நடப்பு நிகழ்வுகள் – 17 ஆகஸ்ட் 2023

0
நடப்பு நிகழ்வுகள் - 17 ஆகஸ்ட் 2023
நடப்பு நிகழ்வுகள் - 17 ஆகஸ்ட் 2023
நடப்பு நிகழ்வுகள் – 17 ஆகஸ்ட் 2023

சர்வதேச செய்திகள்

இஸ்ரேலில் இந்திய-யூத கலாச்சார மதிப்புமிக்க சதுக்கம்(அரங்கம்) திறக்கப்பட்டுள்ளது.

  • இந்தியாவின் 77வது சுதந்திர தினத்தை போற்றும் மற்றும் கொண்டாடும் வகையில், இஸ்ரேல் நாட்டில் உள்ள ஈலாட் நகர பகுதியில் “இந்திய-யூத கலாச்சார சதுக்கம்” (அரங்கம்) ஆனது ஆகஸ்ட் 15 அன்று அந்நாட்டு அரசாங்கத்தால் திறக்கப்பட்டுள்ளது.
  • இந்த அமைப்பானது இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான மற்றும் நல்ல ராஜாங்க உறவுகளின் “நாகரீக பிணைப்புக்கு” அர்ப்பணிக்கப்பட்டதாகும். மேலும் இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான நட்பு, அன்பு, பரஸ்பர அக்கறை மற்றும் ஆழமான ராஜாங்க தொடர்பை அடையாளப்படுத்துவதை நோக்கமாக கொண்டு இது வடிவமைக்கப்பட்டுள்ளது என ஈலாட் நகர மேயர் எலி லங்க்ரி தெரிவித்துள்ளார்.

மாநில செய்திகள்

இளைஞர்கள் 20 உச்சி மாநாடானது வாரணாசியில் நடைபெற உள்ளது.

  • இளைஞர் விளையாட்டு மற்றும் விவகாரங்கள் அமைச்சகமானது 2023 ஆம் ஆண்டிற்கான “இளைஞர் 20” உச்சி மாநாட்டை ஆகஸ்ட் 17 இல் உத்தரபிரதேச மாநிலத்தின் வாரணாசியில் நடத்த திட்டமிட்டுள்ளது.
  • இந்த உச்சி மாநாடானது ஆகஸ்ட் 17 முதல் ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை நடைபெறக்கூடியதாகும். மேலும் இந்த மாநாடானது இந்த கருப்பொருள்கள் வேலையின் எதிர்காலம், 21 ஆம் நூற்றாண்டு திறன்கள், காலநிலை மாற்றம் மற்றும் பேரழிவு அபாயக் குறைப்பு, அமைதி கட்டமைத்தல் மற்றும் நல்லிணக்கம்: போர் இல்லாத சகாப்தத்தை உருவாக்குதல் மற்றும் தொழில் 4.0, புத்தாக்கம் ஆகிய முக்கிய இலக்குகள் மேம்பாடு குறித்து விவாதிப்பதை நோக்கமாக கொண்டு இந்த மாநாடானது நடைபெற உள்ளதாகும்.

மகளிா் கட்டணமில்லா பேருந்து பயண திட்டமானது ‘விடியல் பயணம்’ என்று அழைக்கப்படும்.

  • தமிழகத்தின் பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்துப் பயண திட்டமானது இனி ‘விடியல் பயணத் திட்டம்” என்று அழைக்கப்படும் என மாநில முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகஸ்ட் 2023 இல் அறிவித்துள்ளார்.
  • சுதந்திர தினத்தையொட்டி(ஆகஸ்ட் 15), சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் தேசியக் கொடி ஏற்றி வைத்த முதல்வர் அதன் பின், மகளிருக்கான பல்வேறு திட்டங்கள் தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன என்றும் அதில் பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்துப் பயண திட்டமானது இனி வரும் காலங்களில் “விடியல் பயணத் திட்டம்” என்று அழைக்கப்படும் என அறிவித்துள்ளார்.

மருத்துவ உதவி நிதிக்காக கைபேசி செயலி மற்றும் அவசர உதவி எண் ஆனது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

  • மகாராஷ்டிரா மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆகஸ்ட் 15 அன்று, முதல்வரின் மருத்துவ உதவி நிதிக்காக அவசர உதவி எண் மற்றும் கைபேசி செயலி ஆகியவற்றை அறிமுகப்படுத்தியுள்ளார்.
  • மேலும் இந்த நிகழ்ச்சியில், பாலாசாகேப் தாக்கரேவின் சித்தாந்தத்தின் அடிப்படையிலான ‘ரோக்தோக்’ புத்தகமும், மருத்துவ உதவிக் கையேட்டின் ஐந்தாவது பதிப்பும் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் கடந்த ஓராண்டில் 12 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட நோயாளிகள் முதலமைச்சரின் இந்த நிதி உதவி மூலம் பயனடைந்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

G20 டிஜிட்டல் பொருளாதார அமைச்சர்கள் மற்றும் டிஜிட்டல் பொருளாதார பணிக்குழு மாநாடானது பெங்களூருவில் நடைபெற்றுள்ளது.

  • G20 டிஜிட்டல் பொருளாதார அமைச்சர்கள் மற்றும் டிஜிட்டல் பொருளாதார பணிக்குழு மாநாடானது கர்நாடகாவின் பெங்களூருவில்  ஆகஸ்ட் 16 அன்று தொடங்கியுள்ளது.
  • இந்த மாநாட்டை மத்திய தகவல் தொழில்நுட்ப மற்றும் மின்னணு அமைச்சகத்தின் செயலாளர் அல்கேஷ் குமார் சர்மா திறந்து வைத்துள்ளார். மேலும் இந்த மாநாடானது ஆகஸ்ட் 16 முதல் ஆகஸ்ட் 19 வரை நடைபெற திட்டமிடப்பட்டுள்ளதாகும். “டிஜிட்டல் பொருளாதார முன்னேற்றம்” என்பதை கருப்பொருளாக கொன்டு இந்த மாநாடானது நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியமனங்கள்

எல்ஐசி அமைப்பின் நிர்வாக இயக்குனராக ஆர் துரைசாமி நியமனம்.

  • மத்திய(இந்தியா) ஆயுள் காப்பீட்டுக் கழக அமைப்பின்(LIC) நிர்வாக இயக்குநராக ஆர். துரைசாமி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தனது ஆகஸ்ட் மாத அறிவிப்பாணையில் குறிப்பிட்டுள்ளது.
  • இவர் மினி ஐப்பிற்குப் பதிலாக இப்பதவிக்கு பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் தற்போது மும்பையில் உள்ள மத்திய தலைமை அலுவலகத்தில் செயல் இயக்குநராக உள்ள இவர் செப்டம்பர் 1, 2023லிருந்து இந்த பொறுப்பை ஏற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரங்கல் செய்திகள்

சுலப் இன்டர்நேஷனல் அமைப்பின் நிறுவனர் பிந்தேஷ்வர் காலமானார்.

  • சமூக ஆர்வலர் மற்றும் சுலப் இன்டர்நேஷனல் அமைப்பின் நிறுவனர் பிந்தேஷ்வர் பதக்(வயது 80), மாரடைப்பு காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் ஆகஸ்ட் 15 அன்று காலமானார். 
  • இவர் 1970 ஆம் ஆண்டு சர்வதேச சமூக சேவை நிறுவனமான சுலப் இன்டர்நேஷனல் ஐ நிறுவினார். மேலும் “கையால் துப்புரவு செய்யும் பணிக்கு” எதிராக பரவலாக தனது முக்கிய முன்னெடுப்பு பிரச்சாரங்களை மேற்கொண்டார். இவருக்கு 1991 ஆம் ஆண்டு மதிப்புமிக்க “பத்ம பூஷன்” விருது வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

முக்கிய தினம்

இந்தோனேசியாவின் சுதந்திர தினம் 2023

  • உலகளவில் நான்காவது அதிக மக்கள்தொகை கொண்ட நாடான மற்றும் ஜப்பானிய மற்றும் டச்சுக்காரர்களின் ஆதிக்க மற்றும் ஆக்கிரமிப்பின் முனையில் சிக்கி கொண்டிருந்த நாடான இந்தோனேஷியா ஆகஸ்ட் 17, 1945 அன்று நாடு தனது சுதந்திரத்தை அறிவித்துள்ளது.
  • இது 17,000 க்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்டுள்ள ஒரு தீவு நாடாகும். இது ஓசியானியா, தென்கிழக்கு ஆசியாவில் பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல்களுக்கு இடையில் உள்ள ஒரு நாடு ஆகும்.

பார்சிக்களின் புத்தாண்டான “நவ்ரோஸ்” கொண்டாடப்படுகிறது.

  • இந்திய நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவியுள்ள முக்கிய இனமான “பார்சி சமூகத்தினர்” ஆகஸ்ட் 16 ஆம் நாளை பார்சி புத்தாண்டு அதாவது “பட்டேட்டியை” கொண்டாடுகின்றனர்.
  • பார்சிகள் என்பவர்கள் ஜொராஸ்ட்ரிய மதத்தை பின்பற்றும் இந்திய துணைக்கண்டத்தின் ஒரு இனமதக் குழுவாகும். அவர்கள் பாரசீக பிராந்திய சாம்ராஜ்யத்தில் இடைக்கால இந்தியாவிற்கு குடிபெயர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

DOWNLOAD PDF 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!