தமிழகத்தில் 1591 முதுகலை ஆசிரியர்களுக்கு 3 மாத ஊதியம் – அரசாணை வெளியீடு!

0
தமிழகத்தில் 1591 முதுகலை ஆசிரியர்களுக்கு 3 மாத ஊதியம் - அரசாணை வெளியீடு!
தமிழகத்தில் 1591 முதுகலை ஆசிரியர்களுக்கு 3 மாத ஊதியம் - அரசாணை வெளியீடு!
தமிழகத்தில் 1591 முதுகலை ஆசிரியர்களுக்கு 3 மாத ஊதியம் – அரசாணை வெளியீடு!

தமிழகத்தில் நேரடி மற்றும் பதவி உயர்வு மூலம் முதுகலை ஆசிரியர் பணி நியமனம் செய்யப்படுகிறது. அந்த வகையில் தற்போது 1591 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தற்போது 3 மாதத்திற்கு தற்காலிக நீட்டிப்பு ஊதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

ஊதிய அரசாணை:

தமிழகத்தில் பல்வேறு அரசுத் துறைகளின் கீழ் பெரும்பாலான அரசு ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அத்தகைய பணிகளில் ஒன்று தான் ஆசிரியர் பணி. பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு நடத்தப்பட்டு பணி நியமனம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நேரடி மற்றும் பதவி உயர்வு மூலம் வழங்கப்படுகிறது. மேலும் வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் சீனியாரிட்டி அடிப்படையிலும் சிலர் பணி நியமனம் செய்யப்படுவார்கள்.

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (நவ.23) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

இவ்வாறாக பணி நியமனம் செய்யப்படும் ஆசிரியர்கள் முதலில் தற்காலிக பணி நியமனம் மட்டுமே செய்யப்படுவார்கள். பின்னர் தான் பணி வரன்முறை செய்யப்படுவார்கள். அந்த வகையில் கடந்த 2012ம் ஆண்டு சீனியரிட்டி அடிப்படையில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளன. அவர்களுக்கு பணி வரன்முறை செய்யப்பட்ட அரசுப் பணியாக இருந்தாலும் கூட ஒவ்வொரு மூன்று மாதம் அல்லது ஐந்து மாதங்களுக்கு ஒருமுறை ஊதிய அரசாணை வெளியிடப்படும்.

தமிழகம் – கேரளா இடையேயான 86 ரயில்களில் கட்டணம் குறைப்பு | பயணிகள் மகிழ்ச்சி!

அதாவது முதுநிலைப் பட்டதாரி பணியிடங்களில் வேளாண் பயிற்றுனர், தட்டச்சு பயிற்றுனர், கணினி பயிற்றுனர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு இந்த பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. அவர்களுக்கு பணி நியமனம் செய்யப்பட்ட நாள் முதலே தொடர் ஊதிய நீட்டிப்பு அரசாணை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது 1591 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு இந்த நவம்பர் மாதம் முதல் மூன்று மாதங்களுக்கு ஊதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here