பொறுப்பில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருதுகள்

2023 ஆம் ஆண்டிற்கான “சிறந்த வானியல் புகைப்படக் கலைஞருக்கான” விருதை “பிளாஸ்மா ஆர்க்” புகைப்படமானது வென்றுள்ளது.

  • நமது பால்வீதிக்கு மிக அருகில் உள்ள “பெரிய சுழல் மண்டலம்” போன்ற அமைப்பான ஆண்ட்ரோமெடா பேரண்டத்திற்கு அடுத்துள்ள ஒரு மாபெரும் “பிளாஸ்மா ஆர்க்கின்” புகைப்படமானது, அமெச்சூர் வானியலாளர்கள் குழுவிற்கான 2023 ஆம் ஆண்டிற்கான “சிறந்த வானியல் புகைப்படக் கலைஞருக்கான போட்டியில் பட்டத்தை செப்டம்பர் 2023 இல் வென்றுள்ளது.
  • “ஆண்ட்ரோமெடா, எதிர்பாராதது” என்று பெயரிடப்பட்ட இந்த புகைப்படமானது ஆண்ட்ரோமெடா பேரண்டத்திற்கு அடுத்துள்ள ஒரு பெரிய பிளாஸ்மா ஆர்க்கினை தத்துருவமாக காட்டுகிறது. யான் செயின்டி, மார்செல் ட்ரெஸ்லர் மற்றும் சேவியர் ஸ்ட்ரோட்னர் ஆகியோரால் இந்த புகைப்படமானது எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
 • ஆண்ட்ரோமெடா  – நமது பால்வீதிக்கு மிக அருகில் உள்ள சுழல் விண்மீன் ஆகும்.

பொருளாதார செய்திகள்

இந்தியன் வங்கி ‘IB SAATHI’ என்ற முன்னெடுப்பை தொடங்கியுள்ளது.

 • மத்திய பொதுத்துறை நிறுவனமான இந்தியன் வங்கியானது செப்டம்பர் 16 2023 அன்று வணிக மற்றும் பொருளாதார நிபுணர் வழி மூலம் நிதித் துறையில் உள்ள அனைத்து பங்குதாரர்களுக்கும் ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் அமைப்பை வழங்குவதற்காக ‘IB SAATHI’ என்ற நாட்டின் முக்கிய முன்னெடுப்பை அறிவித்துள்ளது.
 • இந்த முன்னெடுப்பை வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியான எஸ்.எல் ஜெயின் தொடங்கி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். (IB-Sustainable Access and Aligning Technology for Holistic Inclusion (SAATHI) – இது வாடிக்கையாளர்களுக்கு அடிப்படை சேவைகள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட சலுகைகளை வழங்குவதன் மூலம் மேம்பட்ட பயனர் அனுபவத்தை வழங்குவதை நோக்கமாக கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகும்.

முக்கிய தினம்

உலக நோயாளி பாதுகாப்பு தினம் 2023

 • உலகளாவிய நோயாளிகளின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மருத்துவமனைகளில் நோயாளிகளின் பாதிப்பைக் குறைப்பதையும் அவர்களின் பாதுகாப்பைப் பற்றிய உலகளாவிய புரிதலை அதிகரிப்பதையும் நோக்கமாக கொண்டு ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 17ஆம் நாளானது “உலக நோயாளி பாதுகாப்பு தினமாக” கொண்டாடப்படுகிறது. 
 • இந்த நாளானது 2019 ஆம் ஆண்டு உலக சுகாதார அமைப்பால்(WHO) நிறுவப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். “Engaging patients for patient safety” என்பது இந்த ஆண்டிற்கான கருப்பொருளாகும்.

DOWNLOAD PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!